தச சீலம் அல்லது பத்து ஒழுக்கங்கள் என்பது, பௌத்த சமய இல்லறத்தார்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களுடன், பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்கள் வாழ்வில் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் மேலும் ஐந்து ஒழுக்கங்களும் சேர்ந்த பத்து ஒழுக்கநெறிகளாகும். பாலி மொழியில் சீலம் எனில் ஒழுக்கம் என்றும், தசம் என்பதற்கு பத்து எனவும் பொருளாகும்.

பௌத்த தத்துவஙகளில் சீலத்தை சிக்காபதம் என்றும் கூறுவர். தச சீலத்திலே பஞ்ச சீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்ச சீலங்களையும், துறவறத்தார் தச சீலங்களையும் நாள்தோறும் ஓத வேண்டும். [1][2]

தச சீலங்கள் தொகு

தச சீலத்தின் பாலி மொழி வாசகம்:

  1. பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
  2. அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
  3. அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
  4. மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
  5. ஸுராமேரய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
  6. விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸாதியாமி
  7. , 8, 9.நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷணட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
10.உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி

பொருள் தொகு

1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன்.

2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

3. பிரம்மச்சரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கிறேன். (இது இல்லறத்தாருக்குப் பிறர் மனைவியர்களுடன் அல்லது பிற ஆண்களுடன் விபசாரம் செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துறவறத்தாருக்குப் பிரமச்சரிய விரதம் என்பது இணை விழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்)

4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

5. கள் முதலிய மயக்கம் தரும் பொருள்களை நீக்குததல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

6. உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

7, 8, 9. இசை, ஆடல், பாடல்களைக் கேட்பது, பார்ப்பது மற்றும் மலர், வாசனை திரவியங்கள் முதலியவற்றை உபயோகித்தல், பொன், வெள்ளி முதலியவற்றை உபயோகித்தல் ஆகிய இவற்றைச் செய்யாமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.

10. உயரமான, அகலமான படுக்கை முதலிய சுக ஆசனங்களை உபயோகிக்காமல் இருக்கின்ற சீலத்தை மேற்கொள்கிறேன்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச_சீலம்&oldid=3913388" இலிருந்து மீள்விக்கப்பட்டது