தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு

தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்பது இலங்கை இனப்பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், தமிழீழத்தின் நிலப்பகுதியில் அத்துமீறிய காடழிப்பைத் தடுக்கவும், ஏற்கனவே இராணுவத்தின் எறிகணை வீச்சில் மரங்கள் சரிந்தும், இராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பரண்களுக்கும், பதுங்குக் குழிகளுக்கும், இராணுவ வேலிகளுக்குமென எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டு காடழிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் காரணமாகத் தொடங்கப்பட்ட பிரிவாகும்.

மரம் நடும் பணிகள்

தொகு

இந்தத் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே ஆண்டு 340 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான தேக்கு, சமண்டலை, மலை வேம்பு போன்ற மரங்களை நடுகை செய்தது. 1994 தொடக்கம்முதல் 2005வரை 1,55,200 பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .158,159,160.