தங்கச் சிலம்பன்

தங்கச் சிலம்பன்
திங்திபி (பூட்டான்) அருகில்.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திம்மாலிடே
பேரினம்:
சயனோடெர்மா
இனம்:
ச. கிரிசேயம்
இருசொற் பெயரீடு
சயனோடெர்மா கிரிசேயம்
(பிளைத், 1844)

தங்கச் சிலம்பன் (Golden babbler)(சயனோடெர்மா கிரிசேயம்) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிலம்பன் சிற்றினமாகும் . இது கிழக்கு இமயமலையின் அடிவாரத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை காணப்படுகிறது. மிதவெப்பமண்டல தாழ் நில மற்றும் மலைக் காடுகளில் வாழ்கிறது. இதன் பொதுவான பரவல் காரணமாக இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

இது ஆலிவ்-பச்சை இறக்கைகள் மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதி குறுகிய கோடுகளுடன் தங்க மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது 19–12 cm (7.5–4.7 அங்) நீளமும் 6–10 g (0.21–0.35 oz) எடையும் உடையது.[2]

இசுடகரிசு கிரைசேயா என்பது 1844ல் எட்வர்ட் பிளைத் முன்மொழிந்த அறிவியல் பெயர். இவர் நேபாளத்தில் மஞ்சள் தலை சிலம்பனை விவரித்தார்.[3] 2016 முதல் இது சயனோடெர்மா பேரினத்தின் சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cyanoderma chrysaeum". IUCN Red List of Threatened Species 2016: e.T22716193A94484067. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716193A94484067.en. https://www.iucnredlist.org/species/22716193/94484067. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. 2.0 2.1 Collar, N. J.; Robson, C. (2016). "Golden Babbler (Cyanoderma chrysaeum)". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D. A.; de Juana, E. (eds.). Handbook of the Birds of the World. Vol. 2: Passerines. Barcelona: Lynx Edicions.
  3. Blyth, E. (1844). "Appendix for Mr. Blyth's report for December Meeting 1842". The Journal of the Asiatic Society of Bengal 13 (149): 361–395. https://archive.org/details/journalofasiatic131asia/page/379. 
  4. Moyle, R. G.; Andersen, M. J.; Oliveros, C. H.; Steinheimer, F. D.; Reddy, S. (2012). "Phylogeny and Biogeography of the Core Babblers (Aves: Timaliidae)". Systematic Biology 61 (4): 631–651. doi:10.1093/sysbio/sys027. பப்மெட்:22328569. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்_சிலம்பன்&oldid=3895653" இலிருந்து மீள்விக்கப்பட்டது