தயோபாசுபாரிக் அமிலம்

தயோபாசுபாரிக் அமிலம் (Thiophosphoric acid) H3PO3S என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பாசுபாரிக் அமிலத்திலிருந்து இதைத் தயாரிக்க முடியாது என்றாலும் கட்டமைப்பு ரீதியாக இது பாசுபாரிக் அமிலத்திலிருந்து கந்தக அணு மட்டும் அதிகமாகக் கொண்ட ஒரு வழிப்பெறுதி அமிலமாகும். தயோபாசுபாரிக் அமிலம் ஒரு நிறமற்ற சேர்மமாகும். தூய்மையான வடிவத்தில் அரிதாகவே தனிமைப்படுத்தப்படும் இச்சேர்மம் ஒரு கரைசலாக காணப்படுகிறது. இதன் கட்டமைப்பு எதுவும் அறியப்படவில்லை என்றாலும் SP(OH)3 மற்றும் OP(OH)2SH என்ற இரண்டு இயங்கு சமநிலை மாற்றியங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தயோபாசுபாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
13598-51-1 Y
ChemSpider 146330
InChI
  • InChI=1S/H3O3PS/c1-4(2,3)5/h(H3,1,2,3,5)
    Key: RYYWUUFWQRZTIU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167254
  • OP(=S)(O)O
UNII TYM4M7EWCW Y
பண்புகள்
H3PO3S
வாய்ப்பாட்டு எடை 114.061
தோற்றம் நிறமற்றது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பாசுபரசு பெண்டாசல்பைடை கார நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி இருதயோபாசுபேட்டு தயாரிக்கும் பலபடிநிலை செயல்முறையின் மூலம் தயோபாசுபாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இருதயோபாசுபேட்டு அதனுடைய பேரியம் உப்பாக தனித்துப் பிரிக்கப்படுகிறது. :[1]

P2S5 + 6 NaOH → 2 Na3PO2S2 + H2S + 2 H2O
2 Na3PO2S2 + 3 BaCl2 → 2 Ba3(PO2S2)2 + 6 NaCl

உருவாகும் பேரியம் உப்பானது இரண்டாவது படிநிலையில் கந்தக அமிலத்துடன் சேர்க்கப்பட்டு சிதைவு வினைக்கு உட்பட்டுத்தப்படுகிறது. பேரியம் சல்பேட்டு இருதயோபாசுபாரிக் அமிலத்தை வெளியேற்றி வீழ்படிவாகத் தங்கிவிடுகிறது.

Ba3(PO2S2)2 + 3 H2SO4 → BaSO4 + 2 H3PO2S2

கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளில் இருதயோபாசுபாரிக் அமிலம் நீராற்பகுக்கப்பட்டு ஒற்றைத்தயோ வழிப்பெறுதியைக் கொடுக்கிறது. H3PO2S2 + H2O → H3PO3S + H2S

மேற்கோள்கள்

தொகு
  1. R. Klement "Phosphorus" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 570, 568.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோபாசுபாரிக்_அமிலம்&oldid=3299742" இலிருந்து மீள்விக்கப்பட்டது