தமிழோவியன்

தமிழோவியன் (இ. டிசம்பர் 25, 2006) இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். நல்ல இலக்கிய நடைகொண்டு எழுதுபவர். ஐம்பதுகளில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இரா. ஆறுமுகம் என்ற இயற்பெயர் கொண்ட தமிழோவியன் ஊவா மாகாணத்தில் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கியதில் முன் நின்றவராவார்.

ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்தே நடத்தி வந்தவர்களில் தமிழோவியன் முக்கிய பங்களித்தவர். கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றவர்களை பதுளைக்கு அழைத்து இலக்கிய விழாக்களை நடத்தியவர். அறிஞர் அண்ணா, பாரதிதாசன் இருவருடைய பிறந்த நாள் ஞாபகார்த்த கட்டுரைகளை தவறாமல் வருடா வருடம் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாணத்தில் சில சாகித்திய விழாக்களை பொறுப்பேற்று பல இலக்கிய மலர் வெளியீடுகள் வெளிவருவதற்கும் முக்கிய பங்களிப்பினை தமிழோவியன் வழங்கி வந்துள்ளார். தமிழோவியனின் கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான தமிழோவியன் இறக்கும் போது வயது 68 ஆகும்.

வெளிவந்த நூற்கள்

தொகு
  • தமிழோவியன் கவிதைகள், குமரன் பதிப்பகம், சென்னை

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழோவியன்&oldid=3215257" இலிருந்து மீள்விக்கப்பட்டது