தாமாங் மொழி
(தமங் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாமாங் மொழி (तामाङ) நேபாளத்தில் பேசப்படும் சீன-திபெத்திய மொழியாகும். இம்மொழி நேபாளத்திற்கு வெளியே பூட்டான் நாட்டிலும், இந்தியாவில் சிக்கிம் மாநிலத்திலும் மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங் மாவட்டத்திலும் பேசப்படுகிறது. இது கிழக்கு தாமாங், வடமேற்கு தாமாங், தென்மேற்கு தாமாங், கிழக்கு குர்க்கா தாமாங், மேற்கு தாமாங் ஆகிய கிளைமொழிகளாக மொழியியலாளர்களால் பிரிக்கப்படுகிறது. மொத்தமாக 17 லட்ச மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். [1]
தாமாங் | |
---|---|
तामाङ | |
நாடு(கள்) | நேபாளம், இந்தியா, பூட்டான் |
இனம் | தாமாங் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (17 லட்சம் காட்டடப்பட்டது: 1991–2001)e17 |
சீன-திபெத்திய
| |
திபெத்தியம், தேவநாகரி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | நேபாளத்தின் தாம்சாலிங் பகுதி, இந்தியாவின் சிக்கிம் மாநிலம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Variously: taj — கிழக்கு தாமாங் tdg — மேற்கு தாமாங் tmk — வடமேற்கு தாமாங் tsf — தென்மேற்கு தாமாங் tge — கிழக்கு குர்க்கா தாமாங் |
இம்மொழி தாம்யிக் எழுத்துமுறையில் எழுதப்படுகிறது . இது திபெத்திய எழுத்துமுறை, தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளை ஒத்த எழுத்துமுறை ஆகும். எனினும் பலவேளைகளில் இம்மொழி தேவநாகரியிலேயே நேராக எழுதப்படுகிறது.