தசுக்கன் தீவுக்கூட்டம்

தசுக்கன் தீவுக்கூட்டம் என்பது லிகூரியன் கடல் மற்றும் திர்ரேனியக் கடல் ஆகிய இரு கடல்களுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது இத்தாலியின் தசுக்கானி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய தீவுகளால் சுற்றுலாப் பயணிகள் இத்தீவுக்கூட்டத்தை நாடிவருகின்றனர். அத்துடன் இங்குள்ள எல்பா, மொன்டேகிறிஸ்டோ ஆகிய தீவுகளில் மக்கள் அதிகமாக வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. எல்பா, பியனசோ, கைபையோ, மொன்டேகிறிஸ்டோ, கிஜ்லியோ தீவு, கோர்கோனா, கியனுட்டிரி ஆகிய எட்டுத்தீவுகளும் தசுக்கன் தீவுக்கூட்டத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. அத்துடன் அரிய பறவையான அவுடோனியனின் நீள் சிறகுக் கடற்பறவை இத்தீவுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது.[1] இத்தீவுகூட்டத்தில் காணப்படும் பாறைக் கடற்தீவுகளில் (Skerry) மெலோரியா எனும் பாறைக் கடற்தீவு முக்கிய இடம் விக்கின்றது.[2]

தசுக்கன் தீவுக்கூட்டம்
உள்ளூர் பெயர்: தொஸ்கானோ தீவுக்கூட்டம்
புவியியல்
அமைவிடம்லிகூரியன் கடல் மற்றும் திர்ரேனியக் கடல்களுக்கு இடையில்
தீவுக்கூட்டம்Tuscan Archipelago
மொத்தத் தீவுகள்7
முக்கிய தீவுகள்எல்பா, பியனசோ, கைபையோ, மொன்டேகிறிஸ்டோ, கிஜ்லியோ தீவு, கோர்கோனா, கியனுட்டிரி
பரப்பளவு295 km2 (114 sq mi)
உயர்ந்த ஏற்றம்1,018 m (3,340 ft)
உயர்ந்த புள்ளிமொன்டே கப்பனே
நிர்வாகம்
பிராந்தியம்தசுக்கானி
மாகாணம்லிவோர்னோ, குரெசெட்டோ
பெரிய குடியிருப்புபோர்ட்டோஃபெராரியோ (மக். 12,007)
மக்கள்
மக்கள்தொகை34,250
அடர்த்தி108 /km2 (280 /sq mi)

மேற்கோள்கள்

தொகு
  1. Fauna பரணிடப்பட்டது 2017-02-22 at the வந்தவழி இயந்திரம் Parco Nazionale Arcipelago Toscano
  2. Mar Ligure Marina Militare
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுக்கன்_தீவுக்கூட்டம்&oldid=3214987" இலிருந்து மீள்விக்கப்பட்டது