தரவுக் கிடங்கு


தரவுக் கிடங்கு என்பது ஒரு நிறுவனத்தின் மின்னனு முறையில் சேமித்த தரவுகளின் களஞ்சியம். அறிக்கை தயாரித்தல் மற்றும் ஆய்வு ஆகியவற்றை எளிதாக்குவதற்காக தரவுக் கிடங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன[1].

தரவுக் கிடங்கின் இந்த வரையறையானது தரவு சேகரிப்பின்மீதே தனது கவனத்தைச் செலுத்துகிறது. இருந்தாலும், தரவை மீட்டெடுத்து ஆய்வு செய்யும் வழிவகைகள், தரவைப் பிரித்தெடுக்கும், மாற்றும் மற்றும் ஏற்றும் வழிவகைகள், மற்றும் தரவு அகராதியை நிர்வகிக்கும் வழிவகைகள் ஆகியவையும் தரவுக் கிடங்காக்க முறையின் அவசியமான கூறுகளாகக் கருதப்படுகின்றன. தரவுக் கிடங்காக்கத்துக்கான பல குறிப்புகள் இந்த பரந்த சூழ்நிலைப் பொருத்தத்தையே பயன்படுத்துகின்றன. ஆகவே,தரவுக் கிடங்காக்கத்துக்கான விரிவான வரையறையானது வர்த்தக அறிவுத்திறன் கருவிகள், தரவைப் பிரித்தெடுக்கும், மாற்றும் மற்றும் களஞ்சியத்தில் ஏற்றும் கருவிகள், மீத்தரவை நிர்வகிக்கும் மற்றும் மீட்டுக்கொள்ளும் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

வரலாறு

தொகு

தரவுக் கிடங்காக்கத்தின் கருதுகோளானது 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்குச் செல்கிறது[2], அப்போது ஐ.பி.எம் ஆராய்ச்சியாளர்களான பாரி டேவ்லின் மற்றும் பௌல் மூர்ஃபி ஆகியோர் "வர்த்தக தரவுக்கிடங்கை" உருவாக்கினார்கள். சுருக்கமாக, தரவுக் கிடங்காக்கத்தின் கருதுகோளானது, இயங்கக்கூடிய முறைமைகளிலிருந்து முடிவை ஆதரிக்கும் சூழல்களுக்கு தரவுகள் செல்வதற்கான கட்டுமான மாதிரியொன்றை வழங்குவதற்கே உத்தேசிக்கப்பட்டது. இந்த ஓட்டத்துடன் இணைந்துள்ள பல்வேறுபட்ட சிக்கல்களையும், குறிப்பாக அதிக செலவை, தெளிவுபடுத்தவே கருதுகோள் முயற்சி செய்தது. தரவுக் கிடங்காக்க கட்டுமானம் இல்லாதநிலையில், பற்பல முடிவை ஆதரிக்கும் சூழல்களை ஆதரிக்க பெருமளவான மிகைமை தேவைப்பட்டது. பெரிய நிறுவனங்களில் சாதாரணமாகவே பற்பல முடிவை ஆதரிக்கும் சூழல்களைத் தனித்தனியாக இயங்குவது சாதாரணமாக இருந்தது. ஒவ்வொரு சூழலும் வேறுபட்ட பயனர்களுக்கு சேவையை வழங்கியது. ஆனால் பெரும்பாலும் சேமிக்கப்பட்ட ஒரே தரவே தேவைப்பட்டது. வேறுபட்ட மூலங்களிலிருந்து, பொதுவாக நீண்ட காலமாக உள்ள இயங்கக்கூடிய முறைமைகளிலிருந்து (பொதுவாக மரபுவழி முறைமைகள் எனக் கூறப்படும்) தரவைச் சேகரித்தல், சுத்தமாக்கல் மற்றும் ஒருங்கிணைத்தல் செயலாக்கமானது ஒவ்வொரு சூழலுக்குமாக பகுதியாக நகலெடுக்கப்பட்டது. மேலும், முடிவை ஆதரிக்கும் புதிய தேவைகள் வரும்போதெல்லாம் இயங்கக்கூடிய முறைமைகள் மறுசோதனை செய்யப்பட்டன. புதிய தேவைகள் காரணமாக, பயனர்கள் உடனும் அணுகக்கூடிய விதமாக உள்ள "தரவுச் சந்தைகளில்" இருந்து புதிய தரவுகளை அடிக்கடி பெற, சுத்தப்படுத்த மற்றும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தொடக்க காலத்தில் தரவுக் கிடங்காக்கத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள்:

  • 1960 ஆம் ஆண்டுகள் — ஜெனரல் மில்ஸ் மற்றும் டார்ட்மவுத் கல்லூரி, கூட்டு ஆராய்ச்சியில் பரிமாணங்கள் மற்றும் உண்மைகள் ஆகிய சொற்கள் உருவாகின.[3]
  • 1970 ஆம் ஆண்டுகள் — சில்லறை விற்பனைக்காக ACNielsen மற்றும் ஐ.ஆர்.ஐ ஆகியன பரிமாண தரவுச் சந்தைகளை வழங்கின.[3]
  • 1983 — முடிவு ஆதரிப்புக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தரவுத்தள நிர்வாக முறைமையை டெராடேட்டா அறிமுகப்படுத்தியது.
  • 1988 — பாரி டேவ்லின் மற்றும் பௌல் முர்ஃபி ஆகியோர் அன் ஆர்க்கிடெக்சர் ஃபார் அ பிஸ்னஸ் அண்ட் இன்ஃபார்மேஷன் சிஸ்டம்ஸ் என்ற கட்டுரையை ஐ.பி.எம் சிஸ்டம்ஸ் ஜேர்னலில் வெளியிட்டார்கள், இதில் "வர்த்தக தரவுக் கிடங்கு" என்ற சொல்லை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
  • 1990 — தரவுக் கிடங்காக்கத்துக்கென தனித்துவமான தரவுத்தள மேலாண்மை முறைமையான ரெட் பிரிக் கிடங்கு என்பதை ரெட் பிரிக் சிஸ்டம்ஸ் அறிமுகம் செய்தது.
  • 1991 — தரவுக் கிடங்கை உருவாக்குவதற்கான மென்பொருளான ப்ரிஸம் கிடங்கு நிர்வாகி என்பதை ப்ரிஸம் சொல்யூஷன்ஸ் அறிமுகம் செய்தது.
  • 1991 — பில்டிங் த டேட்டா வேர்ஹவுஸ் என்ற புத்தகத்தை பில் இன்மோன் வெளியிட்டார்.
  • 1995 — தரவுக் கிடங்காக்கத்தை மேம்படுத்தும் லாப நோக்கிலான நிறுவனமான டேட்டா வேர்ஹவுஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.
  • 1996 — ரால்ஃப் கிம்பால் த டேட்டா வேர்ஹவுஸ் டூல்கிட் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • 1997 — நட்சத்திர வினவல்களுக்கான ஆதரவுடன் ஆரக்கிள் 8 வெளியிடப்பட்டது.

கட்டமைப்பு

தொகு

கட்டமைப்பு, நிறுவனம் ஒன்றின் தரவுகிடங்காக்க முயற்சிகள் என்ற சூழலில், இது தரவுக்கிடங்கு எவ்வாறு கட்டப்படுகிறது என்ற ஒரு கருத்துருவாக்கமாகும். சரியான அல்லது தவறான கட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. ஆனால் பலவகையான சூழல்கள் மற்றும் நிலமைகளை ஆதரிப்பதற்கு பல கட்டமைப்புகள் உள்ளன. கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தரவுக்கிடங்கின் பயன்பாடு ஆகியவற்றில் கருத்துருவாக்கமானது எவ்வாறு உதவுகிறது என்பதைப் பொறுத்து கட்டமைப்பின் தகுதியைப் பற்றித் தீர்மானிக்கலாம்.

தரவுக்கிடங்கு கட்டமைப்பின் சாத்தியமான எளிய கருத்துருவாக்கம் ஒன்றில் பின்வரும் ஒன்றோடு ஒன்று தொடர்பான அடுக்குகள் இருக்கும்:

செயல்பாட்டு தரவுத்தள அடுக்கு
தரவுக் கிடங்குக்கான மூல தரவு — நிறுவனத்தின் An organization's தொழிலக ஆதார திட்ட முறைகள் இந்த அடுக்கில் அடங்கும்.
தரவு அணுகல் அடுக்கு
செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பான அணுகல் அடுக்குக்கு இடையிலான இடைமுகம்— தரவை தரவுக்கிடங்குக்குள் பிரித்தெடுக்கும், மாற்றும் மற்றும் ஏற்றும் கருவிகள் இந்த அடுக்கில் அடங்கும்.
மீத்தரவு அடுக்கு
தரவுக் கோப்பகம்- செயல்பாட்டு முறை தரவுக் கோப்பகத்தைவிட இது பொதுவாக கூடுதல் விவரமானது. முழுமையான கிடங்குக்குமான அகராதிகள் உள்ளன. சிலவேளைகளில் குறிப்பிட்ட அறிக்கையிடல் மற்றும் ஆய்வுக் கருவியால் அணுகக்கூடிய தரவுக்கான அகராதிகள் உள்ளன.
தகவல் தொடர்பான அணுகல் அடுக்கு
அறிக்கையிடல் மற்றும் ஆய்வுக்காக அணுகப்பட்ட தரவு மற்றும் தரவை அறிக்கையிடுவதற்கான மற்றும் ஆய்வு செய்வதற்கான கருவிகள்— வர்த்தகம் அறிவுத்திறன் கருவிகள் இந்த அடுக்கில் அடங்கும். மேலும் இந்தக் கட்டுரையில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ள வடிவமைப்பு செய்முறை பற்றிய இன்மோன்-கிம்பால் வேறுபாடுகள் இந்த அடுக்குடன் செய்யப்படவேண்டும்.

தரவுச் சேமிப்புக்கான சீராக்கப்பட்டதற்கு எதிர் பரிமாண அணுகுமுறை

தொகு

தரவுக்கிடங்கில் தரவைச் சேமிப்பதற்கு இரண்டு முதன்மையான அணுகுமுறைகள் உள்ளன — பரிமாண அணுகுமுறை மற்றும் சீராக்கப்பட்ட அணுகுமுறை.

பரிமாண அணுகுமுறையில், பரிமாற்ற தரவுகள் பொதுவாக எண்சார் பரிமாற்ற தரவுகளான "உண்மைகள்" அல்லது உண்மைகளுக்கான சூழலை வழங்கும் குறிப்புத் தகவல்களான "பரிமாணங்கள்" ஏதோ ஒன்றாக பிரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, விற்பனைப் பரிமாற்றமானது கட்டளையிடப்பட்ட தயாரிப்புகளின் எண்ணிக்கை, தயாரிப்புகளுக்காக வழங்கப்பட்ட விலைகள் போன்ற உண்மைகளாகவும், கட்டளையிடப்பட்ட தேதி, வாடிக்கையாளரின் பெயர், தயாரிப்பு எண், கட்டளை மற்றும் விலைப்பட்டியலை அனுப்பும் இருப்பிடங்கள் மற்றும் கட்டளையைப் பெறுவதில் பொறுப்பான விற்பனைநபர் ஆகிய பரிமாணங்களாகவும் பிரிக்கப்படலாம். பரிமாண அணுமுகுறையிலுள்ள முக்கியமான நன்மை என்னவென்றால், தரவுக் கிடங்கை பயனர் எளிதாக புரிந்துகொண்டு பயன்படுத்தக் கூடியதாக இருத்தலாகும். அதோடு, தரவுக் கிடங்கிலிருந்து தரவை மீட்டலை மிகவும் விரைவாகச் செயற்படுத்தலாம். பரிமாண அணுமுறையிலுள்ள பிரதான தீமைகள் ஆவன:

  1. உண்மைகள் மற்றும் பரிமாணங்களின் ஒருங்கமைப்பைப் பேணும் பொருட்டு, வேறுபட்ட செயல்பாட்டு முறைகளிலிருந்து தரவை தரவுக்கிடங்கில் ஏற்றுவது சிக்கலானதாகும்.
  2. வர்த்தகம் செய்யும் வழியில் பரிமாண அணுகுமுறை மாற்றங்களுக்கு ஒரு நிறுவனம் மாறிவிட்டால் தரவு கிடங்கு அமைப்பை மாற்றுவது கடினமானதாகும்.

சீராக்கப்பட்ட அணுகுமுறையில், தரவுக்கிடங்கில் தரவுகள் ஒரு எல்லையைத் தொடர்ந்து சேமிக்கப்படுகின்றன. இது தரவுத்தள தரவமைப்பு விதிகளாகும். பொருள் பகுதிகளால் அட்டவணைகள் ஒன்றாக குழுவாக்கப்படுகின்றன. இவை பொதுவான தரவு வகைகளைப் பிரதிபலிக்கின்றன (எ.கா., வாடிக்கையாளர், தயாரிப்புகள், நிதி மற்றும் பலவற்றைப் பற்றிய தரவுகள்). இந்த அணுமுறையிலுள்ள முதன்மையான நன்மை என்னவெனில், தரவுத்தளத்தில் தகவல்களை நேரடியாகவே சேர்க்கலாம் என்பதாகும். இந்த அணுகுமுறையின் ஒரு தீமை என்னவெனில், பல அட்டவணைகள் இதில் பங்கெடுப்பதால் பின்வரும் இரண்டும் பயனர்களுக்கு கடினமாக இருக்கும்:

  1. வேறுபட்ட மூலங்களிலிருந்து பெறும் தரவுகளை கருத்துமிக்க தகவலாக இணைப்பது
  2. தரவு மூலங்கள் மற்றும் தரவுக் கிடங்கின் தரவு அமைப்பு ஆகியவற்றின் சரியான புரிந்துணர்வு இல்லாமல் தகவல்களை அணுகுவது

இந்த அணுகுமுறைகள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் பிரத்தியேகமானவை அல்ல. மற்றைய அணுகுமுறைகளும் உள்ளன. குறிப்பிட்ட ஒரு எல்லை வரையே பரிமாண அணுகுமுறைகள் தரவுகள் தரவமைப்பில் ஈடுபடலாம்.

தகவல்களை மாற்றுதல்

தொகு

ஒரு தரவுக் கிடங்கை வடிவமைப்பதிலுள்ள இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், எந்த தரவை மாற்றுவது மற்றும் அந்தத் தரவை எவ்வாறு மாற்றுவது என்பதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு செயல்பாட்டு முறையில் தரவை தரவுகிடங்கில் உள்ளிடும்போது பணியாளரின் பாலைக் குறிப்பிட "ஆ" மற்றும் "பெ" என்பன பயன்படுத்தப்படும்போது இன்னொரு செயல்பாட்டு முறையில் "ஆண்" மற்றும் "பெண்" எனப் பயன்படுத்தப்படலாம். இது ஒரு எளிமையான எடுத்துக்காட்டாக இருந்தபோதும், தரவுக் கிடங்கை நடைமுறைப்படுத்துவதிலுள்ள பெரும்பாலான பணிகள், தரவுகள் தரவுக் கிடங்கில் சேமிக்கப்படும்போது ஒரேமாதிரியான பொருளுடைய தரவு இணக்கத்தை உண்டுபண்ணுவதில் ஈடுபடுத்தப்படுகின்றன. பொதுவாக, இந்தப் பணியில் பிரித்தெடுக்கும், மாற்றும், ஏற்றும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முதன்மைத் தரவு மேலாண்மை என்பது "பரிமாணங்கள்" எனக் கருதப்படக்கூடிய தரவுகளை மாற்றும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.

மேலிருந்து கீழ் நோக்கிய எதிராக கீழிருந்து மேல் நோக்கிய வடிவமைப்பு செய்முறைகள்

தொகு

கீழிருந்து மேல் நோக்கிய வடிவமைப்பு

தொகு

தரவுக் கிடங்காக்கம் குறித்து நன்கறியப்பட்ட எழுத்தாளரான ரால்ஃப் கிம்பால்,[4] பொதுவாக கீழிருந்து மேல் நோக்கிய எனக் கருதப்படும் தரவுக்கிடங்கு வடிவமைப்புக்கு அணுகுமுறையை முன்மொழிந்த ஒருவராவார்.[5] கீழிருந்து மேல் நோக்கிய அணுகுமுறை என அழைக்கப்படும் தரவுச் சந்தைகள் குறிப்பிட்ட வர்த்தகம் செயலாக்கங்களுக்கான அறிக்கையிடல் மற்றும் ஆய்வு ஆற்றல்களை வழங்குவதற்காக முதலில் உருவாக்கப்படுகின்றன. தரவுச் சந்தைகளில் அணுநிலை (மிகச்சிறிய) தரவுகள் உள்ளன. தேவைப்படின் சுருக்கப்பட்ட தரவுகளும் உள்ளன. விரிவான தரவுக் கிடங்கை உருவாக்குவதற்காக இறுதியில் இந்த தரவுச் சந்தைகள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. தரவுச் சந்தைகளின் சேர்க்கையானது "தரவுக் கிடங்கு பஸ் கட்டமைப்பு" என கிம்பால் அழைத்த செயற்பாட்டின் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.[6]

தரவுச் சந்தைகள் உருவாக்கப்பட்ட உடனும் விரைவில் வர்த்தக பெறுமதியைப் பெற முடியும். தரவுக் கிடங்கு பஸ் கட்டமைப்பின்மீது கடுமையான நிர்வாகத்தை பேணுதலானது தரவுக் கிடங்கின் ஒழுங்கமைப்பைப் பேணுவதற்கான அடிப்படையாகும். தரவுச் சந்தைகளிடையேயான பரிமாணங்கள் ஒரேசீரானவையா என்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியமான மேலாண்மைக் காரியமாகும். கிம்பாலின் கூற்றில் சொல்வதானால், இது பரிமாணங்கள் "மாற்றம்" என்ற பொருள்படும்.

மேலிருந்து கீழ் நோக்கிய வடிவமைப்பு

தொகு

தரவுக் கிடங்காக்கம் என்ற பொருளின் முதலாவது ஆசிரியர்களில் ஒருவரான பில் இன்மோன், பெருநிறுவனம் முழுவதுக்குமான ஒருமுகப்படுத்தப்பட்ட களஞ்சியமே தரவுக் கிடங்கு என வரையறுத்துள்ளார்.[6] தரவுக் கிடங்கு வடிவமைப்புக்கு மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையை முன்மொழிந்த முக்கியமானவர்களில் இன்மோன் ஒருவராவார். இதில் சீராக்கப்பட்ட பெருநிறுவன தரவு மாதிரியைப் பயன்படுத்தி தரவுக் கிடங்கு வடிவமைக்கப்படுகிறது. மிகக்குறைந்த நிலையான விவரமுடைய "அணுநிலை" தரவுகள், தரவுக் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வர்த்தக செயலாக்கங்கள் அல்லது குறிப்பிட்ட துறைகளுக்குத் தேவையான தரவுகளைக் கொண்டுள்ள பரிமாண தரவுச் சந்தைகள் தரவுக் கிடங்கிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இன்மானின் நோக்கில், தரவுக் கிடங்கென்பது "பெருநிறுவன தகவல் தொழிற்சாலை"யின் (CIF)மையத்திலுள்ளது. இது வர்த்தக அறிவுத்திறன் (BI) மற்றும் வர்த்தகம் மேலாண்மை ஆற்றல்களை வழங்குவதற்கான தர்க்கரீதியான கட்டமைப்பை வழங்குகிறது.

தரவுக் கிடங்கு என்பது என்னவென்று இன்மோன் பின்வருமாறு கூறுகிறார்:

பொருள் நோக்கானது
ஒரே பொருள் நோக்காக தரவுக் கிடங்கிலுள்ள தரவு ஒழுங்கமைக்கப்படுகிறது, எனவே ஒரே நிகழ் உலகுடன் அல்லது பொருளுடன் தொடர்பான அனைத்து தரவுக் கூறுகளும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.
அழிவுறாதது
ஒரு தடவை எழுதப்பட்டால் அதன்பிறகு தரவுக் கிடங்கிலுள்ள தரவை மேலெழுதவோ அல்லது நீக்கவோ முடியாது, தரவானது நிலையானது, படிக்க-மட்டும் மற்றும் எதிர்கால அறிக்கையிடலுக்குத் தக்கவைக்கப்பட்டது.
ஒருங்கிணைக்கப்பட்டது
தரவுக் கிடங்கானது நிறுவனத்தின் அநேகமான அல்லது அனைத்து செயல்பாட்டு முறைகளிலிருந்தும் தரவுகளைக் கொண்டிருக்கும்.இந்த தரவு இணக்கமானதாக மாற்றப்படும்.

ஒருமுகப்படுத்தப்பட்ட களஞ்சியத்திலிருந்தே அனைத்து தரவுச் சந்தைகளும் ஏற்றப்படுகின்றன என்பதால் மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையிலான வடிவமைப்பு செய்முறையானது அதிகளவு இணக்கப்பாடான பரிமாணக் தரவுக் காட்சிகளை தரவுச் சந்தை முழுவதும் உருவாக்குகிறது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையிலான வடிவமைப்பும்கூட வர்த்தக மாற்றங்களுக்கு எதிராக கம்பீரமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தரவுக் கிடங்கில் சேமிக்கப்பட்ட தரவுகளுக்கு எதிராக புதிய பரிமாண தரவுச் சந்தைகளை உருவாக்குவதானது ஒப்பீட்டளவில் எளிதான காரியமாகும். மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையிலான வடிவமைப்பின் முக்கிய தீமை என்னவென்றால், மிகப்பரந்த நோக்குடன் மிகப்பெரிய திட்டம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலிருந்து கீழ் நோக்கிய செய்முறையைப் பயன்படுத்தி தரவுக் கிடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான செலவானது முக்கியமானதாகும். திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து பயனர்கள் அனுபவ ஆரம்ப நன்மைகள் முடியும் புள்ளிவரையான நேரம் கணிசமானளவாக இருக்க முடியும். மேலும், மேலிருந்து கீழ் நோக்கிய செய்முறையானது நடைமுறைப்படுத்தல் கட்டங்களின்போது துறைசார் தேவைகளின் மாற்றத்தை அனுமதிக்காது மற்றும் பொறுப்பு வகிக்காது.[6]

கலப்பு வடிவமைப்பு

தொகு

காலம் கடந்த பின்னர் கீழிருந்து மேல் நோக்கிய மற்றும் மேலிருந்து கீழ் நோக்கிய தரவுக் கிடங்கு வடிவமைப்பை முன்மொழிபவர்கள் மேற்படி இரு செய்முறைகளிலும் நன்மைகளும், ஆபத்துக்களும் இருப்பதை உணர்ந்து கொண்டனர். கீழிருந்து மேல் நோக்கிய வடிவமைப்பின் நன்மையான வேகமான செயற்பாட்டையும், மேலிருந்து கீழ் நோக்கிய வடிவமைப்பின் பெருநிறுவன ரீதியில் பரந்த தரவு இணக்கப்பாட்டையும் எடுத்து கலப்பு செய்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தரவுக் கிடங்குகள் எதிர் செயல்பாட்டு முறைகள்

தொகு

செயல்பாட்டு முறைகளானவை தரவு ஒருங்கமைப்பின் பாதுகாப்புக்காகவும், தரவுத்தள தரவமைப்பு மற்றும் உள்பொருள்-உறவு மாதிரி ஆகியவற்றின் பயன்பாடு ஊடாக வர்த்தக பரிமாற்றங்களை வேகமாக பதிவுசெய்வதற்காகவும் உகப்பாக்கப்படுகின்றன. தரவு ஒருங்கமைப்பை உறுதிப்படுத்துவதன் பொருட்டு, செயல்பாட்டு முறை வடிவமைப்பாளர்கள் பொதுவாக தரவுத்தள தரவமைப்பின் காட் விதிகளைப் பின்பற்றுகிறார்கள். தரவாக்கத்தின் அதிகளவான கண்டிப்பான ஐந்து விதிகளை கோட் வரையறுத்தார். முழுமையாகச் சீராக்கப்பட்ட தரவுத்தள வடிவமைப்புகள் (அதாவது, கோட் விதிகள் ஐந்தையும் பூர்த்திசெய்பவை) பெரும்பாலும் வர்த்தக பரிமாற்றத்திலிருந்தான தகவல்களை பன்னிரண்டு தொடக்கம் நூறு வரையான அட்டவணைகளில் சேமிக்கும்படி செய்யும். தொடர்பான தரவுத்தளங்கள் இந்த அட்டவணைகளுக்கு இடையேயான தொடர்புகளை நிர்வகிப்பதில் திறனானவை. தரவுத்தளங்கள் மிகவும் வேகமான செருகல்/புதுப்பித்தல் செயல்திறனைக் கொண்டுள்ளன. ஏனெனில் ஒவ்வொரு பரிமாற்றம் நடக்கும்போதும் அந்த அட்டவணைகளிலுள்ள மிகச்சிறியளவு தரவுகள் மட்டுமே பாதிக்கப்படும். இறுதியாக, செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, பொதுவாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செயல்பாட்டு முறைகளிலிருந்து பழைய தரவுகள் நீக்கப்படுகின்றன.

தரவுகிடங்குகள் தரவு மீளப்பெறுதல் வேகத்துக்காக உகப்பாக்கப்படுகின்றன. தரவுக் கிடங்குகளிலுள்ள தரவுகள் பரிமாண-அடிப்படையான மாதிரி வழியாக அடிக்கடி சீர்குலைக்கப்படுகின்றன. அதோடு, தரவு மீளப்பெறுதலை வேகமாக்குவதற்காக, தரவுக் கிடங்கு தரவுகள் அவற்றின் மணியுருபோன்ற மற்றும் திரட்டு என அழைக்கப்படும் சுருக்கப்பட்ட வடிவங்களில் பல முறைகள் சேமிக்கப்படுகின்றன. தரவுக் கிடங்கு தரவுகள் செயல்பாட்டு முறைகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, செயல்பாட்டு முறைகளிலிருந்து தரவுகள் நீக்கப்பட்ட பின்னரும்கூட தரவுக் கிடங்கில் வைக்கப்படுகின்றன.

நிறுவனப் பயன்பாட்டின் வளர்ச்சி

தொகு

ஒப்பீட்டளவில் எளிதான தரவுக் கிடங்காக்க பயன்பாட்டுடனேயே நிறுவனங்கள் பொதுவாக தொடங்குகின்றன. பின்னர், அதிக நுட்பமான தரவுக் கிடங்காக்க பயன்பாடு உருவாகிறது. தரவுக் கிடங்கு பயன்பாட்டின் பின்வருகின்ற பொதுவான நிலைகள் கண்டறியப்படலாம்:

பின் தொடர் செயல்பாட்டுத் தரவுத்தளம்
இந்த ஆரம்பநிலைத் தரவுக் கிடங்குகள் ஒரு செயல்பாட்டு முறையிலிருந்து இன்னொரு சேவையகத்துக்கு தரவை எளிதாக நகலெடுப்பதால் உருவாக்கப்படுகிறது. நகலெடுக்கப்பட்ட தரவுகளுக்கு எதிராக அறிக்கையிடலின் செயலாக்க ஏற்றமானது செயல்பாட்டு முறையின் செயல்திறனின் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது.
பின் தொடர் தரவுக் கிடங்கு
இந்த நிலையிலுள்ள தரவுக் கிடங்குகள், செயல்பாட்டு முறைகளிலுள்ள தரவுகளிலிருந்து சீரான மூறையில் புதுப்பிக்கப்படுகின்றன. அறிக்கையிடலுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட தரவு அமைப்பில் தரவுக் கிடங்கு தரவு சேமிக்கப்படுகின்றது.
நிகழ் நேர தரவுக் கிடங்கு
இந்த நிலையிலுள்ள தரவுக் கிடங்குகள், செயல்பாட்டு முறையானது பரிமாற்றத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படுகின்றன(எ.கா. ஒரு ஆணை அல்லது ஒரு விநியோகம் அல்லது பதிவுசெய்தல்.)
ஒருங்கிணைந்த தரவுக் கிடங்கு
இந்த நிலையிலுள்ள தரவுக் கிடங்குகள், செயல்பாட்டு முறையானது பரிமாற்றத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படுகின்றன. செயல்பாட்டு முறைகளுக்கு மீண்டும் அனுப்பப்படுகின்ற பரிமாற்றங்களை தரவுக் கிடங்குகள் பின்னர் உருவாக்கும்.

நன்மைகள்

தொகு

தரவுக் கிடங்கு வழங்குகின்ற நன்மைகளில் சில பின்வருமாறு:[7][8]

  • தரவுகளின் மூலத்தைச் சாராமல் அனைத்து தரவு ஆர்வங்களுக்குமான பொதுவான தரவு மாதிரியை தரவுக் கிடங்கு வழங்கும். விற்பனை விவரப்பட்டியல்கள், ஆணை ரசீதுகள், பொதுவான பேரெட்டுக் கட்டணங்கள் போன்ற தகவல்களைப் பெறுவதற்குப் பல தரவு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை விட இது தகவல்களை எளிதாக அறிக்கையிட மற்றும் ஆய்வு செய்ய உதவும்.
  • தரவுக் கிடங்குக்குள் தரவை ஏற்ற முன்னர், இணக்கப்பாடற்ற தன்மைகள் அடையாளங் காணப்பட்டு தீர்க்கப்படுகின்றன. அறிக்கையிடல் மற்றும் ஆய்வை இது சிறப்பாக எளிதாக்குகிறது.
  • தரவுக் கிடங்கிலுள்ள தகவல் தரவுக் கிடங்கு பயனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆகவே மூல முறைத் தரவானது பின்னர் நீக்கப்படுகிறது என்றால் கூட, கிடங்கிலுள்ள தகவல்களை நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாகச் சேமிக்க முடியும்.
  • ஏனெனில், அவை செயல்பாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டவை, செயல்பாட்டு முறைகளின் வேகத்தைக் குறைக்காமல் தரவுக் கிடங்குகள் தரவு மீளப்பெறுதலை வழங்கும்.
  • தரவுக் கிடங்குகள் இணைப்பிலும் பணிபுரியக்கூடியன, ஆகவே செயல்பாட்டு வர்த்தகப் பயன்பாடுகளின், குறிப்பாக வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) முறைகளின் மதிப்பை மேம்படுத்தும்.
  • தரவுக் கிடங்குகள் போக்கு அறிக்கைகள் (எ.கா., கடந்த இரண்டு ஆண்டுகளில் குறித்த பகுதியில் மிகக் கூடுதலாக விற்பனையான பொருட்கள்), உண்மையான செயல்திறனை இலக்குகளுக்கு எதிராகக் காண்பிக்கும் விதிவிலக்கு அறிக்கைகள் போன்ற முடிவை ஆதரிக்கும் முறைப் பயன்பாடுகளுக்கு உதவும்.

குறைபாடுகள்

தொகு

தரவுக் கிடங்கைப் பயன்படுத்துவதில் குறைபாடுகளும் உள்ளன. அவை:

  • கட்டமைக்கப்படாத தரவுக்கான உகப்பான சூழலாக தரவுக் கிடங்குகள் இருப்பதில்லை.
  • ஏனெனில், தரவுகளைக் கட்டாயம் பிரித்தெடுத்து, மாற்றி தரவுக் கிடங்குக்குள் ஏற்ற வேண்டும், தரவுக் கிடங்கு தரவுகளில் தாமதம் என்னும் ஒரு கூறு உள்ளது.
  • அவற்றின் வாழ்க்கைக்காலம் செல்லச் செல்ல, தரவுக் கிடங்குகளுக்கு உயர் செலவுகள் வரலாம். பராமரிப்புச் செலவும் கூட அதிகமானது.
  • தரவுக் கிடங்குகள் ஒப்பீட்டளவில் விரைவாக காலாவதியாகி விடலாம். நிறுவனங்களுக்கு அதிக பொருத்தமற்ற தகவல்களை வழங்குவதிலும் செலவு ஏற்படுகிறது.
  • தரவுக் கிடங்குகளுக்கும் செயல்பாட்டு முறைகளுக்கும் இடையே பெரும்பாலும் தவறு நடக்ககூடிய சாத்தியம் உள்ளது. நகலாக்க, அதிக செலவான செயல்படும்தன்மை உருவாகக் கூடும். அல்லது, தரவுக் கிடங்கில் முன் தேதியிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் செயல்படுதன்மை, செயற்பாட்டு முறைகளிலும் மறுதலையாகவும் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

மாதிரி பயன்பாடுகள்

தொகு

சில பயன்பாடுகள் தரவுக் கிடங்காக்கமானது பின்வருவனவற்றுக்காக பயன்படுத்தப்படலாம்:

  • கடன் அட்டை கடையும் ஆய்வு
  • காப்புறுதி மோசடி ஆய்வு
  • அழைப்பு பதிவு ஆய்வு
  • சரக்கியல் மேலாண்மை

எதிர்காலம்

தொகு

எந்தவொரு தொழில்நுட்ப மாடம் போல, தரவுக் கிடங்காக்கமானது சந்தை ஏற்பைப் பெறாத புதுமைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.[9]

2009 ஆம் ஆண்டு கார்ட்னர் குரூப் அறிக்கையானது வர்த்தக அறிவுத்திறன்/தரவுக் கிடங்காக்க சந்தையில் இந்த விருத்திகளை முன்கூட்டியே கூறியது.[10]

  • 2012 ஆம் ஆண்டு வரை, தகவல்கள், செயலாக்கங்கள் மற்றும் கருவிகள் இல்லாத காரணத்தால், 5,000 உலக நிறுவனங்களில் 35 வீதத்துக்கும் அதிகமானவை தங்களது வர்த்தகம் மற்றும் சந்தைகளில் கொண்டுவரவேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து புத்திசாதுர்யமான முடிவெடுப்பதில் தோல்விகாணும்.
  • 2012 ஆம் ஆண்டு அளவில், வர்த்தக அறிவுத்திறனுக்கான மொத்த கணக்கறிக்கையின் 40 வீதத்தையாவது வர்த்தகப் பிரிவுகள் கட்டுப்படுத்தும்.
  • 2010 ஆம் ஆண்டு அளவில், 20 வீதமான நிறுவனங்களில் அவற்றின் அறிவுத்திறன் துறையின் தரமான ஒரு கூறாக சேவை ஒன்றாக மென்பொருள் வழியாக விநியோகிக்கப்பட்ட தொழில்துறைக்கு ஏற்ற ஆய்வு பயன்பாடு இருக்கும்.
  • 2009 ஆம் ஆண்டில், கூட்டான முடிவு எடுத்தல் என்பது புதிய தயாரிப்பு வகையாக உருவாகும். இது சமூக மென்பொருளை வர்த்தகம் அறிவுத்திறன் பணித்தள ஆற்றல்களுடன் ஒன்றுசேர்க்கும்.
  • 2012 ஆம் ஆண்டு அளவில், வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மூன்றில் ஒரு பகுதியான ஆய்வு ரீதியான பயன்பாடுகள் நன்கு தூளாக்கப்பட்ட பயன்பாட்டு மேஷ்அப்கள் வழியாக விநியோகிக்கப்படும்.

மேலும் பார்க்க

தொகு
  • கணக்கிடுதல் அறிவுத்திறன்
  • வணிக நுண்ணறிவு
  • வர்த்தக அறிவுத்திறன் கருவிகள்
  • தரவு ஒருங்கிணைப்பு
  • தரவுச் சந்தை
  • தரவு சேகரித்தல்
  • தரவு சேகரித்தல் முகவர்
  • தரவுக் கிடங்கு உபகரணம்
  • தரவுத்தள மேலாண்மை முறை(DBMS)
  • முடிவெடுத்தல் ஆதரவு அமைப்பு
  • நிறைவேற்று தகவல் முறைமை (EIS)
  • பிரித்தெடுத்தல், மாற்றுதல் மற்றும் ஏற்றுதல் (ETL)
  • முதன்மைத் தரவு மேலாண்மை (MDM)
  • தொடரறா ஆய்வுச் செயலாக்கம் (OLAP)
  • ஆன்லைன் பரிமாற்றச் செயலாக்கம்(OLTP)
  • செயல்பாட்டுத் தரவு தேக்கம்(ODS)
  • தரவு ஒட்டுதல்
  • ஸ்னோபிளேக் அமைப்பு முறைகள்
  • சேவை ஒன்றாக மென்பொருள் (Saas)
  • நட்சத்திர அமைப்பு முறைகள்
  • மெதுவாக மாறுகின்ற பரிமாணங்கள்

குறிப்புதவிகள்

தொகு
  1. [18] ^ இன்மோன், டபிள்யூ.ஹெச் தலைப்பு: தரவுக் கிடங்கு என்றால் என்ன? பிரிசம் சொல்யூஷன்ஸ். தொகுப்பு 1. (1995).
  2. "The Story So Far". 2002-04-15. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  3. 3.0 3.1 கிம்பால் 2002, பக்கம். 16
  4. கிம்பால் 2002, பக்கம். 310
  5. "The Bottom-Up Misnomer". 2003-09-17. Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 2008-11-05.
  6. 6.0 6.1 6.2 எரிக்ஸன் 2004, பக்கம். 28-29
  7. யாங், ஜுன். வேர்ஹவுஸ் இன்ஃபர்மேஷன் ப்ரோட்டோடைப் அட் ஸ்டான்ஃபோர்டு(WHIPS) . [1] ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஜூலை 7, 1998.
  8. கால்டீரா, சி. "டேட்டா வேர்ஹவுஸிங்- கண்சீட்டோஸ் இ மாடெலோஸ்". எடிக்காஸ் சிலாபோ. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-972-618-479-9
  9. பெண்ட்ஸ், நைஜல் மற்றும் பாஞ், கார்ட்ஸ்டன் "மிஸ்ஸிங் நெக்ஸ்ட் பிக் திங்ஸ்", http://www.olapreport.com/Faileddozen.htm
  10. "கார்ட்னர் ரிவீல்ஸ் ஃபைவ் பிஸினஸ் இண்டலியன்ஸ் ப்ரிடிக்ஷன்ஸ் ஃபார் 2009 அங் பியாண்ட்", http://www.gartner.com/it/page.jsp?id=856714 பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம்

கூடுதல் வாசிப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுக்_கிடங்கு&oldid=3688231" இலிருந்து மீள்விக்கப்பட்டது