தர்மராஜ் சேரலாதன்

இந்திய கபடி விளையாட்டு வீரர் | கள்ளர் குலத்தில் பிறந்தவர்

தர்மராஜ் சேரலாதன் (Dharmaraj Cheralathan, பிறப்பு: ஏப்ரல் 21, 1975) ஒரு இந்திய கபடி வீரர், 2019 ஆம் ஆண்டின் விவோ புரோ கபடி லீக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி சார்பாக விளையாடுகிறார். 2016இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினராக இருந்தார். “அண்ணா” என்ற புனைபெயர் கொண்ட சேரலாதன், சீசன் 4இல் பாட்னா பைரேட்ஸ் அணியில், புரோ கபடி லீக்கில் கலந்து கொண்டார். மேலும் விவோ புரோ கபடி வரலாற்றில் அதிக முறை எதிரணி வீரர்களை பிடித்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் வலது மற்றும் இடது மூலையில் இருந்து விளையாடும் திறன் கொண்டவராக அறியப்படுகிறார். சேரலாதன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விளையாடிய அனுபவம் உள்ளது.

தர்மராஜ் சேரலாதன்
தனிநபர் தகவல்
முழு பெயர்தர்மராஜ் சேரலாதன்
சுட்டுப் பெயர்(கள்)அண்ணா
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
பிறப்பு21 ஏப்ரல் 1975 (1975-04-21) (அகவை 49)
திருச்சினம்பூண்டி, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், தமிழ்நாடு
தொழில்கபாடி வீரர்
ஆண்டுகள் செயலில்1989 – தற்போது வரை
உயரம்175 cm (5 அடி 9 அங்)
எடை78.6 கிலோகிராம்கள் (173 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகபடி
Leagueபுரோ கபாடி லீக்
பதக்கத் தகவல்கள்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சேரலாதன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள திருச்சினம்பூண்டி ஆகும். இவரின் தந்தை தர்மராஜ் சோழகர், தாய் ராஜலட்சுமி ஆவார்கள், ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.[1] அவரது சகோதரரும் விவசாயத்தினையே, முதனமைத் தொழிலாக செய்து வருகிறார். இவரும் தனது குடும்பத்தினரும் தங்களின் பெரும்பாலான நாட்களை வயல்களில் வேலை செய்து கழித்தனர். சேரலாதனின் சகோதரர் டி. கோபுவும் புரோ கபடி லீக்கில் விளையாடியுள்ளார் மற்றும் சீசன் 6இல் தமிழ் தலைவாஸ் அணியின் களத் தடுப்பு வீரராக இருந்தார்.[2]

கபடி தொழில்

தொகு

புரோ கபடி தொழில்

பருவம் 1

தொகு

தொடக்க பருவத்தில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடிய சேரலாதன் 39 நிறுமக் கைப்பற்று புள்ளிகளையும் 13 தடுப்பு புள்ளிகளையும் பெற்றார்.[3] இவரின் தடுப்பு புள்ளிகளின் சராசரி 56.52% விகிதமாக இருந்தது[4]

பருவம் 2

தொகு

42 தடுப்பு புள்ளிகளுடன், இரண்டாவது பருவத்தில் பெங்களூரு புல்ஸ் பாதுகாப்புக்கு சேரலதன் தலைமை தாங்கினார். அவர் 19 கைப்பற்று புள்ளிகளுடன் தாக்குதலில் பங்களித்தார்.[3] அவரது தடுப்பு புள்ளிகளின் வீதம் 61.76% என்பதன் மூலம் இவர் சிறந்த கைப்பற்று வீரராக கருதப்படுகிறார். இந்தப் பருவத்தில் இவர் சிறந்த கைப்பற்று வீரராகக் கருதப்பட்டார்.[4]

பருவம் 3

தொகு

இவரை அடுத்த பருவத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது.ஐதராபாத்தில் இருந்து 31 கைப்பற்று புள்ளிகளை [3] பெற்றார். இவரது களத்தடுப்பு விகிதத்தில் இந்தப் பருவத்தில் சிறிது சரிவு இருந்தபோதிலும், சேரலாதன் 50% க்கும் அதிகமான தடுப்பு, வீதத்தை சராசரியாகக் கொண்டிருந்தார்.[4]

பருவம் 4

தொகு

பாட்னா பைரேட்ஸ் நான்காவது பருவத்தில் இவரை 29 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் அந்த அணியின் தலைவராகவும் நியமித்தது.[2] அவர் 39 கைப்பற்றுப் புள்ளிகளைப் பெற்றார் மற்றும் பைரேட்ஸ் அதை பின் லீக் பட்டங்களை வென்றது. இந்தப் பருவத்தில் அதிக களத்தடுப்பு வீரர்களைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.[3]

பருவம் 5

தொகு

ஐந்தாவது பருவத்தில் இவர் புனே அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐந்தாவது பருவத்தில் இவர் மொத்தமாக 25 தடுப்புப் புள்ளிகளைப் பெற்றார்.

பருவம் 6

தொகு

2018 ஆம் ஆண்டில் புரோ கபடி லீக் தொடரில் இவரை யு மும்பா அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. யு மும்பாவில் சேர்ந்த பிறகு, சேரலாதன் நாற்பது தடுப்பு புள்ளிகளைப் பெற்றார். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜியண்ட்ஸை எதிர்த்து, யு மும்பா வெற்றி பெற்றபோது அவர் 57.97% கைப்பற்று ஸ்ட்ரைக் வீதத்தைக் கொண்டிருந்தார்.[5]

சான்றுகள்

தொகு
  1. "இந்திய கபடி அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்". tamil.samayam.com.
  2. 2.0 2.1 Sportskeeda, Sportskeeda. "Dharmaraj Cheralathan". Sportskeeda. Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 Cheralatharan, Dharmaraj. "stats". prokabaddi. prokabaddi. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
  4. 4.0 4.1 4.2 Cheralathan, Dharmaraj. "dharmaraj-cheralathan-playerprofile". prokabaddi. prokabaddi. Archived from the original on 27 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. prokabaddi, prokabaddi. "dominant-defence-sees-u-mumba-secure-first-victory-over-gujarat-fortunegiants". prokabaddi. prokabaddi. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மராஜ்_சேரலாதன்&oldid=4105078" இலிருந்து மீள்விக்கப்பட்டது