தன்னைத்தானுண்ணல்

தன்னைத்தானுண்ணல் (autophagy) என்பது உயிரணுக்களில் காணப்படும் தேவையற்ற, மற்றும் தொழிற்படாமல் இருக்கும் கூறுகளை அகற்றுவதற்காக இயற்கையாக நிகழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையாகும்.[1] இதன்மூலம் ஒழுங்கான முறையில் சிதைவுகளை நிகழ்த்தி, உயிரணுக் கூறுகளின் மீள்சுழற்சிக்கு உதவுகின்றது.[2][3]

(A) தன்னைதானுண்ணலை விளக்கும் படம்; (B) இலத்திரன் நுண்ணோக்கியினூடாகத் தெரியும் பழ ஈயின் குடம்பியில் இருக்கும் கொழுப்பிழையத்தில் காணப்படும் தன்னைத்தானுண்ணல் அமைப்புக்கள்; (C) பசியாயிருக்கும் எலியின் ஈரலில் தெரியும் ஒளிரும் மூலக்கூறுகள்

இது மூன்று வகைப்படும். குறிப்பிட்ட 3 வகை தன்னைத்தானுண்ணல் வகைகளாவன பெரு தன்னைத்தானுண்ணல், நுண் தன்னைத்தானுண்ணல், சப்பரோன் தூண்டல் தன்னைத்தானுண்ணல் ஆகியனவாகும். அந்தச் செயல்முறைகள், இவ்வியல்புக்குக் காரணமான மரபணுக்கள் மூலமும், அவற்றுடன் தொடர்பான நொதியங்கள் மூலமும் செயல்படுத்தப்படும்.[4][5][6][7][8]

  • பெரு தன்னைத்தானுண்ணல்: இதில், இலக்குக்குள்ளாகும் உயிரணுக்கணிகத்தின் அல்லது குழியவுருவின் தன்னைத்தானுண்ணல் செயல்முறையின்போது, உயிரணுக்களின் உள்ளே காணப்படும் சேதமடைந்த, தேவையற்ற பகுதிகளைச் சுற்றி தான்உண்மெய்யம் என்ற ஒரு இரட்டை மென்சவ்வு உருவாக்கப்படும். இதனால் குறிப்பிட்ட பகுதி, ஏனைய உயிரணுக்கணிகத்தின் பகுதிகளிலிருந்து பிரிக்கப்படும்.[4][5] பின்னர் பிரிக்கப்பட்ட, மென்சவ்வால் சூழப்பட்ட பகுதியானது, உயிரணுவின் குழியவுருவில் காணப்படும் லைசோசோமை அடைந்து, அதனுடன் இணைந்துகொள்ளும். பின்னர் இணைவினால் தோன்றிய நுண்ணுறுப்பு அமில லைசோசோம் நீராற்பகுப்பின் வழியாக அழிக்கப்பட்டு, மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றது.[9][10][11] இந்தச் செயல்முறை முக்கியமாக சேதமடைந்த உயிரணு நுண்ணுறுப்புக்களையும், பயன்படுத்தப்படாத புரதக் கூறுகளையும் அழிப்பதற்கு உதவும். இந்த பெரு தன்னைத்தானுண்ணலானது, எந்த நுண்ணுறுப்பு தேர்வு செய்யப்பட்டு, இச்செயல்முறை மூலம் அழிக்கப்படுகின்றதோ, அதனைப் பொறுத்துப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இழைமணியில் எனில், இழைமணி உண்ணல் (mitophagy)[12], கொழுப்புத் துளிகளில் எனில் கொழுப்பு உண்ணல் (lipophagy)[13], பெரொக்சிசோம் மூலக்கூற்றில் எனில் பெரொக்சிசோம் உண்ணல் (pexophagy)[14], பசுங்கனிகத்தில் எனில் பசுங்கனிகம் உண்ணல் (Chlorophagy)[15], இரைபோசோமில் எனில் இரைபோசோம் உண்ணல் (Ribophagy)[16] போன்றன இவற்றில் சிலவாகும்.
  • நுண் தன்னைத்தானுண்ணல் (Microautophagy): இங்கு தேவையற்ற கூறுகள், நேரடியாக இலைசோமினால் விழுங்கப்படும்.[17] இலைசோமின் மென்சவ்வில் ஏற்படும் உள்மடிவு, அல்லது புடைப்பு அமைப்புக்களால், இவ்வகை தன்னைத்தானுண்ணல் நிகழும்.[10]
  • சப்பரோன் தூண்டல் தன்னைத்தானுண்ணல் (Chaperone-mediated autophagy): இது ஒரு சிக்கலான, வரையறுக்கப்பட்ட முறையிலான தன்னைத்தானுண்ணல் ஆகும்.[10][18] இது மிகவும் தேர்வுசெய்து நிகழும் முறையாகவும், தனித்தனி மூலக்கூறுகளைக் கண்டறிவதற்காக சில குறிப்பிட்ட பொறிமுறையைக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு தனித்தனியான மூலக்கூறுகள் சப்பரோனுடன் இணைக்கப்பட்டு,[11] பின்னர் இலைசோமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு[6][7] அழிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Autophagy revisited: a conversation with Christian de Duve". Autophagy 4 (6): 740–3. August 2008. doi:10.4161/auto.6398. பப்மெட்:18567941. 
  2. "Autophagy: renovation of cells and tissues". Cell 147 (4): 728–41. November 2011. doi:10.1016/j.cell.2011.10.026. பப்மெட்:22078875. 
  3. "Choose Delicately and Reuse Adequately: The Newly Revealed Process of Autophagy". Biological & Pharmaceutical Bulletin 38 (8): 1098–103. 2015. doi:10.1248/bpb.b15-00096. பப்மெட்:26235572. 
  4. 4.0 4.1 "The role of Atg proteins in autophagosome formation". Annual Review of Cell and Developmental Biology 27 (1): 107–32. 10 November 2011. doi:10.1146/annurev-cellbio-092910-154005. பப்மெட்:21801009. 
  5. 5.0 5.1 "Autophagosome formation: core machinery and adaptations". Nature Cell Biology 9 (10): 1102–9. October 2007. doi:10.1038/ncb1007-1102. பப்மெட்:17909521. 
  6. 6.0 6.1 "Autophagy, mitochondria and oxidative stress: cross-talk and redox signalling". The Biochemical Journal 441 (2): 523–40. January 2012. doi:10.1042/BJ20111451. பப்மெட்:22187934. பப்மெட் சென்ட்ரல்:3258656. http://www.biochemj.org/bj/441/0523/bj4410523.htm. 
  7. 7.0 7.1 "Autophagosome formation in mammalian cells". Cell Structure and Function 27 (6): 421–9. December 2002. doi:10.1247/csf.27.421. பப்மெட்:12576635. 
  8. "Mechanisms of mitophagy". Nature Reviews. Molecular Cell Biology 12 (1): 9–14. January 2011. doi:10.1038/nrm3028. பப்மெட்:21179058. 
  9. "Autophagy in immunity and inflammation". Nature 469 (7330): 323–35. January 2011. doi:10.1038/nature09782. பப்மெட்:21248839. 
  10. 10.0 10.1 10.2 "Lysosomal pathways to cell death and their therapeutic applications". Exp. Cell Res. 318 (11): 1245–51. July 2012. doi:10.1016/j.yexcr.2012.03.005. பப்மெட்:22465226. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0014-4827(12)00132-2. 
  11. 11.0 11.1 Homma, K.S. (2011). "List of autophagy-related proteins and 3D structures". Autophagy Database 290 இம் மூலத்தில் இருந்து 2012-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120801130843/http://tp-apg.genes.nig.ac.jp/autophagy/list/GeneList.html. பார்த்த நாள்: 2012-10-08 
  12. "Mitophagy: mechanisms, pathophysiological roles, and analysis". Biological Chemistry 393 (7): 547–64. July 2012. doi:10.1515/hsz-2012-0119. பப்மெட்:22944659. 
  13. "Regulation of lipid stores and metabolism by lipophagy". Cell Death and Differentiation 20 (1): 3–11. January 2013. doi:10.1038/cdd.2012.63. பப்மெட்:22595754. 
  14. "Pexophagy: the selective degradation of peroxisomes". International Journal of Cell Biology 2012: 1–18. 2012. doi:10.1155/2012/512721. பப்மெட்:22536249. 
  15. "Chlorophagy: Preventing sunburn". Nature Plants 3 (3): 17026. March 2017. doi:10.1038/nplants.2017.26. பப்மெட்:28248315. 
  16. "Systematic analysis of ribophagy in human cells reveals bystander flux during selective autophagy". Nature Cell Biology 20 (2): 135–143. February 2018. doi:10.1038/s41556-017-0007-x. பப்மெட்:29230017. 
  17. Castro-Obregon, Susana (2010). "The Discovery of Lysosomes and Autophagy". Nature Education 3 (9): 49. https://www.nature.com/scitable/topicpage/the-discovery-of-lysosomes-and-autophagy-14199828. 
  18. "The chaperone-mediated autophagy receptor organizes in dynamic protein complexes at the lysosomal membrane". Molecular and Cellular Biology 28 (18): 5747–63. September 2008. doi:10.1128/MCB.02070-07. பப்மெட்:18644871. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னைத்தானுண்ணல்&oldid=3675686" இலிருந்து மீள்விக்கப்பட்டது