தருமபுரி தொடருந்து நிலையம்

(தருமபுரி தொடர்வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தருமபுரி தொடருந்து நிலையம் (Dharmapuri railway station, நிலையக் குறியீடு:DPJ) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, தருமபுரி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின், பெங்களூர் தொடருந்து கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது தென்னக இரயில்வேயில் இருந்து பிரித்து அதனுடன் இணைக்கப்பட்டது ஆகும்.[1]

தருமபுரி
இந்திய தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்துரைசாமி கவுண்டர் தெரு, தருமபுரி, தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்12°07′33″N 78°09′15″E / 12.1258°N 78.1542°E / 12.1258; 78.1542
ஏற்றம்467 மீட்டர்கள் (1,532 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்மேற்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா நிறுத்தம், வாடகையுந்து நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுDPJ
மண்டலம்(கள்) தென்மேற்கு தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) பெங்களூர்
வரலாறு
திறக்கப்பட்டதுசனவரி 16, 1906; 118 ஆண்டுகள் முன்னர் (1906-01-16)
மறுநிர்மாணம்2011; 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2011)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
தருமபுரி is located in தமிழ் நாடு
தருமபுரி
தருமபுரி
தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள இடம்
தருமபுரி is located in இந்தியா
தருமபுரி
தருமபுரி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இருப்பிடம்

தொகு

இந்த தொடருந்து நிலையமானது, தருமபுரி நகரில் துரைசாமி கவுண்டர் தெருவில், மாவட்ட ஆட்சியர், நகர கடைவீதி, தமிழ்நாட்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை, வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அருகில் இரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது.

இந்த நிலையம் கடல் மட்டத்திலிருந்து 462 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. மேலும் நிலையமானது மரங்கள் சூழ்ந்த பசுமையான சூழலில் உள்ளது. இது ஓமலூர் சந்திப்பு - பெங்களூர் நகர இரயில் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பாதையில் செல்லும் தொடர்வண்டிகளுக்கான முக்கிய நிறுத்தமாக இது உள்ளது. தருமபுரி- மொராப்பூருக்கு இடையில் ஒரு புதிய பாதை அமைக்கப்படவிருக்கிறது, இது 36 கிலோமீட்டர் (22 மைல்) அளவு நீளமுடையது. இத்திட்டம் 2016-2017 இந்திய ரயில்வே பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7][8]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பெங்களூர் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தருமபுரி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[9][10][11][12]

வசதிகள்

தொகு
  • கணினி முன்பதிவு மையம்
  • ஐஆர்சிடிசி உணவுக் கடை
  • இரயில் பயணிகளுக்கான பெட்டக வசதி
  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
  • வாகனங்கள் நிறுத்துமிடம்
  • தானியங்கி பணப்பொறி மற்றும் தங்கும் இல்லம்
  • காத்திருப்போர் கூடம்
  • வண்டிகள் குறித்த எண்ணியல் தகவல் பலகை
  • இரயில் அறிவிப்பு சேவைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "தருமபுரி ரயில் நிலைய தகவல் திரையில் தமிழ் வருமா? தருமபுரி ரயில் நிலைய திரையில் கன்னட மொழியில் ஒளிபரப்பப்படும் வாசகங்கள்". தினமணி (27 சூலை, 2016)
  2. "தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை: தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகியது; அன்புமணி மகிழ்ச்சி". தி இந்து தமிழ் (05 பிப்ரவரி, 2019)
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  7. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  8. https://www.youtube.com/watch?v=nh003oifc3o
  9. https://www.thehindu.com/news/cities/bangalore/south-western-railway-to-redevelop-15-railway-stations-in-bengaluru-division/article67885105.ece
  10. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Jan/06/tns-dharmapuri-jn-to-get-rs-15-cr-facelift-under-amrit-bharat-station-scheme-2648261.html
  11. https://x.com/drmsbc/status/1721940694514725208?lang=en
  12. https://www.etvbharat.com/ta/!state/mp-senthilkumar-speech-about-dharmapuri-district-railway-project-tns24022604129

வெளி இணைப்புகள்

தொகு