டையசால்டு
ஒரு வகை நைதரசன் சேர்மம்
டையசால்டு (Diazald) என்ற வர்த்தகப் பெயர் கொண்ட என்–மெத்தில்-என் – நைத்திரசோ-பி-தொலுயீன்சல்போனமைடு( N-Methyl-N-nitroso-p-toluenesulfonamide) ஒரு நைட்ரசன் சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு C8H10N2O3S ஆகும். நச்சுத்தன்மை மிக்கதும், நிலைப்புத்தன்மை அற்றதுமான[2] ஈரசோமெத்தேனை, தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் உள்ளது. இச்செயல்முறையை மேற்கொள்வதற்கு எளிதிலும் பாதுகாப்பாகவும் கையாள்வதற்கு உற்ற சேர்மமாக டையசால்டு கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
என்–மெத்தில்-என் – நைத்திரசோ-பி-தொலுயீன்சல்போனமைடு
| |
வேறு பெயர்கள்
டையசால்டு, என்–மெத்தில்-என் – நைத்திரசோ-4-மெத்தில்பென்சீன்சல்போனமைடு
| |
இனங்காட்டிகள் | |
80-11-5 | |
ChemSpider | 6376 |
EC number | 201-252-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C418734 |
பப்கெம் | 6628 |
| |
பண்புகள் | |
C8H10N2O3S | |
வாய்ப்பாட்டு எடை | 214.24 கி மோல்−1 |
தோற்றம் | இளமஞ்சள் திண்மம் |
உருகுநிலை | 61–62 °C (142–144 °F; 334–335 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | skin sensitiser, irritant, explosive[1] |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் ஐதராக்சைடு அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற ஒரு காரத்தை இதனுடன் சேர்க்கும்பொழுது ஒரு நீக்க வினை தோன்றுகிறது. இவ்வினையில் ஈரசோமெத்தேனும் உடன் விளைபொருளாக பாரா தொலுயீன்சல்போனிக் அமிலமும் உருவாகின்றன. இவ்வினைக்கான வினைவழி முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வினைவழி முறை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ External MSDS, Sigma Aldrich
- ↑ Diazald in Chemical Synthesis, Sigma Aldrich