தயோனைல் புளோரைடு

கருத்தியலாக மட்டும் ஆராயப்படும் சேர்மம்

தயோனைல் புளோரைடு (Thionyl fluoride) என்பது SOF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற வாயுவான இச்சேர்மம் கருத்தியலாக மட்டும் ஆராயப்படுகிறது. ஆனால் இது மின்சார கருவிகளில் மின்காப்புப் பொருளாகப் பயன்படும் கந்தக எக்சாபுளோரைடை ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் கிடைக்கிறது. Cs சீர்மையுடன் உருக்குலைந்த கூர்நுனிக் கோபுரத்தின் கட்டமைப்பை தயோனைல் புளோரைடு ஏற்றுக் கொள்கிறது. கட்டமைப்பிலுள்ள S-O மற்றும் S-F அணுக்களுக்கு இடையில் முறையே 1.42 மற்றும் 1.58 Å பிணைப்பு இடைவெளியும், O-S-F மற்றும் F-S-F அணுக்களுக்கு இடையில் முறையே 06.2 மற்றும் 92.2° பிணைப்புக் கோணமும் காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் இருந்தாலும் தயோனைல் குளோரைடும் தயோனைல் புரோமைடும் ஒரே மாதிரியான கட்டமைப்பை ஏற்றுள்ளன. தயோனைல் குளோரைடுபுளோரைடு (SOClF) போன்ற கலப்பு ஆலைடுகளும் அறியப்படுகின்றன.

தயோனைல் புளோரைடு
Ball-and-stick model
Ball-and-stick model
structure
structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தயோனைல் புளோரைடு
இனங்காட்டிகள்
7783-42-8 N
ChemSpider 22954 Y
InChI
  • InChI=1S/F2OS/c1-4(2)3 Y
    Key: LSJNBGSOIVSBBR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F2OS/c1-4(2)3
    Key: LSJNBGSOIVSBBR-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24548
  • FS(F)=O
பண்புகள்
F2OS
வாய்ப்பாட்டு எடை 86.06 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −110.5 °C (−166.9 °F; 162.7 K)
கொதிநிலை −43.8 °C (−46.8 °F; 229.3 K)
நீராற்பகுப்பு அடையும்
கரைதிறன் எத்தனால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 75.7 கிலோபாசுக்கல் (-50 °செல்சியசில்)[1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-715 கிலோ யூல்/மோல்[2]
Std enthalpy of
combustion
ΔcHo298
56.8 யூல்/மோல்•கெ[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
278.6 யூல்/மோல்•கெ[2]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R36/37/38[3]
S-சொற்றொடர்கள் S36/37, S38, S45, S63
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு

தயோனைல் குளோரைடுடன் ஆண்டிமனி டிரைபுளோரைடு போன்ற புளோரைடு மூலச் சேர்மத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் தயோனைல் புளோரைடு உருவாகிறது [4][5]

3 SOCl2 + 2SbF3]] → 3SOF2 + 2SbCl3]]

கந்தக டை ஆக்சைடை புளோரினேற்றம் செய்யும் மாற்று வழிமுறையிலும் இதைத் தயாரிக்க இயலும்.:[5]

SO2 + 2PF5]] → SOF2 + POF3

கந்தக டெட்ராபுளோரைடு உருவாக்கத்தின்போது வெளிவிடப்படும் மின் கசிவால் உருவாகும் கந்தக எக்சாபுளோரைடு சிதைவடையும்போது இடைநிலை வேதிப்பொருளாக தயோனைல் புளோரைடு கிடைக்கிறது.

SF4 நீராற்பகுப்பு அடைந்து தயோனைல் புளோரைடு கிடைக்கிறது. மேலும் இது கீழ்கண்டவாறு நீராற்பகுப்பு அடைகிறது.[6]

எதிர்பார்க்கப்படுவது போல மற்ற தயோனைல் ஆலைடுகளைப் போல தயோனைல் புளோரைடும் உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்பட்டு ஐதரசன் புளோரைடையும், கந்தக டையாக்சைடையும் கொடுக்கிறது:[5]

SOF2 + H2O → 2HF + SO2

தயோனைல் குளோரைடு, தயோனைல் புரோமைடு சேர்மங்களைப் போல தயோனைல் புளோரைடு கரிம புளோரின் வேதியியலில் பயன்படுவதில்லை. இருப்பினும் தொடர்புடைய வழிப்பெறுதியான கந்தக டெட்ராபுளோரைடு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Thionyl fluoride in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-05-11)
  2. 2.0 2.1 2.2 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=8280
  3. "Safety (MSDS) data for thionyl fluoride". Oxford University. 2005-09-02. Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2008-07-29.
  4. W. C. Smith, E. L. Muetterties "Thionyl Fluoride" Inorganic Syntheses 1960, Volume 6, pages: 162-163. எஆசு:10.1002/9780470132371.ch50
  5. 5.0 5.1 5.2 Holleman, Arnold F. (2001). Inorganic Chemistry. Academic Press. p. 542. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5. பார்க்கப்பட்ட நாள் 2008-07-29.
  6. Pepi, Federico; Andreina Ricci; Marco Di Stefano; Marzio Rosi; Giuseppe D'Arcangelo (September 18, 2002). "Thionyl Fluoride from Sulfur Hexafluoride Corona Discharge Decomposition: Gas-Phase Chemistry of (SOF2)H+ Ions". Journal of Physical Chemistry A (American Chemical Society) 106 (40): 9261–9266. doi:10.1021/jp021074v. Bibcode: 2002JPCA..106.9261P. http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/jpcafh/2002/106/i40/abs/jp021074v.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோனைல்_புளோரைடு&oldid=3585094" இலிருந்து மீள்விக்கப்பட்டது