பதொம் (அலகு)

பதொம் (Fathom, சுருக்கம்: ftm) என்பது நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். பொதுவாக நீர்நிலை நீளங்களை அளக்க இது பயன்படும்.

பிரித்தானிய அலகுகளில் அல்லது அமெரிக்க மரபுவழி அலகுகளில் ஒரு பதொம் எனப்படுவது 2 யார் (6 அடி)களாகும்.[1] அடிப்படையில் அகல விரித்து நீட்டப்பட்ட மனிதனின் கைகளின் விரல் நுனிகளுக்கிடையிலான தூர அளவு இதுவாகும்.

பெயரீடு தொகு

பதொம் எனும் பெயர் பழைய ஆங்கிலச் சொல்லான fæðm என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருள் நீட்டி அகல விரிக்கப்பட்ட கைகள் என்பதாகும்.[2][3][4]

பன்னாட்டு பதொம் தொகு

ஒரு பதொம் என்பது:

1959 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, அவுத்திரேலியா, கனடா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன பன்னாட்டு யார் நீளத்தை 0.9144 மீட்டர் என வரையறுத்தது. அனைத்துலக முறை அலகுகளில் (SI) பத்தொம் அலகு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பிரித்தானிய பதொம் தொகு

பிரித்தானியப் படைத்துறை பதொம் என்பது கடல் மைல்(6080 அடி) ஒன்றின் ஆயிரத்தில் ஒரு பங்கு (6.08அடிஅல்லது 1.85 மீ) என வரைவிலக்கணம் செய்யும்.

மேற்கோள்கள் தொகு

  1. Encyclopædia Britannica eleventh edition 1911.
  2. Oxford English Dictionary, second edition, 1989;
  3. Joseph Bosworth; Thomas Toller (ed.) (1898). An Anglo-Saxon Dictionary. Oxford, England: Clarendon Press இம் மூலத்தில் இருந்து 2007-03-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070314093510/http://beowulf.engl.uky.edu/cgi-bin/Bosworth-Toller/ebind2html3.cgi/bosworth?seq=285. பார்த்த நாள்: 2011-12-26. 
  4. Fathom - Definition from the Merriam-Webster Online Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதொம்_(அலகு)&oldid=3219571" இலிருந்து மீள்விக்கப்பட்டது