பூர்ணசந்திர தேஜஸ்வி

கன்னட எழுத்தாளர்

பூர்ணசந்திர தேஜஸ்வி (Poornachandra Tejaswi) எனப்படும், குப்பாலி புட்டப்பா பூர்ணசந்திர தேஜஸ்வி, (செப்டம்பர் 8, 1938 - ஏப்ரல் 5, 2007 ) ஒரு முக்கிய கன்னட எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், வெளியீட்டாளர், ஓவியர், இயற்கை ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் கன்னட இலக்கியத்தின் "நவ்யா" காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது சிறுகதைத் தொகுப்பான அபச்சூரினா போஸ்ட் ஆபிசு மூலமாக, பண்டாயா எனப்படுகின்ற "எதிர்ப்பு இலக்கியத்தை" தோற்றுவித்தார். மேலும், இவர், 'ராஷ்டிரகவி குவெம்பு'வின் மகன் ஆவார்.

தனது எழுத்து வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டங்களில், தேஜஸ்வி கவிதைகள் எழுதினார். ஆனால் பின்னர் சிறுகதைகள், புதினங்கள் மற்றும் கட்டுரைகளில் கவனம் செலுத்தினார். பூர்ணசந்திர தேஜஸ்வி ஒரு தனித்துவமான எழுத்து பாணியைக் கொண்டுள்ளார். இது கன்னட இலக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. [1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தேஜஸ்வி 1938 செப்டம்பர் 8 ஆம் தேதி கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் குப்பலியில் பிறந்தார். இவர் "ராஷ்டிரகவி" குவெம்புவின் மகன் என்றாலும், அவர் தனது தந்தையின் நிழலில் இருந்து வெளியே வந்து சிறு வயதிலேயே தனது சொந்த பாணியை நிலைநிறுத்தினார். தீபாவளியை முன்னிட்டு பிரஜாவனி கன்னட செய்தித்தாள் நடத்திய போட்டியில் தேஜஸ்வி சிறந்த கதை விருதைப் பெற்றார். இவரது முதல் சிறுகதை "லிங்கா பண்டா" ஆகும்.

இந்தியாவின் உயர்மட்ட கல்லூரிகளில் ஒன்றான, மைசூர் மகாராஜா கல்லூரியில் கல்வியை முடித்த பின்னர், இயற்கையிலும் விவசாயத்திலும் ஆர்வம் இருந்ததால், காபி தோட்டத்தை வாங்கிய பின்னர் சிக்மகளூர் மாவட்டத்தின் முதிகேர் வட்டத்திற்கு குடிபெயர்ந்தார். இலக்கியம் தவிர ஓவியம், புகைப்படம் எடுத்தல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார்.

இவர் இயற்கையை ஆர்வமாகக் கற்றுக்கொண்டவராக இருந்தார். இவருக்குப் பிடித்த பொழுது போக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளில் சுற்றித் திரிவது ஆகும். இவர், ஏப்ரல் 5, 2007 அன்று, பிற்பகல் 2 மணிக்கு, இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, அவரது பண்ணை வீடான நிருத்தாராவில் இறந்தார். இது, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள முடிகேரேவில் உள்ளது. இறக்கும்போது, அவருக்கு வயது 69 ஆகும். இவருக்கு 2 மகள்கள் சுஸ்மிதா மற்றும் எஷானியே ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் மென்பொருள் தொழில் வல்லுநர்களாக உள்ளனர். இவரது மனைவி ராஜேஸ்வரி முடிகேரின் நிருத்தாராவில் தங்கியுள்ளார்.

இலக்கிய படைப்புகள் தொகு

தேஜஸ்வி கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், பயண இலக்கியம், நாடகங்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் உட்பட கிட்டத்தட்ட எல்லா வகையான இலக்கியங்களிலும் எழுதியுள்ளார். இயற்கையும் இயற்கையோடு தொடர்புடைய சம்பவங்களும் இவரது பெரும்பாலான படைப்புகளில் முக்கிய பாத்திரங்களை அனுபவிக்கின்றன. கன்னடத்தில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான தேஜஸ்வியின் படைப்புகள் தொடர்ந்து பிரபலமாக உள்ளன. பல அச்சிட்டுகளில் சென்று பெரும்பாலும் வாசகர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. [2] மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளில் பறக்கும் பல்லியைக் கண்டுபிடிக்கும் சாகசத்தில் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சியை சித்தரிக்கும் விதமாக இவரது புதினமான கார்வாலோ உள்ளது.

கன்னட இலக்கியத்தின் ஆழத்தை வளமாக்கும் தேஜஸ்வி பல ஆங்கில புத்தகங்களை கன்னடத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். அவரது பிரபலமான மொழிபெயர்ப்புகளில் கென்னத் ஆண்டர்சனின் வேட்டை பயணம் மற்றும் ஹென்றி சார்ரியரின் பாப்பிலோன்" ஆகியவை அடங்கும்.

தேஜஸ்வி 1962 இல், 24 வயதாக இருந்தபோது தனது முதல் புதினமான காடு மாத்து கரௌரியாவை எழுதினார். இந்த புதினம், 2012 ஆம் ஆண்டின் இறுதியில் முதல் முறையாக அச்சிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆரம்பத்தில் இந்த படைப்புக்கு நளினி என்று பெயரிட திட்டமிட்டிருந்தார். ஆனால் பின்னர் அதன் தற்போதைய தலைப்புக்கு செல்ல முடிவு செய்தார். கர்நாடகாவின் காடுகள் நிறைந்த மலைநாடு பகுதியில் உள்ள அவரது மனைவி ராஜேஸ்வரியின் தாய்வழி வீட்டிற்குச் சென்றபின், தேஜஸ்வி இந்த புதினத்தை எழுதத் தூண்டப்பட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரியால் கையெழுத்துப் பிரதி தயாரிக்கப்பட்டது. இந்த புதினத்தில், வடக்கு கர்நாடகாவிலிருந்து குடியேறிய பிணைக்கப்பட்ட தொழிலாளி லிங்கா, தொலைதூரமாக இருக்கும் மலைநாடு கிராமத்திற்குச் சென்று தனது புதிய வாழ்க்கையையும் சூழலையும் சமாளிக்க எவ்வாறு போராடுகிறார் என்பதை தேஜஸ்வி விளக்கியுள்ளார்.


குறிப்புகள் தொகு

  1. "Flights of fancy". Online webpage of The Hindu. The Hindu. Archived from the original on 3 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 12 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Tejaswi's first novel set to see the light of day". 11 August 2012. http://www.thehindu.com/news/cities/bangalore/article3751318.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணசந்திர_தேஜஸ்வி&oldid=3564631" இலிருந்து மீள்விக்கப்பட்டது