டைபுளோரோ அசிட்டிக் அமிலம்
ஈராலசன்கார்பாக்சிலிக் அமிலம்
டைபுளோரோ அசிட்டிக் அமிலம் (Difluoroacetic acid) என்பது CHF2COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஈராலசன்கார்பாக்சிலிக் அமிலமாகும். அதிலும் குறிப்பாக அசிட்டிக் அமிலத்தின் கட்டமைப்புடன் ஒத்த கட்டமைப்பு கொண்ட சேர்மமாகும். இக்கட்டமைப்பில் ஆல்பா கார்பன் மீதுள்ள இரண்டு அல்லது மூன்று ஐதரசன் அணுக்கள் புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். கரைசலாக இருக்கும்போது இச்சேர்மம் டைபுளோரோ அசிட்டேட்டு அயனிகளாக பிரிகை அடைகிறது. டைபுளோரோ அசிட்டிக் அமிலத்தை நேரடி C-H டைபுளோமெத்திலேற்றும் முகவராகப் பயன்படுத்த இயலும்[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2-டைபுளோரோ அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
381-73-7 | |
ChemSpider | 10200426 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9788 |
| |
பண்புகள் | |
C2H2F2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 96.03 g·mol−1 |
அடர்த்தி | 1.526 கி/மி.லி[1] |
உருகுநிலை | −1 °C (30 °F; 272 K)[1] |
கொதிநிலை | 132–134 °C (270–273 °F; 405–407 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |