மிலொசு

கிரேக்கத் தீவு
(மெலோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெலோஸ் (Milos ; கிரேக்கம்: Μήλος‎ ) என்பது கிரேக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது கிரீட் கடலுக்கு வடக்கே ஏஜியன் கடலில் உள்ள எரிமலை தீவு ஆகும். இது மெலோஸ் சைக்லேட்ஸ் தீவுக் கூட்டத்தின் தென்மேற்கு திசையில் உள்ளது.

மெலோஸ்
Μήλος
From top:
அலுவல் சின்னம் மெலோஸ்
சின்னம்
Location of மெலோஸ்
ஆள்கூறுகள்: 36°41′N 24°25′E / 36.683°N 24.417°E / 36.683; 24.417
நாடுகிரேக்கம்
நிர்வாக பிராந்தியம்தெற்கு ஏஜியன்
பிராந்திய அலகுமெலோஸ்
தலைநகரம்Plaka
உயர் புள்ளி
748 m (2,454 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,977
இனம்Melian
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
அஞ்சல் குறியீட்டு எண்
848 00, 848 01
தொலைபேசி குறியீடு2287
இணையதளம்www.milos.gr

மிலோவின் வீனசு (இப்போது இலூவரில் உள்ளது) மற்றும் அஸ்க்லெபியஸ் ஆஃப் மிலோஸ் (இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது) ஆகிய இரண்டும் இத்தீவில் இருந்தவை.[1] அதேபோல இப்போது ஏதென்சில் உள்ள பொசைடன் மற்றும் ஒரு தொன்மையான அப்பல்லோ சிலைகளும் இத்தீவிலிருந்தவையே. கோடை விடுமுறைக் காலத்தில் மிலோஸ் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. மிலோஸ் நகராட்சிக்கு உட்பட்டதாக ஆண்டிமிலோஸ் மற்றும் அக்ரடீஸ் ஆகிய மக்கள் வசிக்காத தீவுகளும் அடங்கி உள்ளன. இவற்றின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு 160.147 சதுர கிலோமீட்டர்கள் (61.833 sq mi) [2] ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 4,977 மக்கள் வசிக்கின்றனர்.

நிலவியல்

தொகு
 
மிலோசுக்கு வடக்கே உள்ள கிளரோனிசியா தீவில் உள்ள டேசிட் எரிமலையின் நெடுவரிசைகள். எரிமலைக்குழம்பு பிலியோசீன் காலத்தை சேர்ந்தது.

மிலோஸ் தீவானது லாகோனியா கடற்கரையிலிருந்து கிழக்கே 120 கிலோமீட்டர்கள் (75 மைல்கள்) தொலைவில், சைக்லேட்சில் உள்ள தென்மேற்குத் தீவாகும். இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 23 km (14 mi) நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 13 km (8.1 mi) நீளமும் உடையது. மேலும் இதன் பரப்பளவு 151 சதுர கிலோமீட்டர்கள் (58 sq mi) என மதிப்பிடப்பட்டுள்ளது. தீவின் பெரும் பகுதி கரடுமுரடானதும், மலைப்பாங்கானது, மேற்கில் 748 மீட்டர்கள் (2,454 அடிகள்) உள்ள பிராஃபிடிஸ் எலியாஸ் மலை உள்ளது. இந்தத் தீவில் எரிமலை இருந்தது. எரிமலை செயல்பாடு 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளியோசீனின் போது தொடங்கியது. கடைசியாக 90000 ஆண்டுகளுக்கு முன்பு பிளீஸ்டோசீன் காலத்தில் வெடித்தது. இது தற்போது செயலற்ற எரிமலையாக கருதப்படுகிறது. அது மீண்டும் வெடிக்கக்கூடும். தீவில் இயற்கை துறைமுகம் உள்ளது. அதன் ஆழம் 70 முதல் 30 பதொம் (130-55மீ) ஆகும். தீவை இரண்டு சமமான பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் வடமேற்கில் இருந்து கடல் பகுதி குழிவாக ( ஒளிப்படத்தைப் பார்க்கவும் ), 18 கிமீ (11 மைல்) க்கும் அதிகமான அகலத்தில் அமைந்துள்ளது. தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு குகையில், எரிமலையின் வெப்பம் மிகுதியான அளவில் இன்னும் உள்ளது. மேலும் துறைமுகத்தின் கிழக்குக் கரையில், சூடான கந்தக நீரூற்றுகள் உள்ளன.[3][4][5]

தீவின் துறைமுக நகரம் அடமன்டாஸ் ஆகும். துறைமுகத்திற்கு மேலே ஏற்றத்தில் ஒரு பீடபூமி உள்ளது. அதன் மீது தலைமை நகரமான பிளாக்கா மற்றும் காஸ்ட்ரோ மற்றும் பிற கிராமங்கள் அமைந்துள்ளன. பண்டைய நகரமான மிலோஸ் அடாமாசை விட துறைமுகத்திற்கு மிக அருகில் இருந்தது, மேலும் டிரிபிடி கிராமத்திற்கும் கிளிமாவில் இறங்கும் இடத்திற்கும் இடையே உள்ள சரிவில் இருந்தது. இங்கே ரோமானிய காலத்தின் ஒரு அரங்கம் மற்றும் நகர சுவர்கள் மற்றும் பிற கட்டிடங்களின் சில எச்சங்கள் உள்ளன. 1896 இல் ஏதென்ஸில் உள்ள பிரித்தானிய பள்ளியினரால் அகழப்பட்டு ஒரு சிறந்த மொசைக் கிடைத்தது. இந்த தளத்தில் ஏராளமான சிறந்த கலைப் படைப்புகள் காணப்படுகின்றன, குறிப்பாக பாரிசில் உள்ள மிலோவின் வீனசு , இலண்டனில் உள்ள அஸ்க்லெபியஸ் மற்றும் ஏதென்ஸில் உள்ள பொசைடன் மற்றும் தொன்மையான அப்பல்லோ போன்றவை ஆகும். தீவில் உள்ள பிற கிராமங்கள் டிரைவாசலோஸ், பேரன் ட்ரைவாசலோஸ், பொலோனியா, ஜெஃபிரியா (கம்போஸ்) ஆகியவை அடங்கும்.

காலநிலை

தொகு

மிலோசில் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டுள்ளது ( கோப்பன் காலநிலை வகைப்பாடு Csa ) மிதமான, மழைக்கால குளிர்காலம் மற்றும் சூடானது முதல் வெப்பமான வறண்ட கோடைக்காலம்வரை என காலநிலை நிலவுகிறது.[6]

தட்பவெப்ப நிலைத் தகவல், மெலோஸ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 21.6
(70.9)
26.2
(79.2)
25.6
(78.1)
28.4
(83.1)
35.4
(95.7)
40.0
(104)
41.0
(105.8)
38.4
(101.1)
36.3
(97.3)
32.0
(89.6)
27.8
(82)
23.4
(74.1)
41.0
(105.8)
உயர் சராசரி °C (°F) 12.9
(55.2)
13.2
(55.8)
14.8
(58.6)
18.4
(65.1)
22.8
(73)
27.1
(80.8)
28.1
(82.6)
27.6
(81.7)
25.2
(77.4)
21.3
(70.3)
18.0
(64.4)
14.6
(58.3)
20.3
(68.5)
தினசரி சராசரி °C (°F) 10.5
(50.9)
10.7
(51.3)
12.1
(53.8)
15.2
(59.4)
19.3
(66.7)
23.5
(74.3)
25.0
(77)
24.6
(76.3)
22.3
(72.1)
18.5
(65.3)
15.3
(59.5)
12.3
(54.1)
17.4
(63.3)
தாழ் சராசரி °C (°F) 8.5
(47.3)
8.5
(47.3)
9.6
(49.3)
12.4
(54.3)
15.9
(60.6)
19.8
(67.6)
21.8
(71.2)
21.6
(70.9)
19.6
(67.3)
16.1
(61)
13.1
(55.6)
10.3
(50.5)
14.8
(58.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.0
(28.4)
-2.0
(28.4)
0.0
(32)
5.4
(41.7)
8.0
(46.4)
10.0
(50)
14.0
(57.2)
14.2
(57.6)
11.6
(52.9)
8.0
(46.4)
2.8
(37)
0.0
(32)
−2.0
(28.4)
பொழிவு mm (inches) 74.7
(2.941)
50.6
(1.992)
47.2
(1.858)
20.5
(0.807)
13.1
(0.516)
3.3
(0.13)
0.3
(0.012)
1.4
(0.055)
5.8
(0.228)
42.9
(1.689)
60.7
(2.39)
90.3
(3.555)
410.8
(16.173)
ஈரப்பதம் 73.3 72.5 72.0 67.0 63.5 58.8 60.1 63.4 66.8 71.3 73.9 73.7 68.0
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.8 7.3 5.7 2.9 1.4 0.3 0.1 0.1 0.9 3.9 5.8 9.0 46.2
ஆதாரம்: NOAA[7]

குறிப்புகள்

தொகு
  1. "statue". British Museum. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
  2. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
  3. "Milos Island: Working with Earth for 9000 years".
  4. "Archived copy". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Volcanoes in Greece & Greek islands | Greeka".
  6. Kottek, M.; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15 (3): 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. Bibcode: 2006MetZe..15..259K. http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf. பார்த்த நாள்: January 29, 2013. 
  7. "Milos Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் January 29, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலொசு&oldid=3925565" இலிருந்து மீள்விக்கப்பட்டது