ததகட சத்பதி
ததகட சத்பதி ( Tathagata Satpathy பிறப்பு 1 ஏப்பிரல் 1956 ) என்பவர் இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் இதழாளர் என அறியப்படுபவர். தொடர்நது நான்கு முறை நாடாளு மன்ற உறுப்பினராக உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஜூ ஜனதா தளத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ததகட சத்பதி ஒடிசா மாநிலத்தின் மேனாள் முதல்வர் நந்தினி சத்பதியின் மகன் ஆவார்.
ததகட சத்பதி | |
---|---|
Member: 12வது, 14வது, 15வது, பதினாறாவது மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
முன்னையவர் | காமக்கிய பிரசாத் சிங் தியோ |
தொகுதி | தென்கனால் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1956 கட்டக், ஒடிசா |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
துணைவர் | அத்யச சத்பதி |
வாழிடம் | புவனேசுவரம் |
தாரித்ரி என்னும் ஒடிசா செய்தித்தாளின் ஆசிரியராகவும் ஒரிசா போஸ்ட் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராகவும் உள்ளார்[1]. என்னிடம் எதையும் கேளுங்கள் என்னும் நிகழ்சசியை நடத்தி அன்றாட சமூகப் பிரசினைகளைப் பற்றிய தம் கருத்துகளைப் பரப்பி வருகிறார்[2].
அரசும் அதன் நிருவாகமும் மதத்தை விட்டு விலகி இருந்து இயங்க வேண்டும்; அரசு வேறு, மதம் வேறு; அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைத்திருத்தல் நல்லது இல்லை; எல்லா வகையான மக்களுக்கும் பொருந்தும் சீரான வாழ்வியல் சட்டம் ஏற்பட வேண்டும்; என்பன இவருடைய கருத்துகள் ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ "Ex-CM of Orissa Nandini Satpathy passes away - Times Of India". indiatimes.com. 2006. Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012.
Tathagat is a BJD MP from Dhenkanal and owner-editor of oriya daily Dharitri
- ↑ "Hello /r/India, I am Tathagata Satpathy. Member of Parliament, Chief Whip of BJD, Editor of Dharitri & Orissa POST". reddit. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
- http://blogs.timesofindia.indiatimes.com/toi-editorials/replace-secular-with-areligious-with-no-ram-mohan-roy-now-netas-should-show-inclusion-tathagata-satpathy/
- http://www.hindustantimes.com/india/tathagata-satpathy-mp-who-accepted-the-internet-challenge-and-won/story-Mx1ZLZM5Twi3JFwdDXqEZP.html
- https://www.reddit.com/r/india/comments/2z493l/hello_rindia_i_am_tathagata_satpathy_member_of/
- http://timesofindia.indiatimes.com/india/Ex-CM-of-Orissa-Nandini-Satpathy-passes-away/articleshow/1855804.cms?referral=PM