கொல்லர்
(தட்டார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.[1] கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைத் தட்டார், பத்தர், ஆச்சாரி என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியைக் குறிக்கும்.
மேலும் இவர்கள் தங்கள் பெயரோடு ஆச்சாரி எனவும் பட்டம் சேர்த்துக் கொள்ளும் மரபும் உள்ளது .
நாற்காலி போன்ற மரவேலைகளை செய்பவரை தச்சர் என்றும், கற்சிற்பங்கள், கல்லால் ஆன உரல், ஆட்டுக்கல், அம்மி, திருகை போன்ற வேலைகளைச் செய்பவரை கல்தச்சர் என்றும் அழைப்பர்.