தங்சோ பாயிட்டு

இந்திய அரசியல்வாதி

தங்சோ பாயிட்டு (Thangso Baite) [1][2][3] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 15 ஆவது மற்றும் 16 ஆவது மக்களவையில் ஓர் உறுப்பினராக இருந்தார். வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் மணிப்பூர் புறநகர் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் வேட்பாளராகவும் இருந்தார். நிகாம்கோடோங்கு பாயிட்டு மற்றும் ஒட்வாக்கு பாயிட்டு தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இக்குடும்பம் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தோங்சாங்கு கிராமத்தை வாழ்விடமாகக் கொண்டிருந்தது.

தங்சோ பாயிட்டு
Thangso Baite
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 - 2019
முன்னையவர்மானி சரனமேய்
பின்னவர்லோர்கோ எசு. போசி
தொகுதிமணிப்பூர் புறநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஏப்ரல் 1953 (1953-04-17) (அகவை 71)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஆட்கோனெங்கு பாயிட்டு
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 3 மகள்கள்
வாழிடம்(s)தாங்சாங்கு கிராமம், சுராசாந்துபூர் மாவட்டம், மணிப்பூர்
முன்னாள் கல்லூரிமுதுநிலை அரசியல் அறிவியல், சவகர்லால் நேரு மையம், இம்பால், மணிப்பூர்
மூலம்: [1]

இதற்கு முன்னதாக இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை 60-சிங்கட்டு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 ஆவது மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை மணிப்பூர் அரசாங்கத்தின் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "We'll protect Manipur's territorial integrity: Rahul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 April 2009. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  2. "Northeast students march to Parliament, demand anti-racism law". தி எகனாமிக் டைம்ஸ். 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
  3. "Seven candidates in fray for 2 Manipur Lok Sabha seats". தி எகனாமிக் டைம்ஸ். 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்சோ_பாயிட்டு&oldid=3793209" இலிருந்து மீள்விக்கப்பட்டது