தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்
ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.
தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவித் திட்ட பயனாளிகள்
தொகு65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டுமின்றி
- ஆதரவற்ற விவசாயக் கூலிகள்
- உடல் ஊனமுற்றோர்
- ஆதரவற்ற விதவைகள்
- கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கும் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உதவித்திட்டத்தின் படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000/- தவிர, மாதந்தோறும் ரேஷன் கடையில் 4 கிலோ அரிசியும், (அரசாணை பல்வகை எண் 771 சமூக நலத்துறை நாள் :6.10.80) பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவசமாக வேட்டி / சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. (அரசாணை பல்வகை எண் 995 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.7.79).
தற்போது தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி, 2009 – 2010 முதல் இந்திய அரசு வழங்குவதால், இத்திட்டத்திற்கு தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Scheme) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்ன பூர்ணா திட்டத்தின் கீழ் இந்திய அரசு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது.
ஆதரவற்ற முதியோர்
தொகுகணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் கீழ் கண்ட உதவித் தொைக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1) முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
2) உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
3) ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
4) கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
5) ஆதரவற்ற முதிர்கன்னி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
6) மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
7) இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
8) இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
9) இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
10) இந்திரா காந்தி தேசிய கனவால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
11) இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம் (UCMUPT).
முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது.[1].
விண்ணப்பிக்கும் முறை
தொகுஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.[2]
வயதுச் சான்று
தொகுதமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.
இருப்பிடச் சான்று
தொகுதமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். (இக் கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்)
விண்ணப்பங்கள் ஆய்வு
தொகுஇந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.
உதவித் தொகை
தொகுகிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) allathu வழியாக அளிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://allindiateachersperavai.blogspot.in/2014/05/blog-post_5257.html முதியோர் / ஆதரவற்றோர் உதவித் தொகை பெறுவது எப்படி
- ↑ http://www.tn.gov.in/ta/forms/category/1?page=1 தமிழ்நாடு அரசின் உதவித் திட்டங்கள் பெறுவதற்கான படிவங்கள்
வெளி இணைப்புகள்
தொகு- முதியோர் உதவித் தொகை
- முதியோர் உதவித் தொகை திட்டம் பரணிடப்பட்டது 2017-10-24 at the வந்தவழி இயந்திரம்