டைமெத்திலீன் டிரையூரியா

வேதிச் சேர்மம்

டைமெத்திலீன் டிரையூரியா (Dimethylene triurea) C5H12N6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (H2NC(O)NHCH2NH)2CO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இச்சேர்மத்தை அடையாளப்படுத்தலாம். வெள்ளை நிறத்துடன் நீரில் கரையக்கூடிய திண்மப்பொருளாக இது காணப்படுகிறது. யூரியாவுடன் பார்மால்டிகைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் டைமெத்திலீன் டிரையூரியா உருவாகிறது. இச்சேர்மத்திற்கு கிளைத்த மற்றும் நேரியல் மாற்றியங்கள் இரண்டும் உள்ளன.

டைமெத்திலீன் டிரையூரியா
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
5-ஆக்சா-2,4,6,8-டெட்ரா அசானோனேன்-1,9-டையமைடு
வேறு பெயர்கள்
மெத்திலீன்பிசு(யூரியா), 5-ஆக்சோ-2,4,6,8-டெட்ரா அசானோனேன் டையமைடு, 1,3-பிசு[(கார்பமோயிலமினோ)மெத்தில்]யூரியா
இனங்காட்டிகள்
15499-91-9
ChEBI CHEBI:4621
ChemSpider 389825
EC number 604-987-4
InChI
  • InChI=1S/C5H12N6O3/c6-3(12)8-1-10-5(14)11-2-9-4(7)13/h1-2H2,(H3,6,8,12)(H3,7,9,13)(H2,10,11,14)
    Key: OKNSZPQWMKXIEO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06385
பப்கெம் 441000
  • C(NC(=O)N)NC(=O)NCNC(=O)N
பண்புகள்
C5H12N6O3
வாய்ப்பாட்டு எடை 204.19 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்பாடுகள்

தொகு

யூரியா-பார்மால்டிகைடு பிசின்கள் உற்பத்தியில் டைமெத்திலீன் டிரையூரியா ஒர் இடைநிலை வேதிப்பொருளாகும்.[1]

மெத்திலீன் டையூரியாவுடன், டைமெத்திலீன் டிரையூரியா சில கட்டுப்படுத்தப்பட்ட உரங்களின் ஓர் அங்கமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Steinhof, Oliver; Kibrik, Éléonore J.; Scherr, Günter; Hasse, Hans (2014). "Quantitative and qualitative1H, 13C, and15N NMR spectroscopic investigation of the urea-formaldehyde resin synthesis". Magnetic Resonance in Chemistry 52 (4): 138–162. doi:10.1002/mrc.4044. பப்மெட்:24496721. 
  2. Dittmar, Heinrich; Drach, Manfred; Vosskamp, Ralf; Trenkel, Martin E.; Gutser, Reinhold; Steffens, Günter (2005), "Fertilizers, 2. Types", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.n10_n01