தனூராய்

இந்திய நடிகை

தனூ ராய் என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில தமிழ், மலையாள, வங்காள, கன்னட படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாஸ் , ஹீரோ போன்ற படங்களில் இவர் ஆடிய குத்தாட்டங்களுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார். மலையாள திரைப்படமான ஈ ஆடுதா கலத்து என்ற படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்துக்காக அறியப்படுகிறார்..

தனூராய்
பிறப்புதனூராய்
26 திசம்பர் 1980 (age 39)
இந்திய ஒன்றியப், கொல்கத்தா
மற்ற பெயர்கள்தனூ ராய், தனுஸ்ரீ கோஷ்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2001-2013, 2017

தொழில்

தொகு

தனு ராய் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் வணிகவியல் பட்டதாரியாவார். 2001 ஆம் ஆண்டில் பூரி ஜெகன்நாத்தின் இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்தம் மற்றும் மனசந்தா நுவ்வே போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.[1] பின்னர் அவனு நிஜம், கோடி ராமகிருஷ்ணாவின் கீலுகுர்ரம். போன்ற படங்களில் தோன்றினார். பின்னர், இவர் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சத்யம், மாஸ், ந,[2] வியலவாரி கயலு,[3] பெல்லிகனி பிரசாத்[4] உள்ளிட்ட படங்களில் பல குத்தாட்டப் பாடல்களுக்கு ஆடினார்.

இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை பாஷோ நா, இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து மனசந்தா நுவே படத்தின் மறுஆக்கமான மோனர் மஜோ தும்ஹி என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். இது தெலுங்கு திரைப்படமான மரோ சரித்ராவின் மறுஆக்கமாகும். முன்தாக இதற்கு பிரேம சரித்ரா என்று பெயரிடப்பட்டிருந்தது. இவர் நடித்த முதல் கன்னடப் படம், பிரீத்தி மடாபாரோ, ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது.[5] தமிழில் இவர் இன்றுI படத்திலும் இந்தி திரைப்படமான ஹம்ரஸ் படத்தின் தமிழ் மறுஆக்கமான கிரிவலம்,ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் 2012 ஆம் ஆண்டு ஈ அடுத காலத்து என்ற திரைப்படத்தின் வழியாக மலையாளத்தில் தனுஸ்ரீ கோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். படத்தில் 10 வயது சிறுவனின் தாயான மாதுரி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[6] ஒரிசாவில், இவர் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார், அங்கு ஒரு கிராமத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார்.

இவரது வரவிருக்கும் படமான அமர் பாபுவின் அலா ஜரிகிண்டி ஓகக ரோஜு, இது 2006 ஆம் ஆண்டய பிரித்தானிய குற்றவியல் நகைச்சுவை படமான பிக் நத்திங்கின் தெலுங்கு மறுஆக்கம் ஆகும்.[7] ஹாஷிம் மாரிகரின் முன்னோட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் இவர் நடிக்க படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நாச்சோ ரே [8] மற்றும் ஹம்மா ஹம்மா ஆகியவற்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் ஸ்ராவணி தெலுங்கு
ஆனந்தம் தீபிகா தெலுங்கு
மனசந்தா நுவ்வே ஸ்ருதி தெலுங்கு
2003 இன்று ஜெனிஃபர் தமிழ்
சத்யம் தெலுங்கு சிறப்பு தோற்றம்
மோனர் மஜே துமி பெங்காலி
2004 அவனு நிஜாமே ருச்சிதா தெலுங்கு
மேகம் தெலுங்கு
நோ தெலுங்கு சிறப்பு தோற்றம்
மாஸ் தெலுங்கு சிறப்பு தோற்றம்
பெல்லிகனி பெல்லம் அவதுண்டி தெலுங்கு
2005 கீலு குர்ரம் தெலுங்கு
பிரயாத்னம் தெலுங்கு
கிரிவலம் பிரியா தமிழ்
உயிர் உள்ளவரை தமிழ்
மேகமலா - ஓ பெல்லம் கோலா மேகமலா தெலுங்கு
நம்மண்ணா கன்னடம் சிறப்பு தோற்றம்
ல்வ ஸ்டோரி ஸ்வப்னா கன்னடம்
2007 அகாரி பகே தெலுங்கு
வியலவாரி கயலு தெலுங்கு சிறப்பு தோற்றம்
ருத்ரமணி தெலுங்கு
2008 பெல்லிகனி பிரசாத் தெலுங்கு சிறப்பு தோற்றம்
ஹீரோ தெலுங்கு சிறப்பு தோற்றம்
2011 கதா ஸ்கிரீன்பிளே தர்ஷகத்வம் அப்பலராஜு சரளா தெலுங்கு சிறப்பு தோற்றம்
2012 ஈ ஆதுதா காலத்து மாதுரி குரியன் மலையாளம்
ஆலா ஜரிகிண்டி ஓகா ரோஜு தெலுங்கு
2013 ஒரிசா மீரா பாய் மலையாளம்
டி கம்பெனி ஜரீனா முகமது மலையாளம்
பிரிவியூ மலையாளம்
ஓ மஞ்சுலா கத தெலுங்கு
பால்யகலசகி சப்னம் மலையாளம் [9]
2017 ஜெமினி அனுஸ்ரீ மலையாளம்
பிரச்சாயி ராதிகா நாயர் மலையாளம் படப்பிடிப்பில்

குறிப்புகள்

தொகு

 

  1. "Telugu Cinema Etc". Idlebrain.com. 2002-06-18. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  2. "No - Telugu cinema Review - Taraka Ratna, Chaya Singh - Pappu". Idlebrain.com. 2004-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  3. "Uday Kiran- Second Innings". Sify.com. 2007-02-15. Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  4. "Pellikani Prasad review: Pellikani Prasad (Telugu) Movie Review - fullhyd.com". Movies.fullhyderabad.com. 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  5. "Dhyaan brimming with happiness - Kannada Movie News". Indiaglitz.com. 2006-02-01. Archived from the original on 2006-02-10. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  6. TNN 17 Dec 2012, 12.00AM IST (2012-12-17). "Tanushree to play a social activist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214211/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview. 
  7. "I won't call it an item number: Tanushree". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-11-05 இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214002/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-05/news-and-interviews/34907819_1_telugu-mollywood-debut. 
  8. neeraja murthy (2010-11-07). "Dance baby dance". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article871515.ece. 
  9. "Tanushree to play a freedom fighter - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/malayalam/news-and-interviews/Tanushree-to-play-a-freedom-fighter/articleshow/26633701.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனூராய்&oldid=4114164" இலிருந்து மீள்விக்கப்பட்டது