தக்காண விசிறித்தொண்டை ஓணான்

தக்காண விசிறித்தொண்டை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சா. தெக்கான்சிசு
இருசொற் பெயரீடு
சாரதா தெக்கான்சிசு
(செருடன், 1870)

தக்காண விசிறித்தொண்டை ஓணான் (Sarada deccanensis-சாரதா தெக்கான்சிசு) என்பது அகாமிடே (ஓந்தி) குடும்ப பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

விளக்கம்

தொகு

தக்காண விசிறித்தொண்டை ஓணானது தெற்காசியாவில் காணப்படும் ஒரு சிறிய அளவிலான ஓணான் ஆகும். பேரினம் சாரதா என்பது இந்தியாவில் உள்ள சீதானா பேரினத்தின் ஒரு சகோதரக் குழுவாகும். இதனுடைய செதில்களின் அளவு, வடிவங்கள், எலும்பு அமைப்பு மற்றும் பிற வெளிப்புற அம்சங்களை ஆய்வு செய்த பின்னர் ஆராய்ச்சியாளர்களால் இப்பேரினம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்றினத்தின் ஆண் இனச்சேர்க்கை காலத்தில் பிரகாசமான வண்ண அலைதாடியினை வெளிப்படுத்துகிறது. ஆண்கள் பெரும்பாலும் வெப்பமான கோடை மாதங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படும். தற்போது, இந்தியாவில் விவரிக்கப்பட்ட சாரதா பேரினத்தைச் சேர்ந்த 3 வெவ்வேறு வகையான விசிறித்தொண்டை ஓணான்கள் உள்ளன. இவற்றில், சாரதா தெக்கனென்சிசு உட்பட, சாரதா சூப்பர்பா மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Giri, V.; Srinivasulu, C.; Narayanan, S. (2021). "Sarada deccanensis". IUCN Red List of Threatened Species 2021: e.T127934829A127934985. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127934829A127934985.en. https://www.iucnredlist.org/species/127934829/127934985. பார்த்த நாள்: 10 June 2024.