தங்கம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

தங்கம் பாசுபைடு (Gold phosphide) என்பது AuP என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] தங்கமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகும். கருத்தியல் அளவில் உள்ள இச்சேர்மம் எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளின் இறுதிப்படுத்தப்படவில்லை. அறியப்பட்டுள்ள ஒரே தங்கம் பாசுபைடு சிற்றுறுதி நிலையில் காணப்படும் Au2P3 மட்டுமே ஆகும்.[3][4]

தங்கம் பாசுபைடு
Gold phosphide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(3+); பாசுபரசு(3-)
வேறு பெயர்கள்
தங்கம் மோனோபாசுபைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Au.P/q+3;-3
    Key: KQKLTZOQRUMLGT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19094837
  • [P-3].[Au+3]
பண்புகள்
AuP
வாய்ப்பாட்டு எடை 227.94 g·mol−1
தோற்றம் திண்மம்
நீருடன் சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தங்கப் பஞ்சுடன் பாசுபரசை சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்வதன் மூலம் அல்லது ஈதர் அல்லது ஆல்ககாலில் கரைக்கப்பட்ட தங்கம்(III) குளோரைடு கரைசலில் பாசுபீனை அனுப்புவதன் மூலம் தங்கம் பாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[5][6][7]

AuCl3 + PH3 -> AuP + 3HCl

பண்புகள்

தொகு

தண்ணிர் அல்லது காற்றுடன் சேரும் போது தங்கம் பாசுபைடு சிதைவடையும்.[8]

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

ஒரு கலப்படமான எதிர்மின் அயனியான பாசுபைடு அயோடைடு (Au7P10I) முக்கோணப் படிக கட்டமைப்புடன் அறியப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Louis, Henry (1894). A Handbook of Gold Milling (in ஆங்கிலம்). Macmillan. p. 40. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  2. Ganzenmuüller, Wilhelm; Gedschold, Hermann; Kotowski, Alfons; Gmelin, Leopold (1954). Gold: Lieferung 3 (in ஜெர்மன்). Springer-Verlag. p. 728. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-12700-1. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  3. R. Prins; M. E. Bussell (2012). "Metal Phosphides: Preparation, Characterization and Catalytic Reactivity" (in en). Catalysis Letters 142 (12): 1413–1436. doi:10.1007/s10562-012-0929-7. 
  4. 4.0 4.1 Jeitschko, W.; Möller, M. H. (1979-03-01). "The crystal structures of Au 2 P 3 and Au 7 P 10 I, polyphosphides with weak Au–Au interactions". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 35 (3): 573–579. doi:10.1107/S0567740879004180. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740879004180. 
  5. Ramsay, William (1891). A System of Inorganic Chemistry (in ஆங்கிலம்). J. & A. Churchill. p. 557. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  6. Cavazzi, A. (1885). "Action of Phisphine on Auric Chloride". Quarterly Journal of the Chemical Society of London 48 (2): 875. https://books.google.com/books?id=VQXzAAAAMAAJ&dq=Gold+phosphide+AuP&pg=PA875. பார்த்த நாள்: 8 April 2024. 
  7. Roscoe, Henry Enfield; Schorlemmer, Carl (1898). A Treatise on Chemistry (in ஆங்கிலம்). D. Appleton. p. 413. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  8. Comey, Arthur Messenger (1896). A Dictionary of Chemical Solubilities Inorganic: xx, 515 p (in ஆங்கிலம்). Macmillan & Company. p. 174. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_பாசுபைடு&oldid=4042823" இலிருந்து மீள்விக்கப்பட்டது