தங்க வயிற்று மர மூஞ்சூறு

தங்க வயிற்று மர மூஞ்சூறு
Golden-bellied treeshrew
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. கிரிசோகாசுடர்
இருசொற் பெயரீடு
துபையா கிரிசோகாசுடர்[2]
தங்க வயிற்று மர மூஞ்சூறு பரம்பல்

தங்க வயிற்று மர மூஞ்சூறு (Golden-bellied treeshrew-துபையா கிரிசோகாசுடர்) என்பது துபாயிடே குடும்பத்தில் உள்ள ஒரு மர மூஞ்சூறு சிற்றினமாகும்.[2] இந்தோனேசியாவின் மெந்தாவாய் தீவுகளான சிபோரா, வடக்கு மற்றும் தெற்கு பகாய் ஆகியவற்றில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி என்பதால் இது மெந்தாவாய் மர மூஞ்சூறு என்றும் அழைக்கப்படுகிறது. இது காடுகளில் வாழ்கிறது. மேலும் தீவுகளின் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் வாழிட இழப்பு காரணமாக அருகிய இனமாக மாறும் அபாயத்தில் கருதப்படுகிறது.[1]

விளக்கம்

தொகு

அமெரிக்க விலங்கியல் நிபுணர் கெரிட் சுமித் மில்லர், அமெரிக்காவின் தேசிய அருங்காட்சியகத்தால் பெறப்பட்ட விலங்கியல் சேகரிப்பின் ஒரு பகுதியான வடக்கு பகாய் தீவிலிருந்து பெறப்பட்ட தங்க வயிற்று மர மூஞ்சூறுகளை முதலில் விவரித்தார். பெரிய பற்கள் மற்றும் மண்டை ஓடு, முதுகில் அடர் நிற உரோமங்களுடன் கூடிய கரடுமுரடான வால் உள்ளிட்ட பண்புகளால் இந்த மாதிரி இனமானது பொதுவான மர மூஞ்சூறுகளிலிருந்து வேறுபட்டது என்பதால் இதை ஒரு தனித்துவமான இனமாக சுமித் கருதினார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sargis, E.; Kennerley, R. (2018). "Tupaia chrysogaster". IUCN Red List of Threatened Species 2018: e.T22446A111870274. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T22446A111870274.en. https://www.iucnredlist.org/species/22446/111870274. பார்த்த நாள்: 26 January 2022. 
  2. 2.0 2.1 Helgen, K.M. (2005). "Tupaia chrysogaster". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 105–106. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. Miller, G. S. Jr. (1903). Seventy New Malayan Mammals. Smithsonian Miscellaneous Collections 45: 1–73.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_வயிற்று_மர_மூஞ்சூறு&oldid=4057130" இலிருந்து மீள்விக்கப்பட்டது