தன்னினப்படுகொலை

தன்னினப்படுகொலை (Autogenocide) என்பது அரசாங்கம் அல்லது சொந்த மக்கள் அந்நாட்டின் குடிமக்களை இனப்படுகொலை செய்து அழிக்கும் செயலாகும்.[1] தன்னினம் (auto) என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள தற்சுட்டு பதிலிடு பெயரில் இருந்தும், படுகொலை (genocide) என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள இனம், பழங்குடி என்னும் பொருளில் இருக்கும் (genos) என்ற சொல்லில் இருந்தும், இலத்தீனில் கொல் என்னும் பொருளைத் தாங்கியிருக்கும் (cidere) என்ற சொல்லில் இருந்தும் (Autogenocide) , தன்னினப்படுகொலை என்ற சொல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றவர்கள் இனப்படுகொலைச் செயலில் ஈடுபடும் போது அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல, கம்போடிய கெமர் ரூச் அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒப்பிட்டு அடையாளப்படுத்திக் கூறுவதற்காகவே 1970 களின் பிற்பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இசுரேலிய இச்யீவிசு மக்களையும் மற்றும் இந்தோ ஐரோப்பிய இன சிலாவிக் மக்கள் இனத்தையும் செருமனியின் நாசிப் படையினர் கொன்று குவித்தபோது இச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2]

கெமர் ரூச்சின் தன்னினப்படுகொலை தொகு

கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னில், சாவ் பொனிய யாட் பள்ளியானது, [3] கெமர் ரூச் (1975-1979) காலத்தில் கொடுஞ்சிறையாக மாற்றப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், இப்பள்ளியின் ஐந்து கட்டிடங்களின் வகுப்பு அறைகள், சிறு சிறு கைதியறையாக மாற்றப்பட்டன. [4] இப்பள்ளியின் பெயரானது எஸ்-21 (Security Prison 21 = S-21) என மாற்றப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அந்நாடு முழுவதும் 150 சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. [5] இச்சிறைச்சாலைகள் டுவல் செலெங் என கிமெர் மொழியில் அழைக்கப்பட்டன. தமிழில் இதன் பொருள் நஞ்சு மரங்களின் மலை அல்லது "நச்சேற்ற மலை" எனலாம். இச்சிறைச்சாலை மனிதப்படுகொலை செய்யப்பட்டது. [6] இதுபோன்ற நாடு முழுவதும் 150 சிறைகளிலும், மனிதப்படுகொலைகள் செய்யப்பட்டன. சிறைச்சாலைகளைச் சுற்றிலும் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு, அதன் வழியாகவும் நிறைவேற்றப்பட்டன. மிகக்கடுமையான சித்ரவதைக் கூடமும் அமைக்கப்பட்டு, கொலைகளைச் செய்தனர்.. இவ்விணையத்தில், கம்போடிய தன்னினப் படுகொலைகள் தொடர்புடைய, பல வரலாற்று ஆவணங்களைக் காணலாம். [7][8]

அமெரிக்கர்களின் தன்னினப்படுகொலை தொகு

அமெரிக்கர்களின் தன்னினப்படுகொலைகள் மிகவும் வெளிப்படையான சட்டத்தாலும், பொது ஊடகங்களாலும் நடைபெற்றன. இவ்வாறு சட்டப்பூர்வமாக இறந்தவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தாலும், இவர்கள் அங்கு அடிமைகளாகப் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் வாழ்க்கை நடத்தி இருந்தனர். பணக்காரர்களும், அதிகாரம் கொண்டவர்களும் தங்களுடைய ஆளுமைத்திறனைக் காட்டவும், வருமானத்தைக் கட்டிக்காக்கும் இதனை செய்தனர். [9] கிரிகெரி. எச். சுடான்டன் என்ற அமெரிக்க ஆய்வுப் பேராசிரியர் படுகொலைகள் நடத்தப்படுவதை ஆராய்து, அதனை எட்டு நிலைகளாக நடக்கிறது என ஒரு கோட்பாட்டை விளக்கினார். அக்கோட்பாட்டின் அடிப்படையில் அதனை தடுக்கலாமென்று எடுத்துரைத்தார்.[10]

படுகொலை கோட்பாட்டின் நிலைகள் தொகு

பெண் ஆளுமை செய்கின்ற, தாய் உரிமை முறை (matriarchal system) சமூகத்தினரில், இது நடைபெறுவதில்லை. ஆண் ஆளுமை செய்கின்ற, தந்தையாட்சிக் கொள்கை சமூகத்தினரிடையே( patriarchalism) இது நடைபெறுகிறது. தனியொருவரைக் கொல்லாதல் என்பது படுகொலை என்றாகிறது. பல மனிதர்களைச் சட்டப்படியாக கொத்தாகக்கொல்லுதலை, தன்னினப்படுகொலை எனலாம். இதற்கு சமூக ஊடகங்களும் துணை நிற்கின்றன.[11]

  1. தீர்மானம்: சமூகத்தின் மேல்தட்டு மக்களால் இது தீர்மானிக்கப்படுகிறது. அவர்களின் ஆளுமைத்திறனையும், பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த/மேம்படுத்த இது நிகழ்கிறது.
  2. இனவகை: சமூகப் பிரிவுகள் சாதி, மதம், மொழி, நாடு அடிப்படையில் மக்கள் குழுக்களாகப் பிரிகின்றனர். அமெரிக்காவில் பணக்கார வகுப்பு (plutocracy)அடிப்படையில் பிரிகின்றனர்.
  3. குறியாக்கம்: ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினை அடையாளமிட, குறிகளால் குறிப்பிட்டு, செய்திகளை பரப்புகின்றனர். இது மேலும், பிளவினையும், குழுமச்செறிவையும் அதிகரிக்கிறது.
  4. மனிதஉரிமை: தான் குழு அல்லாதவருக்கு பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற இயல்பு/சட்டம்
  5. மீ எதார்த்தம்: இந்நிலை (surrealism)யானது ஊடகங்களால் திரும்ப, திரும்ப புணர்வுகள் கூறப்பட்டு, எதார்த்த நிலையை மாற்றுகிறது.
  6. நடுநிலை: உண்மையை எதிர்த்து கூறும் இயல்பற்று நடுநிலை பேணுதல் என்று மக்களை ஒதுக்குதல். உள்ள நிலையை காப்பறுதல் (the status quo)
  7. அணியமாதல்: கிராமப்புற ஈடுபட்டாளர்களையும், பாதிப்பு அடைந்தவர்களையும் மனதளவில் பழிவாங்க, வாய்ப்புக்காகக் காத்திருக்கும் படி செய்தல்.
  8. வேரறுத்தல்:மறைமுகமாக அவர்களின் தேவைகளைத் தடுத்தல், மனதளவில் நோகசெய்தல் ; சாகலாம் என்ற எண்ணத்தை தூண்டல் ("weathering away")
  9. மறுத்தல்: இது அமெரிக்காவில் அதிகம். மறைமுகமாக குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சமூக பாதுகாப்பு தராது இருத்தல். சட்டவழியே இப்பாதுகாப்பை அதிகப்படுத்தினால், ஆண்டுதோறும் ஒரு இலட்சம் நபர்கள் முன் வாழ்நாள் இறப்புக்கு ஆளாக மாட்டர்கள் என்றும் உரைக்கின்றனர்.[12]

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னினப்படுகொலை&oldid=3488365" இலிருந்து மீள்விக்கப்பட்டது