லிகூரியன் கடல்

லிகூரியன் கடல் (Ligurian Sea) என்பது மத்தியதரைக்கடலில் அமைந்துள்ள ஒரு கடல் ஆகும்.[1] இக்கடல் இத்தாலியன் ரிவேரியாவிற்கும் கோர்சிகா தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தோ ஐரோப்பிய இனத்தவர்களான லிகூர்ஸ் எனப்படும் மக்கள் குழுவில் இருந்தே இக்கடலுக்கான பெயர் இடப்பட்டது. இக்கடலின் எல்லைகளாக இத்தாலி, பிரான்சு, மற்றும் பிரான்சின் 18 பிராந்தியங்களில் ஒன்றான கோர்சிகாதீவு ஆகியவை விளங்குகின்றன. [2] அத்துடன் இக்கடலின் கிழக்கு எல்லையில் திர்ரேனியக் கடல் அமைந்துள்ளது. இக்கடலின் வடமேற்குக் க்ரை இயற்கை அழகும், தகுந்த காலநிலையையும் கொண்டுள்ளது. ஆர்னோ எனும் ஆறு இக்கடலில் கலக்கும் ஆறுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

லிகூரியன் கடல்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிகூரியன்_கடல்&oldid=3570211" இருந்து மீள்விக்கப்பட்டது