தங்கஜம் மனோரமா
தங்கஜம் மனோரமா (Thangjam Manorama, 1971-2004) என்பவர் இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த 32 வயதான பெண்மணி ஆவார். இவர் 11 சூலை 2004 அன்று இந்திய துணைப் படைப் பிரிவான 17வது அசாம் ரைபிள் வீரர்களால் கொல்லப்பட்டார். அவரது வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு, மோசமாக சிதைக்கப்பட்ட இவரது பிணம் கிடந்தது. இதற்கு முந்தைய நாள் இரவுதான் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பலமுறை சுடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருந்தார். இந்நிகழ்வில் அசாம் ரைபிள்சுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதிகாரப்பூர்வ பதிப்பில் வேறுபாடுகள்
தொகுமனோரமா கைது செய்யப்பட்ட நேரத்தில், கைதுக் குறிப்பேட்டின்படி, குற்றவியல் சம்மந்தப்பட்ட பொருட்கள் எதுவும் அங்கே கிடைக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவரது வீட்டில் இருந்து கையைறிகுண்டும், பிற பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. [1]
தப்பிச் செல்ல முயன்றபோது அவரைச் சுடப்பட்டதாக அசாம் ரைபிள்ஸ் கூறியது. உடலில் ஆறு ஆறு குண்டு காயங்கள் இருந்தபோதிலும், உடலுக்கு அருகில் இரத்தம் இல்லை. எந்த இராணுவ வீரரும் அவரை துரத்தி வந்ததாகவோ அல்லது பிடிக்க முயன்றதாகவோ எந்த தடையமும் காணப்படவில்லை. [2]
முன்னுக்குப் பின் முரணான இந்த விசயங்களைக் கருத்தில் கொண்டு, மணிப்பூர் அரசால் 2004 இல் ஒரு விசாரணைக் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை 2004 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், கவுகாத்தி உயர் நீதிமன்றமும் இந்த விசயத்தை ஆராய்ந்து, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958-இன் கீழ் அசாம் ரைபிள்ஸ் செயல்படுவதால், மாநில அரசு அவர்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது, மேலும் இந்த வழக்கை ஒன்றிய அரசே கையாள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. எனவே, இந்தத் தீர்ப்புக்கு உட்பட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை. [2]
ஆ.ப.சி.அ.சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள்
தொகுபாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்காதலால் மணிப்பூரிலும், தில்லியிலும் பரவலாக நீண்ட போராட்டங்கள் தோன்றின. [3]
கொலை நடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, சுமார் 30 நடுத்தர வயதுப் பெண்மணிகள் இம்பால் வழியாக அசாம் ரைப்பிள்ஸ் தலைமையகம் நோக்கி நிர்வாணமாக நடந்து சென்றனர். அவர்கள் "எங்களையும் பாலியல் வல்லுறைவு செய் இந்திய இராணுவமே... நாங்கள் அனைவரும் மனோரமாவின் தாய்மார்கள்." என்ற பதாகையை ஏந்தி இருந்தனர். [4] [5] அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்மசிறீ விருது பெற்ற எழுத்தாளர் எம். கே. பினோதினி தேவி தனது விருதை திருப்பி அளித்தார். [6] 2004 ஆம் ஆண்டிலும் அதன் பிறகு பல ஆண்டுகள் போராட்டங்கள் தொடர்ந்தன. [7]
2012 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆ.ப.சி.அ.சட்டம் குறித்து ஆராய நீதியரசர் வர்மாவின் குழு அமைக்கப்பட்டது; [8] மனோரமா சம்பந்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களே அரசின் இந்த நடவடிக்கைக்கு குறிப்பிடதக்க காரணமாகும். [9] [10]
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2014 திசம்பரில் அளித்த ஒரு தீர்ப்பில், மனோரமாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடாக அரசு தரவேண்டும் என்று குறிப்பிட்டது. இது பகுதி அளவு வெற்றியாகக் கருதப்பட்டது, ஆனால் கடந்த காலங்களில் கூட ஆ.ப.சி.அ.சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டதைப் போன்றதே இது சந்தேகமும் உள்ளது, ஏனெனில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக, குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எந்தத் தீர்ப்பையும் பிறப்பிக்கவில்லை. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "DNA India | Latest News, Live Breaking News on India, Politics, World, Business, Sports, Bollywood".
- ↑ 2.0 2.1 "The Killing of Thangjam Manorama Devi". Human Rights Watch. Aug 2009. https://www.hrw.org/reports/2008/india0908/3.htm.
- ↑ Geeta Pandey (27 August 2004). "Woman at the centre of Manipur Storm". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3604986.stm.
- ↑ "Tehelka - the People's Paper". Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
- ↑ "Women give vent to naked fury in front of 17 AR at Kangla : 16th jul04 ~ E-Pao! Headlines".
- ↑ "An era ends with the passing away of MK Binodini : 18th jan11 ~ E-Pao! Headlines".
- ↑ Biswajyoti Das, Reuters, Manipur Burns, 9 August 2004
- ↑ "Recommendations of the Justice Verma Committee: 10-point cheat-sheet".
- ↑ "A Victory for Thangjam Manorama". http://www.dnaindia.com/blogs/post-a-victory-for-thangjam-manorama-1792650.
- ↑ "The evidence is mounting". http://www.thehindu.com/opinion/editorial/the-evidence-is-mounting/article4941923.ece.
- ↑ "'Right to Justice' Deprived by State: Case of 'Manorama Vs AFSPA' from Manipur, India | OHRH".