தமிழ்நாடு மின்சார வாரியம்
(தமிழ் நாடு மின்சார வாரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board - TNEB) சூலை 01, 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும், மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது.
முன்னைய வகை | பொதுத்துறை அமைப்பு |
---|---|
நிறுவுகை | சூலை 01, 1957 |
செயலற்றது | 01.11.2010 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, இந்தியா |
தொழில்துறை | மின்சார உற்பத்தி, பரவல், பங்கீடல், நேரடி சிறுவணிகம் |
உற்பத்திகள் | மின்சாரம் |
இணையத்தளம் | [1] |
மறுசீரமைப்பு
தொகுஇந்த வாரியம் மேலும் செம்மையாகச் செயலாற்றிடவும், மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாகவும், மைய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியம், சூலை 01, 2010 அன்று முதல் மூன்று அமைப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- தநாமிவா நிறுவனம் (தமிழ்நாடு மின்சார வாரியம் வரையறை அல்லது தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம்)
- தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
மின்சாரம் பெறப்படும் முறைகள்
தொகு- அணு மின்சார உற்பத்தி
- அனல் மின்சார உற்பத்தி
- நீர் மின்சார உற்பத்து
- காற்றுச் சுழலி மின்சார உற்பத்தி
- சூரிய கதிர் மின்சார உற்பத்தி
வெளியிணைப்புகள்
தொகு- அலுவல்முறை இணையதளம் பரணிடப்பட்டது 2015-10-06 at the வந்தவழி இயந்திரம்