தபசு குமார் மாஜி
தபசு குமார் மாஜி (Tapas Kumar Maji) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில், பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பொருட்களின் வேதியியல் மற்றும் இயற்பியல் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.[1][2] மாஜி 1997-ல் புர்த்வான் பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியலில் முதுநிலை அறிவியல் பட்டமும், 2002-ல் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் சப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் (2003-05) முனைவர் பட்ட மேலாய்வினை முடித்தார்.
கௌரவங்களும் விருதுகளும்
தொகுமாஜிக்கு வழங்கப்பட்ட மரியாதைகள் மற்றும் விருதுகள்:[3]
- 2019ஆம் ஆண்டு வேதியியல் அறிவியலுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு[4]
- அரச வேதியியல் சமூக சகா (2019)
- இந்திய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் (2018) [5]
- அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளையின் மூத்த ஆராய்ச்சியாளருக்கான அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் சகா, பான், ஜெர்மனி (2015).
- பொருளறிவியல் ஆய்வு சமூகம், இந்தியாவின் அறிவியலில் பங்களிப்புக்கான பதக்கம் (2014)
- தேசிய அறிவியல் கழகம், இந்தியா - வேதியியலில் இசுகோபசு இளம் விஞ்ஞானி விருது (2012)
- மூன்றாம் உலக அறிவியல் அகாதமியின் (TWAS) இளையோருக்கான விருது (2012–2017)
- வேதியியல் தொடர்பு (கெமிக்கல் கம்யூனிகேஷன்ஸ்) ஆய்விதழ் (2011) வேதியியல் அறிவியலில் இளம் ஆய்வாளர்கள் கெளரவம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr Tapas Kumar Maji". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "Research@MOLMAT Lab". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Archived from the original on 8 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "Awards & Accolades". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
- ↑ "Awardee Details". Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology. CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ "Prof. Tapas Kumar Maji". Indian academy of Sciences. Indian academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- தபசு குமார் மாஜி publications indexed by Google Scholar
- ORCID
- Chemistry Tree
- publons