தமசா ஆறு அல்லது தோன்ஸ் ஆறு (Tamsa River or Tons River), இந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சத்னா மாவட்டத்தின், கைமூர் மலைத்தொடரில் 610 மீட்டர் உயரத்தில் தமகுண்ட் எனுமிடத்தில் உற்பத்தியாகி, சத்னா மாவட்டம் மற்றும் ரேவா மாவட்டங்களில் வழியாக பாய்ந்து, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின், பேலன் வழியாக சிர்சா என்ற இடத்தில் கங்கை ஆற்றுடன் இணைகிறது. தமசா ஆற்றின் மொத்த நீளம் 264 கி. மீ., ஆகும். இதனால் இவ்வாற்று நீரின் பாசான பரப்பளவு 16,860 சதுர கிலோ மீட்டர். [1][2]

தமசா ஆறு
தோன்சு ஆறு
நாடு இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
அடையாளச்
சின்னம்
பூர்வா அருவி
உற்பத்தியாகும் இடம் தமகுண்ட்
 - அமைவிடம் மகிஹர் தாலுகா, சத்னா மாவட்டம், கைமூர் மலைத்தொடர், மத்தியப் பிரதேசம்
 - உயர்வு 610 மீ (2,001 அடி)
கழிமுகம் கங்கை
 - அமைவிடம் சிர்சா, உத்திரப் பிரதேசம்
 - ஆள்கூறு 25°16′31″N 82°4′55″E / 25.27528°N 82.08194°E / 25.27528; 82.08194
நீளம் 264 கிமீ (164 மைல்)

இராமாயணத்தில்

தொகு

பதினான்கு ஆண்டு காடுறை வாழ்வின் போது, அயோத்தியை விட்டு காட்டிற்கு வந்த முதல் நாளில் ராமர், சீதை மற்றும் இலக்குவன் தமசா ஆற்றங்கரையில் தங்கி, தன்னுடன் வந்திருந்த அயோத்தி மக்களை விட்டு விட்டு, இரவுப் பொழுதில் தமசா ஆற்றைக் கடந்து காட்டினுள் வெகு நீண்ட தொலைவிற்கு பயணித்தனர்.[3]

வால்மீகி முனிவரின் ஆசிரமம் தமசா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது.[4] அயோத்தில் இராமரின் முடிசூட்டு விழாவிற்கு பின்னர், ராமரால் காட்டிற்கு அனுப்பப்பட்ட கருவுற்றிருந்த சீதை, அயோத்திலிருந்து 15 கி. மீ., தொலைவிலுள்ள தமசா ஆற்றின் கரையில் உள்ள வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் அடைந்து இலவன் மற்றும் குசன் எனும் இரட்டையர்களை பெற்றெடுத்தாள்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. K.L.Rao. India’s Water Wealth. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10. {{cite book}}: |work= ignored (help)
  2. UpkarPrakashan Editorial Board. Uttar Pradesh General Knowledge. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10. {{cite book}}: |work= ignored (help)
  3. "At the banks of the Tamsa River". The Story of ValmikiRamayan. Archived from the original on 2010-08-17. பார்க்கப்பட்ட நாள் 2010-07-10.
  4. VishvanathLimaye (1984). Historic Rama of Valmiki. Gyan Ganga Prakashan.
  5. Mittal, J.P. (2006). History of Ancient India: From 7300 BC to 4250 BC (Volume 1). Atlantic Publishers &Distributors. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-269-0615-4.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமசா_ஆறு&oldid=3998697" இலிருந்து மீள்விக்கப்பட்டது