டைபுளோரோபாசுப்பாரிக் அமிலம்

டைபுளோரோபாசுப்பாரிக் அமிலம் (Difluorophosphoric acid) என்பது HPO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். இந்த அமிலம் குறைவான பயன்பாடுகளைக் கொண்டது ஆகும். ஏனெனில் இது வெப்பவியலாகவும் நீராற்பகுப்பு வழியாகவும் நிலைப்புத்தன்மை அற்றது ஆகும் [1].

டைபுளோரோபாசுப்பாரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபுளோரோபாசுப்பாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
13779-41-4
EC number 237-421-6
InChI
  • InChI=1S/F2HO2P/c1-5(2,3)4/h(H,3,4)
    Key: DGTVXEHQMSJRPE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61681
  • OP(=O)(F)F
UN number 1768
பண்புகள்
F2HO2P
வாய்ப்பாட்டு எடை 101.98 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.583 கி/மி.லி
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பாசுப்பரசு ஆக்சிபுளோரைடை நீராற்பகுப்பு செய்து இதைத் தயாரிக்கலாம்.

POF3 + H2O → HPO2F2 + HF.

மேலும் இதை நீராற்பகுக்கும் போது மோனோபுளோரோபாசுப்பாரிக் அமிலம் உருவாகிறது.

HPO2F2 + H2O → H2PO3F + HF

முழுமையான நீராற்பகுப்பினால் பாசுப்பாரிக் அமிலம் கிடைக்கிறது.

H2PO3F + H2O → H3PO4 + HF

டைபுளோரோபாசுப்பாரிக் அமிலத்தினுடைய உப்புகள் டைபுளோரோபாசுப்பேட்டுகள் எனப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fluorine Compounds, Inorganic, Phosphorus". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. (2000). DOI:10.1002/0471238961.1608151912091404.a01.