டைபென்சோபியூரான்
டைபென்சோபியூரான் அல்லது இருபென்சோபியூரான் (Dibenzofuran) என்பது ஒரு பல்லினவளைய கரிமச்சேர்மம் ஆகும். அரோமாட்டிக் வகை சேர்மமான டைபென்சோபியூரானின் கட்டமைப்பு அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பில் நடுவிலுள்ள பியூரான் வளையத்துடன் இரண்டு பென்சீன் வளையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எண்ணிடப்பட்டுள்ள அனைத்து கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றுடனும் ஐதரசன் அணுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன. (படத்தில் காட்டப்படவில்லை). எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மமான டைபென்சோபியூரான் வெண்மை நிறத்துடன் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடிய சேர்மமாக உள்ளது. கரித்தாரில் இருந்து பெறப்படும் இச்சேர்மம், அதில் 1 சதவீதம் அளவில் பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது[1].
இனங்காட்டிகள் | |
---|---|
132-64-9 | |
ChEBI | CHEBI:28145 |
ChEMBL | ChEMBL277497 |
ChemSpider | 551 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C07729 |
பப்கெம் | 568 |
| |
பண்புகள் | |
C12H8O | |
வாய்ப்பாட்டு எடை | 168.19 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகத்தூள் |
உருகுநிலை | 81 முதல் 85 °C (178 முதல் 185 °F; 354 முதல் 358 K) |
கொதிநிலை | 285 °C (545 °F; 558 K) |
கரையாது | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R51/53 |
S-சொற்றொடர்கள் | S24/25 S29 S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுவெப்பவியல் சார்ந்த ஒரு வலிமையான திரவ வரம்பை டைபென்சோபியூரான் சேர்மம் கொண்டுள்ளது. இச்சிறப்புத் திரவப்பண்பும் குறைந்த நச்சுத்தன்மையும் பென்சோபியூரானை ஒரு வெப்ப பரிமாற்ற முகவராகப் பயன்படுத்த வழிநடத்துகின்றன[1]. ஆலசனேற்றம், பிரீடல் கிராப்ட்டு வினைகள் போன்ற எலக்ட்ரான் கவர் வினைகளில் டைபென்சோபியூரான் பங்கேற்கிறது. பியூட்டைல் இலித்தியத்துடன் டைபென்சோபியூரான் வினைபுரிந்து ஈரிலித்தியமேற்றம் அடைகிறது. [2] பிரீடல் கிராப்டு வினையில் சக்சினிக் நீரிலியுடன் வினைபுரிந்து பியூரோபென் என்ற மருந்தை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக டைபென்சோபியூரான் விளங்குகிறது.
முன்பாதுகாப்பு
தொகு0.025 – 0.4% அளவு டைபென்சோபியூரான் கலக்கப்பட்ட உணவை எலிகளுக்கு 200 நாட்களுக்கு வழங்கி சோதனைக்கு உட்படுத்தியதில் எலிகள் எந்த பாதிப்பும் அடையவில்லை என்று அறியப்பட்டது [1]. எனவே இது நச்சுத்தன்மையற்ற ஒரு வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் பலகுளோரினேற்ற டைபென்சோபியூரான்கள் அபாயகரமான பொருட்களாகக் கருதப்படும் விவாதத்துக்கு உள்ளாகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Gerd Collin and Hartmut Höke "Benzofurans" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2007, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.l03_l01
- ↑ Ulrich Iserloh, Yoji Oderaotoshi, Shuji Kanemasa, and Dennis P. Curran "Synthesis of (R,R)-4,6-Dibenzofurandiyl-2,2'-Bis (4-Phenyloxazoline) (DBFOX/PH) – A Novel Trridentate Ligand" Org. Synth. 2003, volume 80, 46. எஆசு:10.15227/orgsyn.080.0046