டோனா கங்குலி

நடனக் கலைஞர்

டோனா கங்குலி ( Dona Ganguly ) ஒரு இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். [1] [2] குரு கேளுச்சரண மகோபாத்ராவிடமிருந்து நடனப் பாடங்களை பயிற்சி எடுத்தார். இவர் "தீக்சா மஞ்சரி" என்ற ஒரு நடனக் குழுவினை நிறுவினார். 1997 ஆம் ஆண்டில் இவர் தனது குழந்தை பருவ நண்பரும், இந்திய துடுப்பாட்ட வீரரும் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியைத் திருமணம் செய்து கொண்டார். சவுரவ் தற்போது இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். [3] [4] இந்த தம்பதியினருக்கு சனா (2001 இல் பிறந்தார்) என்ற மகள் உள்ளார்.

டோனா கங்குலி
பிறப்பு22 ஆகத்து 1976 (அகவை 47)
Behala
படித்த இடங்கள்
வாழ்க்கைத்
துணை/கள்
சௌரவ் கங்குலி
இணையம்http://www.donaganguly.com

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

டோனா கங்குலி 1976 ஆகஸ்ட் 22 அன்று கொல்கத்தாவின் பெஹாலாவில் ஒரு வசதியான வணிக குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சஞ்சீவ் ராய் (தந்தை) மற்றும் சுவப்னா ராய் (தாய்)ஆகியோர். இவர் லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் தனது கல்வியினை முடித்தார் . [1]

ஆரம்பத்தில் இவர்களது குடும்பங்கள் திருமணத்தை எதிர்த்தது. பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் திருமணத்தை ஏற்றுக்கொண்டன. முறையான திருமணம் பிப்ரவரி 1997 இல் நடந்தது. [5] [6] தம்பதியருக்கு சனா கங்குலி என்ற மகள் உள்ளார். [1]

நடன வாழ்க்கை தொகு

டோனா கங்குலி தனக்கு 3 வயதாக இருந்தபோது அமலா சங்கர் என்பவரிடமிருந்து நடனத்தைக் கற்கத் தொடங்கினார். பின்னர் இவர் குரு கிரிதாரி நாயக்கின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசிக்கு மாறினார். கேளுச்சரண மகோபாத்ராவைச் சந்தித்து அவரிடமிருந்து நடன பாடங்களை கற்கத் தொடங்கியபோது தனது நடன வாழ்க்கையில் மிக முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டதாக டோனா கருதுகிறார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், வெவ்வேறு நிகழ்ச்சிகளில், மகோபாத்ராவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [7]

தீக்சா மஞ்சரி தொகு

டோனா கங்குலிக்கு தீக்சா மஞ்சரி என்ற நடனப் பள்ளி உள்ளது. இந்த நிறுவனத்தை லதா மங்கேஷ்கர் திறந்து வைத்தார். இது 2000க்கும் மேற்பட்ட மாணவர்களின் திறனைக் கொண்டுள்ளது. நடனம் தவிர, இந்த நிறுவனத்தில் யோகா, வரைதல், கராத்தே மற்றும் நீச்சல் போன்ற கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. [8]

2012 அக்டோபரில், டோனா கங்குலி ரவீந்திரநாத் தாகூரின் சாப்மோச்சன் என்ற படைப்பைக் கொண்டு நடனமாடினார். அதை இவர் ஒரு ஆடம்பரமான நடன நாடகம் என்று அழைத்தார். [9]

நிகழ்ச்சிகள் தொகு

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முக்கிய திருவிழாக்களில் டோனா வெற்றிகரமாக நடன நிகழ்சிகளை நிகழ்த்தயுள்ளார். 1995 சூன் 30 முதல் சூலை 02 வரை நியூயார்க்கில் நடந்த 15 வது வட அமெரிக்க பெங்காலி மாநாட்டில் நடனத்தை நிகழ்த்த இவர் அழைக்கப்பட்டார். அங்கு அவரது நடனம்10,000 பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் நடந்த வட அமெரிக்க பெங்காலி மாநாட்டிலும், 2007இல் டெட்ராய்டில் நடைபெற்ற 27 வது பெங்காலி மாநாட்டிலும் பங்கேற்க இவர் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடாவில் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்

2000ஆம் ஆண்டு கோடையில் இலண்டனில் ஓரிரு நிகழ்ச்சியும், அலெக்ஸாண்டர் அரண்மனையின் தொடக்க விழாவிலும் மற்றும் எசுகாட்லாந்தின் ஈஸ்ட்வுட் நாடக அரங்கிலும் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சீனாவில் நடைபெற்ற உலக எக்ஸ்போ 2010இல் கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பால் இவர் அனுப்பப்பட்டார். கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பால் ஏற்பாடு செய்திருந்த தனது குழுவுடன் சிங்கப்பூர் டாக்கா & ஜெசோர் போன்ற இடங்களில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். எகிப்தின் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, போன்ற இடங்கலில் நடந்த 'இந்தியா பை நைல் திருவிழா'விலும் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [10]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Ode to Odissi". The Tribune. 10 July 2011. http://www.tribuneindia.com/2011/20110710/spectrum/book8.htm. பார்த்த நாள்: 24 August 2012. 
  2. "Danseuse Dona Ganguly and troupe pays tribute to Tagore". Times of India. 4 July 2012 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104045205/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-04/music-events/32535946_1_odisha-odissi-rabindranath-tagore. பார்த்த நாள்: 24 August 2012. 
  3. "Sourav Ganguly to be formally elected as CAB President on 15 October". 7 October 2015. https://www.firstpost.com/sports/sourav-ganguly-to-be-formally-elected-as-cab-president-on-15-october-2458644.html. பார்த்த நாள்: 21 February 2019. 
  4. "I'm proud to be Sourav's wife: Dona Ganguly". Times of India. 26 April 2011. http://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/tale-spin/Im-proud-to-be-Souravs-wife-Dona-Ganguly/articleshow/12873002.cms. பார்த்த நாள்: 24 August 2012. 
  5. "Saurav and Donna happy at last". Times of India. 29 May 2001. http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/Saurav-and-Donna-happy-at-last/articleshow/650212913.cms. பார்த்த நாள்: 24 August 2012. 
  6. "Top five Indian cricket weddings". Times of India. 5 July 2010 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140125074425/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-05/india/28312821_1_sania-and-shoaib-sohrab-mirza-shoaib-malik. பார்த்த நாள்: 24 August 2012. 
  7. "Dona Ganguly career". Dona Ganguly website. Archived from the original on 26 June 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  8. "Disha Manjari website". Dona Gangul website. Archived from the original on 23 February 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  9. "Classical dance is eternal: Dona Ganguly". Times of India. 9 October 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/bengali/news-interviews/Classical-dance-is-eternal-Dona-Ganguly/articleshow/16736036.cms. பார்த்த நாள்: 9 October 2012. 
  10. http://www.donaganguly.com/prticipation.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனா_கங்குலி&oldid=3214818" இலிருந்து மீள்விக்கப்பட்டது