தமிழ் போர்த்துக்கீசிய அகராதி (1679)

தமிழ் போர்த்துக்கீசிய அகராதி (போர்த்துக்கீசியம்: Vocabvlario Tamvlico) என்பது அன்டேம் டி புரவென்சா (Antão de Proença) என்பவரால் தொகுக்கப்பட்டு 1679 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஓர் அகராதி ஆகும். இந்த அகராதியின் ஒரு பிரதி வத்திக்கான் நூலகத்தில் உள்ளது. 1966 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகம் இதனை மீள் பதிப்புச் செய்தது[1].

தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி - அன்டேம் டி புரவென்சா (Vocabvlario tamvlic - Antão de Proença)

கேரளத்திலுள்ள அம்பலக்காடு (அம்பழக்காடு) எனுமிடத்தில் அச்சிடப்பட்ட இதுவே அச்சிடப்பட்ட முதலாவது இந்திய மொழி அகராதி ஆகும்[2].

இன்று கிடைக்கப்பெறாமலேயே போய்விட்ட இக்னேசியோ புருனோ (1585-1659) என்பாரது Vocabularium Tamulicum உள்ளிட்ட முந்தைய அகராதிகளிலிருந்தும், இராபர்ட் தெ நோபிலி, மனுவேல் மார்த்தின்சு ஆகியோரது அதிகளவு சமசுகிருதக் கலப்புடைய தமிழ்ப்படைப்புகளிலிருந்தும் இவ்வகராதியில் சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கையெழுத்துப் பிரதியில் நீளமாகவும், விளக்கமாகவும் இருந்த சொற்களுக்கான விளக்கங்கள் சிக்கனம் கருதியும், அதிகளவு இந்துமதக் கருத்துகளைப் புகுத்துவதாய் இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகவும் அச்சு வடிவத்தில் சுருக்கங்களாக எஞ்சின. இதனால் அக்கால இந்து அறிஞர் யாராவது பிரதியைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றிருந்தால் பல இடங்களில் திரித்தல்களும், பிழைபட்ட புரிதல்களும் மலிந்ததாய் அச்சிடத் தகுதியற்றதாக இதைக் கருதியிருக்கக்கூடும் என்று இந்த அகராதியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கிரகோரி யேம்சு குறிப்பிடுகிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The manuscript and printed version of Antão de Proenca's Vocabulario Tamulico 1679". University of Exeter, Language Centre. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆசிய, பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க சேகரிப்புகள் பகுதியின் தலைவராக இருந்த கிரகாம் ஷா எழுதிய கட்டுரை". தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 02 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |1= (help)