தனக்ரா சமர் (கிமு 426)
முதல் பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த தனக்ரா சமர் (கி.மு. 457) உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்
Battle of Tanagra | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்ஸ் | தனக்ரா, தீப்ஸ் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Nicias, ஹிப்போனிகஸ், Eurymedon | தெரியவில்லை | ||||||
பலம் | |||||||
2,000 ஹாப்லைட்கள் | தெரியவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
தனக்ரா சமர் (Battle of Tanagra) என்பது பெலோபொன்னேசியன் போரில் கிமு 426 இல் ஏதென்ஸ் மற்றும் தனக்ரா மற்றும் தீப்ஸ் இடையே நடந்த சமர் ஆகும்.[1]
கிமு 426 இல் ஏதென்ஸ் நிசியாசின் தலைமையில் 60 கப்பல்கள் மற்றும் 2,000 ஹாப்லைட்களைக் கொண்ட ஒரு கடற்படையை மெலோஸ் தீவுக்கு அனுப்பியது. மெலோஸ் டெலியன் கூட்டணியில் சேர மறுத்துவிட்டது. இதனால் ஏதெனியர்கள் தீவைச் சூறையாடினர். ஆனாலும் கூட்டணியில் இணைய மறுத்துவிட்டது. பின்னர், ஏதெனியர்கள் தீவைக் கைப்பற்றாமல், போயோட்டியா கடற்கரையில் உள்ள ஓரோபசுக்குச் சென்றனர். ஹாப்லைட்டுகள் கரையில் இறங்கி தனாக்ராவை நோக்கி அணிவகுத்துச் சென்றனர், அங்கு அவர்களுடன் ஏதென்சிலிருந்து ஹிப்போனிகஸ் மற்றும் யூரிமெடனின் தலைமையின் கீழ் அணிவகுத்து வந்த முக்கிய ஏதெனியன் இராணுவமும் அவர்களுடன் இணைந்தது. அவர்கள் கிராமப்புறங்களைச் சூறையாடினர். அடுத்த நாள் தனக்ரான் மற்றும் தீப்சின் இராணுவத்தை தோற்கடித்தனர். வெற்றிக்குப் பிறகு ஏதென்சுக்குத் திரும்பினர்.
குறிப்புகள்
தொகு- ↑ Thucydides 3.91