தங்குதன்(V) புளோரைடு

வேதிச் சேர்மம்

தங்குதன்(V) புளோரைடு (Tungsten(V) fluoride) என்பது WF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் காணப்படுகிறது. பெரும்பாலான பெண்டாபுளோரைடுகள் போல தங்குதன் பெண்டாபுளோரைடும் [WF5]4 மூலக்கூறுகளாலான நான்குறுப்புக் கட்ட்டமைப்பை ஏற்றுள்ளது. இதனால் கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு தங்குதன் மையமும் எண்முக ஒருங்கிணைப்பை அடைகின்றன.[1]

தங்குதன்(V) புளோரைடு
Tungsten(V) fluoride
தங்குதன்(V) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
தங்குதன்(V) புளோரைடு
தங்குதன் பெண்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
19357-83-6 Y
ChemSpider 123939
InChI
  • InChI=1S/5FH.W/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: QHIRVZBLPRTQQO-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 140522
  • F[W](F)(F)(F)F
பண்புகள்
F5W
வாய்ப்பாட்டு எடை 278.83 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
அடர்த்தி 5.01 கி/செ.மீ3
உருகுநிலை 66 °C (151 °F; 339 K)
கொதிநிலை 215.6 °C (420.1 °F; 488.8 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி, நீராற்பகுப்பில் ஐதரசன் புளோரைடு வெளியேறும்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தங்குதனும் தங்குதன் அறு புளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் தங்குதன்(V) புளோரைடு உருவாகிறது:[2]

W + 5 WF6 → 6 WF5

அறை வெப்பநிலையில் தங்குதன்(V) புளோரைடு டெட்ரா மற்றும் எக்சா புளோரைடுகளாக விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது:

2 WF5 → WF4 + WF6

மேற்கோள்கள்

தொகு
  1. Edwards, A. J. (1969). "Crystal Structure of tungsten pentafluoride". J. Chem. Soc. A: 909. doi:10.1039/J19690000909. 
  2. Schröder, Johann; Grewe, Franz J. (1970). "Darstellung und Eigenschaften von Wolframpentafluorid". Chemische Berichte 103 (5): 1536–46. doi:10.1002/cber.19701030524. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(V)_புளோரைடு&oldid=3946974" இலிருந்து மீள்விக்கப்பட்டது