தன்யால் (உசைன் ஷாஹி வம்சம்)
வங்காள இளவரசர் தன்யால் (Danyal), துலால் காசி என்றும் அழைக்கப்படும் இவர், வங்காள சுல்தான் அலாவுதீன் உசைன் சாவின் மூத்த மகனாவார். இவர் தனது தந்தையின் சார்பாக உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்தார். 1495 ஆம் ஆண்டில், தன்யால் பீகாரில் தில்லி சுல்தானகத்துடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் வங்காள சுல்தானகத்தின் கீழ் பீகாரின் பிராந்திய ஆளுநராக பணியாற்றினார். 1498 இல் காமதா கைப்பற்றியதைத் தொடர்ந்து இவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் [1]
தன்யால் துலால் காசி | |
---|---|
ஷா | |
பீகாரின் ஆளுநர் | |
ஆட்சிக்காலம் | 1495–1498 |
வங்காள சுல்தானகத்தின் கீழ் காமதாவின் ஆளுநர் | |
ஆட்சிக்காலம் | 1498- |
பின்னையவர் | முசுந்தர் காசி |
பிறப்பு | தன்யால் பின் உசேன் வங்காள சுல்தானகம் |
இறப்பு | காமதா இராச்சியம் |
மரபு | உசைன் ஷாஹி வம்சம் |
தந்தை | அலாவுதீன் உசைன் சா |
மதம் | சுன்னி இசுலாம் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுதன்யால் 15 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தில் ஒரு பிரபுத்துவ பெங்காலி முஸ்லிம் சன்னி சையத் குடும்பத்தில் பிறந்தார். [2] 1494 இல், வங்காளத்தின் பிரதம மந்திரியான இவரது தந்தை அலாவுதீன் உசைன் சா, சுல்தான் சம்சுதீன் முசாபர் சாவை தோற்கடித்து சுல்தானகத்தின் புதிய உசைன் ஷாஹி வம்சத்தை நிறுவினார். தன்யால் உசைன் ஷாவின் மூத்த மகன் என்று கருதப்படுகிறது. இவரது பதினேழு சகோதரர்கள் மற்றும் குறைந்தது பதினொரு சகோதரிகளில், நஸ்ரத் மற்றும் மக்மூத் ஆகிய இருவரும் வங்காளத்தின் எதிர்கால சுல்தான்களாயினர்.
இளவரசராக
தொகுவங்காள சுல்தானகத்தின் இளவரசராக, தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தன்யால் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டார். தில்லி சுல்தானகத்தின் ஆப்கானிய ஆட்சியாளரான சிக்கந்தர் லௌதி, 1495 இல் வங்காளத்தின் மீது ஓர் போரை வழிநடத்தினார், இதன் விளைவாக, தோற்கடிக்கப்பட்ட ஜான்பூர் சுல்தானகத்தின் உசைன் சா சர்கிக்கு தன்யாலின் தந்தை அடைக்கலம் கொடுத்தார். லௌதியின் படைகளுக்கு எதிராக வங்காளப் படைக்கு தலைமை தாங்க தன் தந்தையால் தன்யால் நியமிக்கப்பட்டார். [1] இரு படைகளும் பர்க் என்ற இடத்தில் சந்தித்தன. போரைத் தவிர்க்க தன்யால் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார். இதனால் வங்காளத்தின் மீது நடக்க இருந்த படையெடுப்பிலிருந்து காப்பாற்றினார். இந்த ஒப்பந்தம் பர்க் நகரத்தை இரண்டு சுல்தான்களின் அதிகாரப்பூர்வ எல்லையாக மாற்றியது. [3]
கி.பி.1497-1498 இல், பீகாரில் உள்ள முங்கர் கோட்டையில் ஒரு பெட்டகத்தை கட்டுவதற்கு தன்யால் பொறுப்பேற்றார். இதற்கான கல்வெட்டு சா நாபா அருகிலுள்ள தர்காவின் கிழக்கு சுவரில் ( பிர் நாஃபா என்றும் அழைக்கப்படுகிறது) தொங்கவிடப்பட்டது . தன்யாலைப் பற்றிய உள்ளூர் கதைகளும் பரவலாக உள்ளன. இறுதியில் தர்காவையும் தன்யால் கட்டினார் என்று பொதுவாக கருதப்படுகிறது.
1498 ஆம் ஆண்டில், கென் வம்சத்தின் மன்னர் நீலாம்பருக்கு எதிராக சா இசுமாயில் காசியின் தலைமையில் நடந்த காமதா போரில் பங்கேற்றார். [4] போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இவரது தந்தை இவரை புதிதாக கைப்பற்றிய பிராந்தியத்தின் ஆளுநராக நியமித்தார். [5]
ஜூலை 1500இல் தியாகத் திருநாள் அன்று வங்காளத்தில் தன்யால் ஒரு சபை மசூதியைக் கட்டினார். அருப் நாராயண் தலைமையிலான அசாமிய புயான்கள் இவருக்கு எதிராக ஒரு போரை நடத்தும் வரை தன்யால் காமதாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தப் போரில் , புயான்கள் தன்யாலையும் அவரது அதிகாரிகளையும் கைது செய்து கொன்றனர், இதனால் 1509க்கு சிறிது காலத்திற்கு முன்பு சுல்தானகத்தின் குறுகியகால ஆட்சி முடிவுக்கு வந்தது [6] [7] [8] காமரூபத்தில் வங்காளத்தின் பிரதிநிதியாக தன்யாலுக்குப் பிறகு முசுந்தர் காசி பதவியேற்றார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sarkar (1973).
- ↑ "[H]e identified himself so whole-heartedly that his alien origin was forgotten" (Sarkar 1973)
- ↑ Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.143, 192
- ↑ Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.215-20
- ↑ Desai. Bharatiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8090-007-5.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ (Nath 1989)
- ↑ "But the rule of the Muslims was short. The Bhuyans made a united attack on Daniel's garrison and destroyed it to the last man."(Baruah 1986)
- ↑ (Sarkar 1992)
உசாத்துணை
தொகு- Baruah, S L (1986), A Comprehensive History of Assam, New Delhi: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.
- Nath, D. (1989), History of the Koch Kingdom, C. 1515-1615, Mittal Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170991099
- Sarkar, J N (1992). "Chapter IV: Early Rulers of Koch Bihar". In Barpujari, H. K. (ed.). The Comprehensive History of Assam. Vol. 2. Guwahati: Assam Publication Board.
- Sarkar, Jadunath, ed. (1973) [First published 1948]. "VII: The Husain Shāhī Dynasty". The History of Bengal. Vol. II: Muslim Period, 1200–1757. Patna: Academica Asiatica. இணையக் கணினி நூலக மைய எண் 924890.