தண்டுபாளையம்

கருநாடக சிற்றூர்

தண்டுபாளையம் (Dandupalya) என்பது இந்தியாவின் கர்நாடகத்தில் உள்ள ஒசகோட்டே வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பழைய சென்னை சாலை, தேசிய நெடுஞ்சாலை 4 இக்கு அருகில், ஒசகோட்டே நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து ஒரு மணி நேர பயணத்திலும் அமைந்துள்ளது. 1996 மற்றும் 2001 க்கு இடையில் கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைச் சம்பவங்களைச் செய்த தண்டுபாளைய கும்பலின் நடவடிக்கைகளுக்கு இது பெயர் போனது. இந்த கும்பலில் சுமார் 30 ஆண்களும், பெண்கள் இருந்தனர். அவர்களில் சிலர் தண்டுபாளையத்தில் வசித்து வந்தனர். அவர்கள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்த பதினாறு பேருக்கு மரண தண்டனைகளும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டன. மற்றவர்கள் குறுகிய காலம் சிறைத்தண்டனையைப் பெற்றனர்.

தண்டுபாளையம்
Dandupalya
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
வட்டம்ஒசகோட்டே
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதெலுங்கு கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

தண்டுபாளைய கும்பல் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மூதாதையர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். தண்டுபாளைய கும்பல் ஆயுதமேந்திய கொள்ளைக் கூட்ட வரிசையில் இருந்து வருகிறது, அவர்கள் தாத்தா பாட்டி கொலைகள் மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டனர். தண்டுபாளைய கும்பலைச் சேர்ந்தவர்களின் குழந்தைப் பருவம் பசியாலும் வறுமையாலும் வாடியது. இது "நாயை-உண்ணும்-நாய்" என்னும் உள்ளுணர்விற்கு இட்டுச் சென்றது. இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கும்பல், வியக்கத்தக்க அளவு உடல் ரீதியான சித்திரவதைகளை தாங்கியது. ஆனால் உணவு, குறிப்பாக பன்றி இறைச்சியைக் கொண்டு கவர்ந்திழுத்த போது மட்டுமே தங்கள் உறுதியில் இருந்து உடைந்து தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டானர். [1]

2012 ஆம் ஆண்டு கன்னடத்தில் தண்டுபாள்யா என்ற திரைப்படம் இந்த கும்பலின் செயல்பாடுகள் குறித்து எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. V Shoba (18 March 2012). Dandupalya – A name that stuck. The Indian Express. Accessed February 2014.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுபாளையம்&oldid=3758807" இலிருந்து மீள்விக்கப்பட்டது