தமிழகத்தில் புதிய கற்காலம்

தமிழகத்தில் புதிய கற்காலம்[1] என்பது கி.மு. 3000[2][3] - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் (தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது) இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.[4]

தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள்

பையம்பள்ளி

தொகு

பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் இரு விதத்தில் காணப்படுகின்றது.[4]

முதற்பிரிவு

தொகு

இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.

மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இரண்டாம் பிரிவு

தொகு

இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம்.

உணவு உற்பத்தி[1]

கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர்.

பரவல்

தொகு

மேலும் இக்காலக் கருவிகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்,

  1. வட ஆற்காடு பகுதிகள் - அப்புக்கல்லு, கல்லேரிமலை, சவ்வாது மலை, திருமலை, அம்பூர், சந்திராபுரம், கீழ்விளம்புச்சி, கொளுதம் பத்து, குத்ததூர், மலையம்பத்து, நெல்லிவாசல் நாடு, பழையதலூர், புதூர்நாடு, புலியூர், சோழிங்கூர், விண்ணமங்கலம்.[2]
  2. காஞ்சிபுரம் மாவட்டம் - திருக்கழுக்குன்றம்: வள்ளிபுரம் - ஈசூர் பாலாற்றுப் பகுதி.[5]
  3. தென் ஆற்காடு பகுதிகள் - கொண்டிய நத்தம், மேல் பரிகம்.
  4. புதுச்சேரி - அரிக்கமேடு[1]
  5. சேலம் மாவட்டம் - சேவரி
  6. கோயமுத்தூர் மாவட்டம் - பெரியகுல்லே பாளையம்.
  7. திருச்சி மாவட்டம் - ஒத்தக்கோயில்
  8. மதுரை மாவட்டம்
  9. தேனி மாவட்டம் - கருப்பண்ணசாமி கோவில் மேடு, பெரியகுளம்.
  10. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - சைதங்கநல்லூர், கொற்கை, சாயர்புரம்.[6]
  11. தர்மபுரி மாவட்டம் - கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, பன்னிமடுவ, தயில்மலை, முள்ளிக்காடு, கப்பலாவடி, பர்கூர், கடத்தூர், மரிரெட்டிப்பள்ளி, மயிலாடும்பாறை, மோடூர், கொத்துக்குப்பம், வேடர் தத்தக்கல்.[7]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 இராசவேலு சு, திருமூர்த்தி கோ (1995). தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள். p. 106.
  2. 2.0 2.1 Rajan k (1997). Archeological Gazatter of Tamilnadu. Chennai. pp. pp 111 - 112, 262–273. {{cite book}}: |pages= has extra text (help)CS1 maint: location missing publisher (link)
  3. www.hindu.com(April 17, 2001). "Ancient history of Tamil Nadu". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூலை 03, 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.
  4. 4.0 4.1 Indian Archealogical Review. Journal of the archealogical survey of India. 1979–80. p. 70.{{cite book}}: CS1 maint: date format (link)
  5. "வல்லிபுரம் பாலாற்றில் பழங்கால கற்கருவிகள் கண்டெடுப்பு!". Dinamalar. 2023-05-29. பார்க்கப்பட்ட நாள் 2023-05-29.
  6. குருமூர்த்தி சா (1974). தொல்பொருளியலாய்வும் தமிழர் பண்பாடும். சென்னை.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  7. Narasimayah B (1976). Neolithic and Megalithic cultures in Tamilnadu. Poona: Poona Univrsity.