தபரனா கதே (தபராவின் கதை ) என்பது 1987 ஆம் ஆண்டு கிரீசு காசரவல்லி இயக்கத்தில் வெளிவந்த இந்திய கன்னட மொழித் திரைப்படமாகும். இது பூர்ணச்சந்திர தேஜஸ்வி இதே தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.[1]

தபரனா கதே
இயக்கம்கிரீசு காசரவள்ளி
தயாரிப்புகிரீசு காசரவள்ளி
கதைபூர்ணச்சந்திர தேஜச்வி
திரைக்கதைகிரீசு காசரவள்ளி
இசைஎல்.வைத்தியநாதன்
நடிப்புசாருஹாசன்
நளினி மூர்த்தி
ஆர்.நாகேசு
ஒளிப்பதிவுமது அம்பாட்
படத்தொகுப்புஎம்.என்.சுவாமி
விநியோகம்அபூர்வ சித்ரா
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கதைச்சுருக்கம்

தொகு

தபரனா கதே திரைப்படத்தின் கதை: காவலாள் பதவியில் இருக்கும் அரசு ஊழியரான தபரா ஷெட்டியின் கதை இதுவாகும். அவர் ஓய்வு பெறும் வரை அரசாங்கத்தில் பணியாற்றுகிறார். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள தொழிலாளி. தன்னை இவ்வளவு காலம் ஆதரித்த அமைப்பை மதிக்கிறார். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பிரச்சனைகள் எழுகின்றன.

தபரனா தனது ஓய்வூதிய பணத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒய்வு பெற்ற பின்பு, வயதான காலத்தில், தபரனா தான் பணியாற்றிய அதிகாரிகளை அணுகுகிறார். ஒரு சில அனுதாபிகளைத் தவிர, தபரனாவின் ஓய்வூதியத்தைப் பெற யாரும் உதவ முன்வரவில்லை. அவருடைய ஒரே துணையான, மனைவி,நீரிழிவு நோயால் பாதிக்கப்படும்போது நிலைமை மோசமடைகிறது. அவளுக்கு பாதத்தில் ஒரு புண் ஏற்படுகிறது. நீரழிவு குடலிறக்கமாகவும் முற்றுகிறது. தபரனா தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க தனது ஓய்வூதியத்தைப் பெற, தான்னால் முடிந்த எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறார். ஓய்வூதியம் அதுவரை கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவரது மனைவி இறந்துவிடுகிறார். அதன் பிறகு ஒருவழியாக ஓய்வூதியப் பணம் வருகிறது. விரக்தியின் உச்சநிலையில், தபரனா தனது உயர் அதிகாரிகளையும் தனது வாழ்க்கையை சீரழித்த அமைப்பையும் சபிக்கிறார்.

நடிகர்கள்

தொகு
  • தபரனா ஷெட்டியாக சாருஹாசன்
  • நளினா மூர்த்தி
  • சந்தோஷ் நந்தவனம்
  • ஹசக்ரு

சிறப்பம்சங்கள்

தொகு
  • திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ். தியோடர் பாஸ்கரன், Rediff.com இன் எல்லா காலத்திலும் சிறந்த பத்து இந்தியப் படங்களில் தபரனா கதையைத் தேர்ந்தெடுத்தார்.[2]
  • தபரனா தனது மனைவியின் அறுவை சிகிச்சையை நிர்வகிக்கத் தவறியபோது, விரக்தியின் ஒரு கணத்தில், அவர் உள்ளூர் இறைச்சிக் கடைக்காரரிடம் சென்று, தனது மனைவியின் காலை துண்டிப்பீர்களா என்று கேட்கிறார். இந்த சோகக் காட்சி பிரமாதமாக படமாக்கப்பட்டது.
  • கிரீசு காசரவள்ளியின் எல்லாப் படங்களையும் போலவே உச்சகட்ட காட்சி மற்றொரு சிறப்பம்சமாக இருந்தது. தபரா இறுதியாக தனது ஓய்வூதியத்தைப் பெறுகிறார். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது. அவருடைய ஒரே வாழ்க்கைத்துணை இவ்வுலகை விட்டுச் செல்கிறாள். அவரது அலுவலகத்தின் முன் நின்று, தபரனா அலுவலக ஊழியர்களை நோக்கி கத்துகிறார், மேலும் தனது மனைவியின் மரணத்திற்கு அவர்களே காரணம் என்றும் பழிசுமத்துகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள முடிகெரே என்ற இடத்தில் நடைபெற்றது

விருதுகள் மற்றும் திரையிடல்கள்

தொகு

தாஷ்கண்ட், நான்டெஸ், டோக்கியோ மற்றும் ரஷ்யாவின் திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் தபரனா கதே திரையிடப்பட்டது.

34வது தேசிய திரைப்பட விருதுகள் [3][4]

கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் 1986-87

மேற்கோள்கள்

தொகு
  1. "An Independence Day Story". Bangalore Mirror. 20 August 2019. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
  2. "India's Best Films: Theodore Bhaskaran".
  3. "34th National Film Awards". International Film Festival of India. Archived from the original on 5 February 2017.
  4. "Charu Hasan gets best actor award". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870502&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:NationalFilmAwardBestFeatureFilmவார்ப்புரு:Girish Kasaravalli

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபரனா_கதே&oldid=3954352" இலிருந்து மீள்விக்கப்பட்டது