தன்வி கண்ணா

தன்வி கண்ணா (Tanvi Khanna பிறப்பு:23 ஜூலை 1996) ஓர் இ்ந்தியச் சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார்.[1] இவர் செப்டம்பர் 2023 இல் இந்திய பெண்கள் சுவர்ப்பந்து தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்தியாவின் சிறந்த சுவர்ப்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2][3]

தன்வி கண்ணா
தேசம்இந்தியா
பிறப்பு23 சூலை 1996 (1996-07-23) (அகவை 28)
புது தில்லி, இந்தியா
உயரம்1.70 மீ
எடை57 கிகி
அதி கூடிய தரவரிசை69 (செப்டம்பர் 2023)
பதக்கத் தகவல்கள்

வாழ்க்கை

தொகு

தன்வி 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார், மேலும் பெண்கள் அணி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4] 2019 மகளிர் ஆசிய தனிநபர் வாகையாளர்ப் போட்டியில் பங்கேற்றார் மற்றும் காலிறுதிக்கு முன்னேறினார்.[5] காலிறுதிப் போட்டியில் சக தேசிய சுவர்ப்பந்து வீரர்களில் ஒருவரான ஜோஷ்னா சின்னப்பாவிடம் தோல்வியடைந்தார்.

தன்வி கண்ணா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மகளிர் சுவர்ப்பந்து அணியிலும் இடம் பெற்றிருந்தார்.[6] செப்டம்பர் 2023 இல், தரவரிசையில் இந்தியாவின் முதன்மை சுவர்ப்பந்து வீராங்கனையானார், மேலும் உலகத் தரவரிசையில் 69 வது இடத்தைப் பிடித்தார். [7][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tanvi Khanna - Professional Squash Association". psaworldtour.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  2. "Tanvi Khanna - Women's Squash". Columbia University Athletics (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  3. "Squash Info | PSA World Squash Rankings: Tanvi Khanna | Squash". www.squashinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  4. Scroll Staff. "Asian Individual Squash Championship: Tanvi Khanna sets up quarter-final clash with Joshna Chinappa". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  5. Sportstar, Team. "Asian squash: Joshna, Saurav storm into semifinals". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  6. "Velavan Senthilkumar, Akanksha Salunkhe clinch Jansher Khan Canberra Open squash titles" (in en). thebridge.in. 27 August 2023. https://thebridge.in/squash/velavan-senthilkumar-akanksha-salunkhe-clinch-jansher-khan-canberra-open-squash-titles-43588?infinitescroll=1. 
  7. Keerthivasan, K. (6 September 2023). "Tanvi Khanna is India No. 1 in world squash rankings" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/tanvi-khanna-is-india-no-1-in-world-squash-rankings/article67277990.ece. 
  8. "World Squash Rankings: Tanvi Khanna dethrones Joshna Chinappa to become the new India No. 1" (in en-us). sportskeeda.com. 7 September 2023. https://www.sportskeeda.com/squash/news-world-squash-rankings-tanvi-khanna-dethrones-joshna-chinappa-become-new-india-no-1. 
  9. "Tanvi Khanna is India No. 1 in world squash rankings". inkl. 6 September 2023. https://www.inkl.com/news/tanvi-khanna-is-india-no-1-in-world-squash-rankings. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வி_கண்ணா&oldid=3904615" இலிருந்து மீள்விக்கப்பட்டது