தசா சூரி (Tasha Suri) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கற்பனை எழுத்தாளர் மற்றும் முன்னாள் கல்வி நூலகர் ஆவார்.

2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது முதல் புதினமான மணல் சாம்ராஜ்யம் (எம்பயர் ஆஃப் சாண்ட்) 2019 ஆம் ஆண்டில் பிரித்தானிய கற்பனை புத்தக விருதுகளில் சிறந்த புதுமுகம் (சிட்னி ஜே பவுண்ட்ஸ்) என்ற விருதை சூரிக்கு கிடைக்க உதவியுள்ளது.[1] மேலும் இந்த புதினம், டைம் இதழால் 2020 ஆம் ஆண்டில் வெளியான 100 சிறந்த கற்பனை புத்தகங்களில் ஒன்று எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. [2] 2022 ஆம் ஆண்டில், அவரது மற்றொரு புதினமான மல்லிகை அரியணை (தி ஜாஸ்மின் திரோன்) சிறந்த புதினத்திற்கான உலக கற்பனை புத்தக விருதை வென்றுள்ளது. [3]

சுயசரிதை தொகு

தசா, இலண்டனின் காரோவில் இந்திய வம்சாவளி பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர். அடிக்கடி விடுமுறைக்காக இந்தியா வந்துபோகும் பழக்கமுடையவர்களாக இவரது குடும்பம் இருந்துள்ளது. [4]

வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் எழுத்தில் படைப்பாற்றல் படித்துள்ள இவர் முன்னதாகஇலண்டன் இம்பீரியல் கல்லூரியில் கல்வி நூலகராக பணியாற்றியுள்ளார், [5] தற்போது முழுநேர எழுத்தாளராக இருந்து வருகிறார். [4]

ஒரு பூனை மற்றும் இரண்டு முயல்களுடன் குடும்பமாக இலண்டனில் வசித்து வரும் தசா,[4] தன்னை பால் புதுமர் என்று அறிவித்துள்ளார் [6]

நூல் பட்டியல் தொகு

எரியும் ராஜ்யங்கள் முத்தொகுப்பு தொகு

  • மல்லிகை_சிம்மாசனம்
  • ஒலியாண்டர் வாள், 2022
  • தாமரைப் பேரரசு, 2024

அம்பாவின் புத்தகங்கள் - இரண்டு பாகங்கள் தொகு

  • மணல் சாம்ராஜ்யம், 2018
  • சாம்பல் சாம்ராஜ்யம், 2019

இளம் வயது வந்தவர் தொகு

  • ஆத்மாக்கள் எதைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன: எ வுதரிங் ஹைட்ஸ் ரீமிக்ஸ், 2022
  • டாக்டர் ஹூ - த தசாப்தங்களின் தொகுப்பு - 1970கள் - தி கிரேடில், 2023

மேற்கோள்கள் தொகு

  1. "British Fantasy Awards – winners | The British Fantasy Society". www.britishfantasysociety.org.
  2. Bruner, Raisa (15 October 2020). "The 100 Best Fantasy Books of All Time: Empire of Sand by Tasha Suri". Time.com. Time Magazine. பார்க்கப்பட்ட நாள் 6 January 2023.
  3. "2022 World Fantasy Awards Winners". 6 November 2022.
  4. 4.0 4.1 4.2 Bihmjyani, Aditi. "Meet the two fantasy writers of Indian origin voted best in the world by George RR Martin and Neil Gaiman". Vogue. 
  5. "Imperial librarian Tasha Suri writes epic fantasy novel". https://www.imperial.ac.uk/news/190993/imperial-librarian-tasha-suri-writes-epic/. 
  6. Suri, Tasha (20 May 2021). "resonance". Tasha Suri novelist. Tasha Suri. பார்க்கப்பட்ட நாள் 6 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசா_சூரி&oldid=3893860" இலிருந்து மீள்விக்கப்பட்டது