தன் சிங் குஜ்ஜர்

தன் சிங் குர்ஜார் ( Dhan Singh Gurjar) தன்னா சிங் எனவும் அழைக்கப்படும், இவர் மீரட்டின் இந்திய கொத்தவால் (காவல்துறைத் தலைவர்) ஆவார். இவர் 1857 சிப்பாய் கிளர்ச்சியில் பங்கேற்று மீரட்டில் உள்ள பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக ஆரம்ப நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

தன் சிங் குஜ்ஜர்
மீரட் தன் சிங் குஜ்ஜரின் நினைவுச்சிலை
பிறப்பு1820[சான்று தேவை]
Panchali, மீரட், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 சூலை 1857(1857-07-04) (அகவை 36–37)[சான்று தேவை]
மீரட், பிரித்தானிய இந்தியா
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் பஞ்ச்லி அல்லது பஞ்சாலி கிராமத்தில் பிறந்தார். [1] மீரட்டில் உள்ள குஜ்ஜர்கள் பாரம்பரியமாக ஒரு சக்திவாய்ந்த சமூகமாக இருந்தனர். அவர்கள் இப்பகுதியில் நிலத்தையும், கால்நடை வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தினர். இருப்பினும், நிறுவனத்தின் ஆட்சியின் போது, அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக நம்பியிருந்த நிலத்தின் பெரும்பகுதி ஜாட் போன்ற பிற குழுக்களுக்கு ஏலம் விடப்பட்டது. பிரித்தானிய அதிகாரிகள் அவர்களை குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தினர். மேலும் அவர்கள் இந்தியாவில் மிகவும் கொடூரமான மனிதர்கள் என்றும் வர்ணித்தனர் ". [2]

1857 கிளர்ச்சியில் பங்கு தொகு

 
1857 இராணுவ கிளர்ச்சியின் ஒரு பார்வை

1857 மே 10 அன்று, 1857 எழுச்சியின் போது மீரட்டில் கிழக்கிந்திய நிறுவன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. நகரின் கொத்தவாலாக, நகரத்தை பாதுகாப்பதே இவரது பணியாகும். இருப்பினும், இவரது அதிகாரிகள் பலர் அந்த நாளில் கிளர்ச்சியில் சேர அல்லது கிளர்ச்சியாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இவரது படையை விட்டு வெளியேறினர். நகரத்தில் பெரிய அளவிலான கலவரமும், கொள்ளையும், கொலைகளும் நடந்தன. குதிரைகளைத் திருடியதற்காக இவரது இரண்டு காவலர்கள் இரண்டு குஜ்ஜர்களைக் கைது செய்தபோது, கிளர்ச்சியாளர்களிடமிருந்து பழிவாங்கலுக்குப் பயந்து கைது செய்ய வேண்டாம் என்று தடுத்தார். ஒருநாள் நள்ளிரவில், ஒரு பெங்காலியின் வீடு ஆயுதமேந்திய குஜ்ஜர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவால் சூறையாடப்பட்டது. இவரது காவலர்கள் கொள்ளையடித்தவர்களில் இருவரை கைது செய்தனர். ஆனால் இவர் குஜ்ஜர்களுக்கு எதிராக சக்தியைப் பயன்படுத்துவதைத் தடுத்தார். குழு வெளியே செல்ல ஒப்புக்கொண்டதை அடுத்து, இவர் இருவரையும் கொள்ளையிலிருந்து விடுவித்தார். [2]

இதற்குப் பின்னர் இவரும் ஒருசில காவலர்களும் தங்கள் பணியிலிருந்து வெளியே வந்தனர். [2] இவர் மீரட் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்களை நகர சிறைக்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, கிளர்ச்சியாளர்கள் சிறையில் இருந்து 839 கைதிகளை விடுவித்தனர். டெல்லி முற்றுகையில் பங்கேற்ற கிளர்ச்சியாளர்களில் இந்த கைதிகளும் அடங்குவர். [3]

நினைவு தொகு

  • மீரட்டில் சதர் காவல் நிலைய வளாகத்தில் கொத்தவால் தன் சிங் குஜ்ஜரின் சிலையை உத்தரபிரதேச காவல் இயக்குநர் ஓ.பி. சிங் திறந்து வைத்தார். [4] [5]

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்_சிங்_குஜ்ஜர்&oldid=3035846" இருந்து மீள்விக்கப்பட்டது