தலைநகர ஆளுநரகம், பகுரைன்
தலைநகர கவர்னரேட் (Capital Governorate, Bahrain, அரபு மொழி: محافظة العاصمة, romanized: Muḥāfaẓat al-ʿĀṣimah ) என்பது பஹ்ரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தில் பஹ்ரைனின் தலைநகரான மனாமாவும் அடங்கும்.
தலைநகர கவர்னரேட்
محافظة العاصمة Muḥāfaẓat al-ʿĀṣimah | |
---|---|
பஹ்ரைனில் தலைநகர ஆளுநரகத்தின் அமைவிடம் | |
நாடு | பகுரைன் |
அரசு | |
• ஆளுநர் | அப்துல் ரஹ்மான் அல் கலீஃபா இடையே ஹிஷாம் |
மக்கள்தொகை (2010[1]) | |
• மொத்தம் | 3,29,510 |
நேர வலயம் | ஒசநே+3 (Arabia Standard Time) |
இணையதளம் | www.capital.gov.bh |
உருவாக்கம்
தொகுஇந்த ஆளுநரகமானது 2020 சூலையில் அரச ஆணையால் உருவாக்கப்பட்டது. தற்போதைய ஆளுநரகமானது மனாமா, ஜித் அலி, ராஸ் ரம்மன் நகராட்சிகள் மற்றும் ஜிட் ஹாஃப்சின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். [2]
புள்ளிவிவரங்கள்
தொகு2010 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தலைநகர் ஆளுநரகத்தில் 329,510 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 261,921 பேர் பஹ்ரைன் அல்லாத குடிமக்கள், 67,589 பஹ்ரைன் பிரஜைகள் ஆவர். [3] தலைநகர ஆளுநரகத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகள் 34,000 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகளாகும். அடுத்த இரண்டாவது இடத்தில் தனி வீடுகள் என 7,284 வீடுகள் உள்ளன. [4]
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Decree Law No. (17) of 2002" (PDF). Capital Governorate. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
- ↑ "Population by Governorate" (PDF). Census 2010. Archived from the original (PDF) on 2013-10-25. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
- ↑ "Census results". Census2010. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.