தசிடிங் மடாலயம்

தசிடிங் மடாலயம்(Tashiding Monastery) என்பது வடகிழக்கு இந்தியாவின் மேற்கு சிக்கிமில் உள்ள திபெத்திய பௌத்தத்தின் நியிங்காமா பிரிவின் ஒரு புத்த மடாலயமாகும். ராதொங் சு மற்றும் ரங்கீட் நதி இடையே கெய்சிங்கிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும், மற்றும் தென் கிழக்கு யூக்சாமிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தசிடிங் மடாலயம் (கோம்பா) தஷிடிங் என்ற நகரதிற்கு அருகில் உள்ளது, இது சிக்கிமின் மிகவும் புனிதமான மடாலயம் ஆகும்.[1][2][3]

தசிடிங் மடாலயம்
1465
தசிடிங் மடாலயத்தின் நுழைவாயிலில் மணிகள் கொண்ட கல் அடுக்குகள் உள்ளன
Monastery information
இடம்சிக்கிம், இந்தியா
நிறுவியதுபத்மசம்பவர். நிறுவியவர் ந்கடாக் செம்பா செம்பூ
வகைதிபத்திய பௌத்தம்
பிரிவுநியிங்கமா
அர்ப்பணிப்புபத்மசம்பவர்
Festivalsபூம்சு திருவிழா – திபெத்தியன் நாட்காட்டியினன் முதல் மாதத்தின் 14-15 ஆவது நாள்

"திசைப்படுத்தப்பட்ட மைய மகிமை" என்று பொருள்படும், தசிடிங் மடாலயம் 1641 ஆம் ஆண்டில் திபெத்திய பௌத்தத்தின் நியிங்காமா பிரிவைச் சேர்ந்த நகடாக் செம்பா செம்போ புன்சாக் ரிக்சிங் என்பவரால் நிறுவப்பட்டது. நகடாக், சிக்கிமின் முதல் அரசான யுக்சாமின், முடிசூட்டிக் கொண்ட மூன்று ஞானிகளுள் ஒருவராக இருந்தார். இது 1717 ஆம் ஆண்டில் மூன்றாவது சொகயால் சக்கர் நம்க்யால் ஆட்சியின் போது நீட்டிக்கப்பட்டது. பூம்சு விழாவானது திபெத் நாட்காட்டியின் முதல் மாதத்தின் 14 வது மற்றும் 15 வது நாளில் நடைபெறும் ஒரு பிரபலமான திருவிழா ஆகும்.[4] [5]

தசிடிங் மடாலயத்திற்கு அருகிலுள்ள தங்க தாது கோபுரம்

தசிடிங் மடாலயம் புத்த மதத்தின் ஒரு பகுதியாகும். இது சிக்கிமின் யுக்சாம் பகுதியின் முதல் மடாலயம் என அறியப்பட்டது . துப்தி மடாலயம் , நார்பங்க் சோர்டன் , பெம்யங்ஸ்ட் மடாலயம் , ராப்டென்ஸ்ட் இடிபாடுகள், சங்கா சோலிங் மடாலயம் , மற்றும் கச்சப்பால்ரி ஏரி என்றெல்லாம் அறியப்படுகிறது. [6]

புராணங்கள்

தொகு

மிகவும் புகழ்பெற்ற இந்த மடாலயத்திற்கும், இங்கு நடத்தப்படும் பூம்சு பண்டிகைக்கும் பல புராணங்களும் உள்ளன. ஒரு உள்ளூர் புராணக்கதையின்படி குரு பத்மசம்பவரின் படி இந்த இடத்தை தேர்வு செய்ய காற்றில் அம்பு தொடுக்கப்பட்டது. அம்பு எங்கு சென்றதோ அங்கு அவர் தியானத்தில் அமர்ந்தார், பின்னர் அந்த இடம் இறுதியில் தசிடிங் மடாலய தளம் ஆனது. [7]

சிக்கிமின் யுக்ஸாமில் முதல் சோகையால் பகுதியின்படி குகைகளில் வாழ்ந்த மூன்று துறவிகளைப் பற்றிய மற்றொரு புராணக் கதை உண்டு. மூன்றுத் துறவிகளும் கஞ்சஞ்சங்கா மலையின் உச்சியில் தெய்வீக நிகழ்வினால் ஏற்பட்ட பிரகாசமான ஒளி ஒன்றைக் கண்டதாகக் கூறப்படுகிறது, தற்போது தசிடிங் மடாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில் அருகே இது நடந்ததை ஒரு கட்டிடம் பிரதிபலிக்கிறது. ஒரே சமயத்தில், வாசனையை வெளிபடுத்தி அதனைத் தொடர்ந்து தெய்வீக இசையைப் பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்த அசாதாரண நிகழ்விற்குப் பின்னர் இந்த தளத்தை விஜயம் செய்த முதலாவது சோக்யால், இங்கு ஒரு சிறிய கோட்டை அமைத்து அதற்கு தாங்வா-ரங்-க்ரோல் என்று பெயரிட்டார்.[ சான்று தேவை ]

 
தசிடிங் மடாலய நுழைவாயில்

நிலவியல்

தொகு

இந்த மடாலயம் 1465 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதனை மையமாகக் கொண்டு ரத்தோங் சூ மற்றும் ரங்கீட் ஆறுகளின் சங்கமத்திற்கு மேலே உள்ள இதய வடிவிலான மலை அல்லது ஹெல்மெட் வடிவ மலை கஞ்சங்சங்கா மலையில் நேர்த்தியாக அமைந்துள்ளது. யூக்சம் நகரிலிருந்து 16 கிமீ தூரமும், கெய்சிங்கிலிருந்து லெக்‌ஷிப் வழியாக 40 கிமீ  தூரமும் கொண்டது.[8]

புவியியல் ரீதியாக இந்த தஷிடிங் மடாலயம் தசிடிங் நகரத்தைச் சுற்றியுள்ள பௌத்த புனிதர்கள் தியானம் செய்த நான்கு தெய்வீக குகைகளுக்கு நடுவே நான்கு முக்கிய திசைகளில் அமைந்துள்ளது. கிழக்கில் ஷர்ச்சோக் பெபூக், தெற்கில் கந்தோசாங்க்பு, மேற்கு திசென்பக் குகை மற்றும் வடக்கில் லஹ்ரி நிகிங்ஃபோக் என்பதாகும். இந்த மடாலயத்தில் உள்ள முக்கிய தெய்வம் தசிடிங் ஆகும். எனவே மடாலயம் 'தக்கர் தசிடிங்' என்றும் அழைக்கப்படுகிறது. [ சான்று தேவை ]

திருவிழாக்கள்

தொகு

பூம்சு பண்டிகை, பழங்காலகுரு பத்மசம்பவாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, திபெத்திய நாட்காட்டியின் முதலாம் மாதத்தில் முழு சந்திர நாளுக்கு முன்னால் இரவில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களின் காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது மடாலயத்தில் புனித நீர் வைக்கப்பட்டிருக்கும். பூம்சு (பூம் = பானை; சூ = நீர்) என்பது எதிர்காலத்தை முன்னறிவிப்பதற்காக கொண்டாடப்படும் பௌத்த திருவிழா ஆகும். இந்த குகையில், ரத்தோங் சாவின் நீர் ஒரு வருடம் முழுவதும் தசிடிங் மடாலயத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் லாமாக்கள் நீர் மட்டத்தை ஆய்வு செய்வதனால் அது புனித நீர் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக குவளைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரின் அளவு மற்றும் தரத்தில் மாற்றங்கள் அடுத்த ஆண்டில் சிக்கிம் மற்றும் அதன் மக்களது நலன்களை கணிக்கும் என்று நம்பப்படுகிறது. நீரானது விளிம்பு வரை (அது 21 குவளைகள் அளவு வரை) நிரம்பினால், அடுத்த வருடம் வளமானதாக இருக்கும். காலியாக இருந்தால், பஞ்சம் தொடரும், அது அரை மட்டம் நிரம்பினால், ஒரு வளமான ஆண்டாக இருக்கும் என கணிதக் கப்படுகிறது. தண்ணீர் மண்ணால் மாசுபட்டால் அது சண்டை மற்றும் மோதல்களின் அடையாளம் என்று பொருள்படும். ஒருமுறை பரிசோதிப்பு மற்றும் பூம்சு திருவிழா முடிவடைந்தவுடன், லாமாக்கள் ஆற்றில் இருந்து புதிய நீரைக் கொண்டு பூர்த்திசெய்து அடுத்த வருடத்திற்கான பணிகளை துவங்க ஆரம்பிப்பார்கள்[9] [10]

குவளையில் இருந்து புனித நீர் எடுத்துக்கொள்வதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை, முதல் கோப்பையின் புனித நீர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களை ஆசீர்வதிக்கும், இரண்டாம் கோப்பை லாமாக்களுக்கு மற்றும் மூன்றாம் கோப்பை நீர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிக்கிமின் எல்லா பகுதிகளிலிருந்தும் புனித நீரினால் ஆசீர்வாதம் பெற பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்த விழா பண்டார தீபகற்பத்தில் (திபெத்திய இனக்குழுக்கள்) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், "நதிகளின் உயிர் நீரைக் கொண்டிருக்கும் நீர்" என்ற பெரும் மரியாதையை கொண்டுள்ளது. பிப்ரவரி / மார்ச் மாதத்தில் கிரிகோரியன் நாட்காட்டியின்படி , முதல் திபெத்திய மாதத்தின் அல்லது மாதாவின் இந்துமத மாதத்தின் முழு நாளான 15 வது நாளில் இந்த விழா நடைபெறுகிறது. [11] [10] திருவிழாவின் முக்கிய நோக்கம் நீர் ஒரு விலையுயர்ந்த வளமாகவும் அதன் தூய்மையை பாதுகாப்பாக வைத்திருப்பதும் என்பதாகும். தீர்க்கதரிசனம் மக்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது. நீரோடைகளை அசுத்தமாக்காமல் காக்கப்பட வேண்டும், ஏனெனில், அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற செய்தியை பரப்புகிறது.. [12] [தெளிவுபடுத்துக]

காட்சிகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Eco Destination of India: Sikkim Chapter" (PDF). Envis Centre Sikkim – National Informatics Centre. Archived from the original (pdf) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  2. "Tashiding Monastery". Buddhist-temples.com. பார்க்கப்பட்ட நாள் November 21, 2009.
  3. "West Sikkim". Sikkim Online. Archived from the original on 2010-04-25. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  4. File:Plaque at entrance to Tashiding Monastery.jpg: Official plaque at entrance to Tashiding Monastery erected by the Government of Sikkim.
  5. Choudhury, Maitreyee (2006). Sikkim: Geographical Perspects. Mittal Publications. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-158-1. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  6. Sikkim: Geographical Perspects. Mittal Publications. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  7. "Tashiding Monastery". Buddhist-temples.com. பார்க்கப்பட்ட நாள் November 21, 2009.
  8. "Eco Destination of India: Sikkim Chapter" (PDF). Envis Centre Sikkim – National Informatics Centre. Archived from the original (pdf) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  9. "Eco Destination of India: Sikkim Chapter" (PDF). Envis Centre Sikkim – National Informatics Centre. Archived from the original (pdf) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  10. 10.0 10.1 "Carrying Capacity Study of Teesta Basin in Sikkim:The Socio-Cultural and Socio-Economic Study" (PDF). Sikkim Envis: National Informatics Centre. Archived from the original (pdf) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
  11. "Eco Destination of India: Sikkim Chapter" (PDF). Envis Centre Sikkim – National Informatics Centre. Archived from the original (pdf) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-13.
  12. envis, ப. 84
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசிடிங்_மடாலயம்&oldid=3587137" இலிருந்து மீள்விக்கப்பட்டது