தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல், 2013
2013 தமிழ்நாட்டு மாநிலங்களவை தேர்தல் (2013 Rajya Sabha election in Tamil Nadu) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு நடத்தபட்ட மறைமுக தேர்தலாகும். 27 சூன் 2013 அன்று ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. [1] தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வாக்களிக்கெடுப்புடன் நடத்தபட்ட மாநிலங்களவை தேர்தல் இதுவாகும். [2]. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு உறுப்பினர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமுக சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வியடைந்தார். இத்தேர்தலில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மமகவும் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர். இத்தேர்தலை பாமக புறக்கணித்தது. தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரசு திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது.
மாநிலங்களவைக்கு 7 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தமிழ்நாடு மாநிலங்களவைக்கு 17 ஆண்டுக்குப் பிறகு போட்டி நிலவியது.[3]
பின்னணி
தொகுமாநிலங்களவைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் சூலை 27 அன்று முடிவடைந்தது. எனவே, ஆறு இடங்களுக்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. [4] வேட்பாளர்களுக்கு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் (ச.ம.உகள்) விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் மறைமுக வாக்களித்து அதன்வழியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முந்தைய தேர்தல்கள்
தொகுசூலை 1983 இல், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவர் பி. ராமமூர்த்தி காங்கிரசை சேர்ந்த மூப்பனாரிடம் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில், அப்போது அதிமுகவில் இருந்த ஆலடி அருணா, திமுக வின் முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள். மொத்தம் 4 அதிமுக வேட்பாளர்களும், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர்.
1984 மார்ச்சில், மேல்சபைக்கு ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திமுகவின் இரண்டாவது வேட்பாளரும், பின்னர் திமுக அரசில் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தோற்கடிக்கப்பட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த 4 பேரும், தற்போது வைகோ என்று அழைக்கப்படும் திமுகவின் வி. கோபாலசாமியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆறாவது இடத்துக்கு காங்கிரஸின் கே. வி. தங்கபாலு 30 வாக்குகள் பெற்று மூன்றாவது வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்.
திரு. வீராசாமி 25 வாக்குகளைப் பெறலாம்.
முதல் சுற்றில் 34 முதல் விருப்பு வாக்குகளை திரு தங்கபாலு பெற்றிருக்க வேண்டும், அதில் 31 காங்கிரஸும், அ.தி.மு.க.வின் 3 வாக்குகளும், அவருக்கு 30 வாக்குகள் மட்டுமே கிடைத்தது, இது காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கு வாக்களித்ததைக் காட்டுகிறது.
தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திரு. வீராசுவாமிக்கு ஆதரவாக அளித்த இரண்டாவது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதை அடுத்து திரு. தங்கபாலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மாநில சட்டசமன்றத்தில் கட்சிகளின் நிலை
தொகுகட்சியின் பெயர் | சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை |
---|---|
அதிமுக | 151 |
தேமுதிக | 29 - 7 * = 22 |
திமுக | 23 |
இபொக(மா) (சிபிஐ (எம்)) | 10 |
இபொக (சிபிஐ) | 8 |
இதேகா (காங்கிரஸ்) | 5 |
பாமக | 3 |
மமக | 2 |
புதிய தமிழகம் | 2 |
பார்வார்டு பிளாக்கு | 1 |
- நேமுதிகவின் 7 அதிருப்தி ச.ம.உகள் அதிமுகவை ஆதரித்தனர்
வேட்பாளர்கள்
தொகுஒவ்வொரு வேட்பாளருக்கும் 34 ச.ம.உறுப்பினர்கள் இருக்க வேண்டும். எனவே, 34 ச.ம.உறுப்பினர்களைக் கொண்ட கட்சியால் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க முடியும். 34 க்கும் குறைவான ச.ம.உறுப்பினர்களைக் கொண்ட கட்சி மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிவரும்.
வேட்பாளர் | கட்சி | மற்ற கட்சிகளின் ஆதரவு |
---|---|---|
வி. மைத்ரேயன் | அதிமுக | தேவையான வாக்குகள் உள்ளன |
கே. ஆர். அர்ச்சுணன் | அதிமுக | தேவையான வாக்குகள் உள்ளன |
டி. இரத்னவேல் | அதிமுக | தேவையான வாக்குகள் உள்ளன |
ஆர். இலட்சுமணன் | அதிமுக | தேவையான வாக்குகள் உள்ளன |
து. ராஜா | இபொக | அதிமுக, இபொக (மா), பார்வர்ட் பிளாக்கு |
கனிமொழி | திமுக | முமுக, பு. தமிழகம், காங்கிரஸ் |
இளங்கோவன் | தேமுதிக |
தேர்தல் வழக்குகள்
தொகு- குதிரைப் பேரம் நடப்பதாகக் கூறி வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் பி.ஜி.சத்யாலயா ராமகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[5]
- சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்கள் வாக்களிக்க தடையில்லை என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
முடிவுகள்
தொகுதேர்தலுக்கான முடிவுகள் சூன் 27 அன்று அறிவிக்கப்பட்டன. [6]
வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
---|---|---|
வி. மைத்ரேயன் | 36 | ஆம் |
கே. ஆர். அர்சுணன் | 36 | ஆம் |
டி. இரத்னவேல் | 36 | ஆம் |
ஆர். இலட்சுமணன் | 35 | ஆம் |
து. ராஜா | 34 | ஆம் |
கனிமொழி | 31 | ஆம் |
இளங்கோவன் | 22 | இல்லை |
பா.ம.க.வின் மூன்று ச.ம.உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
தேர்தலுக்கு பிந்தைய நிகழ்வுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "Tamil Nadu's Rajya Sabha elections present new partnerships". NDTV.com. 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
- ↑ "Rajya Sabha polls in Tamil Nadu today, Kanimozhi's re-election bid gets boost after Congress' support". India Today. 27 June 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
- ↑ "State will witness contest in RS elections after 17 years". த இந்து. சூன் 20, 2013. http://www.thehindu.com/news/national/tamil-nadu/state-will-witness-contest-in-rs-elections-after-17-years/article4833865.ece?ref=relatedNews. பார்த்த நாள்: சூன் 29, 2013.
- ↑ PTI (2013-06-04). "Election Commission to notify Rajya Sabha poll on Jun 10, voting on 27th". Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
- ↑ "மாநிலங்களவை தேர்தலை எதிர்க்கும் மனு தள்ளுபடி". தினமணி. சூன் 26, 2013. http://dinamani.com/tamilnadu/2013/06/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/article1652893.ece. பார்த்த நாள்: சூன் 29, 2013.
- ↑ "Kanimozhi, D. Raja, Maitreyan elected to Rajya Sabha". Business Line. 27 June 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013.
- ↑ "AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/article1657288.ece கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 29, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு : சோனியாவை சந்தித்தார் கனிமொழி". தினமணி. சூன் 29, 2013. http://dinamani.com/latest_news/2013/06/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4/article1658955.ece. பார்த்த நாள்: சூன் 29, 2013.