தக்கிரி எழுத்துமுறை

The தக்கிரி எழுத்துமுறை (Takri: 𑚔𑚭𑚊𑚤𑚯; தேவநாகரி: टाकरी; குருமுகி: ਟਾਕਰੀ; சிலநேரம் தங்கிரி என்றழைக்கப்படும் 𑚔𑚭𑚫𑚊𑚤𑚯) ஓர் அபுகிடா எழுத்துமுறை. இது பிராமி குடும்ப எழுத்துமுறையின் ஒரு கிளை. இந்த எழுத்துமுறை சாரதா எழுத்துமுறைக்கு நெருக்கமானதும் அதனுடன் தொடர்புடையதும் ஆகும். இந்த எழுத்து முறை முன்னர் காசுமீரி மொழியை எழுதவும் பயன்படுத்தப்பட்டது. இந்த தக்கிரி எழுத்து முறை பஞ்சாபி மொழியை எழுதும் குருமுகி எழுத்துமுறைக்கும் தொடர்புடைய ஒரு முறை. 1940-களின் பிற்பகுதிவரை இதிலிருந்து பெறப்பட்ட சற்று மாற்றப்பட்ட தோகிரி எழுத்துமுறையே சம்மு-காசுமீர கொற்றத்தின் (அரசர் ஆளும் நாட்டின்) எழுத்துமுறையாகவும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரி, சம்பயாலி, மந்தேலி ஆகிய மொழிகளுக்கும் எழுத்துமுறையாக இருந்தது.

தக்கிரி
𑚔𑚭𑚊𑚤𑚯
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
16 ஆவது நூற்றாண்டு முதல் இப்பொழுதுவரை
திசைLeft-to-right Edit on Wikidata
பிராந்தியம்இந்தியா, பாக்கித்தான்
மொழிகள்தோகிரி, காங்கிரி, சிருமௌரி, சம்பயாலி, கலூரி, மந்தேலி, சாவூன்சரி, கார்வாலி, குல்லுயி, பாட்டியாலி, சுராகி, கிசுத்துவாரி, கியட்டி, சராச்சி, மகசூயி, பாஃகரி-போத்துவாரி, மீர்ப்பூரி, பூஞ்சி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தோற்றுவித்த முறைகள்
தோகரி அக்கார்
நெருக்கமான முறைகள்
குருமுகி
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Takr (321), ​Takri, Ṭākrī, Ṭāṅkrī
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Takri
U+11680–U+116CF
[a] பிராமி எழுத்துகள் செமித்திய எழுத்துகளில் இருந்து பெற்றவை என்பற்குப் பொதுவான ஏற்பில்லை.
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
தக்கிரி மொழியைத் தக்கிரி எழுத்து முறையில் எழுதியது.

வரலாறு

தொகு

தக்கிரி எழுத்துமுறையானது சாரதா எழுத்து முறையின் தேவசேசா எழுதுமுறை நிலைவழியாக பொ.ஊ 14-18 ஆவது நூற்றாண்டுகளில் வளர்த்தெடுக்க்கப்பட்ட ஓர் எழுத்துமுறை[1]. இது பெரும்பாலும் சம்பா உத்தரகாண்டம் போன்ற பஞ்சாப மலைப்பகுதிகளிலும் [2] சுற்றியுள்ள சம்பயாலி பகுதியிலும், சம்மு பகுதிகளிலும் (அங்கு தோகிரி என்றழைக்கப்பட்டது) பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப மலைப்பகுதிகளில் இது ஏற்புப்பெற்ற எழுத்துமுறையாகக் கொள்ளப்பட்டது. 19-ஆவது நூற்றாண்டுவரை இதனை நிருவாக ஆட்சிக்கும் இலக்கியத்துக்கும் பயன்படுத்தினர்[1]. 1948 உக்குப் பிறகு இமாச்சலப் பிரதேசம் உருவான பிறகு நிருவாக ஆட்சிப்பயன்பாடுகளுக்கு தக்கிரியை நீக்கி தேவநாகரி எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது.

மீளுயுர்ப்பிப்பு இயக்கம்

தொகு

தக்கிரி பயன்பாட்டுநிலையை இழந்த பிறகு,[3] அவ்வப்பொழுது இந்த எழுத்துமுறையை முளுயிர்ப்பிக்க இமாச்ச்சலப் பிரதேசத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இமாச்சலியர்களுக்கு இந்த எழுத்துமுறையைக் கற்பிக்க முயற்சிகள் நடக்கின்றன[4].

தக்கிரி எழுத்துமுறை திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டன. இமாச்சலி கிளைமொழியாகிய மேற்கு பாஃகரியில் இயக்குநர் அச்சய் சக்கலானி உருவாக்கிய சாஞ்சு என்ற திரைப்படம் 2017 இல் வெளியாகியது. இதில் ஆக்கங்களைச் செய்தவர்கள் பட்டியலைக் காட்டும்பொழுது தக்கிரிஎழுத்துமுறையில் எழுதிக் காட்டினார்கள்[5] and Kullu, Kangra and Shimla.[6] An organization named Sambh (Devanagari: सांभ​) based at Dharamshala has decided to develop fonts for this script.[7][8]

இமாச்சலப் பிரதேச அரசு யோசனா என அழைக்கப்பெறும் தேசிய கைப்படிகள் (manuscript)திரட்டும் திட்டத்தின் கீழ் 1,26,000 கைப்படிகளைத் திரட்டி வைத்துள்ளார்கள். அதில் தக்கிரி கைப்படிகளும் உள்ளன. இதன் பட்டியல் எண்ணிமம்மாக்கப்படவுள்ளன [9]

ஒருங்குறி

தொகு

சனவரி 2012 இல் ஒருங்குறி (யூனிக்கோடு) தன்னுடைய பதிப்பு 6.1 இல் தக்கிரி எழுத்துமுறையைச் சேர்த்துள்ளது. இது அமெரிக்காவின் வாழ்வியல் கலைத்துறையின் தேசிய வைப்புநிதித் திட்டத்தின் ஒரு கூறாக வழங்கப்பட்ட உதவித்தொகையின் வழியாக கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவியால் இந்த எழுத்துமுறை சேர்க்கப்பட்டது.

எழுத்துகள் அடங்கிய பகுதி

தொகு
Takri
RangeU+11680..U+116CF
(80 code points)
PlaneSMP
ScriptsTakri
Major alphabetsChambeali
Dogri
Assigned66 code points
Unused14 reserved code points
Unicode version history
6.166 (+66)
Note: [10][11]

The Unicode block for Takri is U+11680–U+116CF:

வார்ப்புரு:Unicode chart Takri ஒருங்குறி ஆவணங்களில் தக்கிரி எழுத்துகள் அடங்கிய அட்டவணைப் பகுதி:

Version Final code points[a] Count L2 ID WG2 ID Document
6.1 U+11680..116B7, 116C0..116C9 66 L2/07-419 Pandey, Anshuman (2007-12-14), Proposal to Encode the Takri Script in ISO/IEC 10646
L2/09-111 Pandey, Anshuman (2009-04-06), Proposal to Encode the Takri Script in ISO/IEC 10646
L2/09-424 N3758 Pandey, Anshuman (2009-12-31), Proposal to Encode the Takri Script in ISO/IEC 10646
L2/10-015R Moore, Lisa (2010-02-09), "C.9", UTC #122 / L2 #219 Minutes
N3803 (pdf, doc) "M56.09", Unconfirmed minutes of WG 2 meeting no. 56, 2010-09-24
12.0 U+116B8 1 L2/17-279 N4866 Sharma, Shriramana (2017-08-01), Proposal to encode 116B8 TAKRI LETTER ARCHAIC KHA
L2/17-255 Anderson, Deborah; Whistler, Ken; Pournader, Roozbeh; Moore, Lisa; Liang, Hai (2017-07-28), "9. Takri", Recommendations to UTC #152 July-August 2017 on Script Proposals
L2/17-222 Moore, Lisa (2017-08-11), "D.12.3", UTC #152 Minutes
N4953 (pdf, doc) "M66.16f", Unconfirmed minutes of WG 2 meeting 66, 2018-03-23
  1. Proposed code points and characters names may differ from final code points and names

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 Pandey, Anshuman (2009-03-25). "N3545: Proposal to Encode the Sharada Script in ISO/IEC 10646" (PDF). Working Group Document, ISO/IEC JTC1/SC2/WG2.
  2. https://www.ias.ac.in/article/fulltext/sadh/045/0146
  3. "Tankri once the language of royals, is now dying in Himachal Pradesh - Hindustan times". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-25.
  4. "Ancient scripts of Indian Mountains fights for survival - Zee News". பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.
  5. "Takri workshop at Chamba". https://www.tribuneindia.com/news/himachaltribune/reviving-takri-script-of-the-yore-37869. 
  6. "Workshop at Shimla".{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Takri workshop at Kullu, Kangra and Saambh". https://www.hindustantimes.com/punjab/ancient-delight-heritage-enthusiasts-develop-fonts-for-fading-takri-script/story-2wyd1I4EMraq3C1NNSeeaP.html. 
  8. "Sambh Youtube Channel".{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "Catalouging of Scripts". https://timesofindia.indiatimes.com/city/shimla/Himachal-makes-efforts-to-save-its-cultural-heritage/articleshow/53794457.cms. 
  10. "Unicode character database". The Unicode Standard. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
  11. "Enumerated Versions of The Unicode Standard". The Unicode Standard. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கிரி_எழுத்துமுறை&oldid=3931233" இலிருந்து மீள்விக்கப்பட்டது