தம்பிலுவில் ஜெகா

தம்பிலுவில் ஜெகா எனும் புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜெகதீஸ்வரி நாதன். ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர்.

தம்பிலுவில் ஜெகா
பிறப்புஜெகதீஸ்வரி நாதன்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விதம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கக் குறிப்பு

தொகு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபோது தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் எழுதத் தொடங்கினார். 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. தினகரன், வீரகேசரி, சிந்தாமணி போன்ற பத்திரிக்கைகளில் இவரது 50 ற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியிருந்தன.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழாசிரியராகக் கடமையாற்றும் இவர் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பத்திரிகைப் பொறுப்பாசிரியராக இருந்து கமலம், முத்தாரம், செந்தாமரை போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டார். 'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

பல கவியரங்குகளிலும் பங்குகொண்ட இவர் 'செங்கதிர்’ சஞ்சிகையின் 2008 பங்குனி சர்வதேச மகளிர் சிறப்பிதழை அலங்கரித்தார். சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடுகளான 'கண்ணாடி முகங்கள்’, 'கவிதைகள் பேசட்டும்’ போன்ற கவிதைத் தொகுப்புகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

வெளியான நூல்கள்

தொகு
  • இன்னும் விடியவில்லை (கவிதைத் தொகுப்பு, 1998)

விருதுகள்

தொகு
  • 1996 இல் திருக்கோயில் பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
  • 1993, மார்ச் 14 இல் அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் 'கவிக்கோகிலம்’ எனும் விருது வழங்கப்பட்டது.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பிலுவில்_ஜெகா&oldid=3215562" இலிருந்து மீள்விக்கப்பட்டது